Monday 17 August 2015


பெரம்பலூர் மாவட்டம் வறட்சியான மாவட்டம் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டதன் காரணமாக, விவசாயத்திற்காக  கிணறு அமைப்பதற்கு கூட தேசிய வங்கிகளில் கடன் தரப்படாத கட்டுப்பாடு உள்ளது. சில மாதங்களுக்கு முன்  பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் தங்கள் வயலில் கிணறு அமைப்பதற்கு முன் உள்ளாட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும் என்பதோடு அதற்காக ஆயிரக்கணக்கில் அரசுக்கு பணம் கட்ட வேண்டும் என்ற அரசானை வெளியிடப்பட்டது நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.
இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்க அடிப்படையான காரணம் பெரம்பலூர் மாவட்டம் நிலத்தடி நீர் குறைவான மாவட்டம் என்பதனால்தான். எனவே நிலத்தடிநீரை   பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடும் தான் இவ்வவளவு கட்டுப்பாடும் விதிக்கப்படுகிறது.
அனால் இதே பெரம்பலூர் மாவட்டத்தில் எவ்வித கட்டுப்படும் இல்லாமல் கல் குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகத்தாலும், தமிழக அரசாலும், ஏன் சென்னை உயர்நீதி மன்றத்தாலும் அனுமதிக்கப்படுகிறது. நிலத்தடி நீர் ஆதாரம் குறைவான ஒரு மாவட்டத்தில் விவசாயத்திற்காக கிணறு அமைக்க பல கட்டுப்பாடுகளை விதிக்கும் அரசு , இதே பெரம்பலூர் மாவட்டத்தில் பல நூறு கல் குவாரிகளை அனுமதித்திருக்கிறது .
இக்கல் குவாரிகளில் பல நூறு அடி ஆழத்திற்கு கிரானைட் கற்கள் தொண்டப்படுவதொடு மட்டுமலாமல். கற்களை வெட்டி எடுக்கும்போது  ஊறும் நீரை வீணாக ஓடைகளில் சாலையோரங்களிலும் விட்டுவிடுகிறார்கள். இவ்வாறு பல நூறு அடி ஆழத்திற்கு தோண்டப்படும் குவாரிகளால் அருகிலுள்ள விவாசாய கிணறுகள் வற்றுவதோடு, அல்லாமல் கிராம ஊராட்சிகளால் குடிநீருக்கென அமைக்கப்பட்ட கிணறுகள் கூட வற்றுவதன் காரணமாக கோடை காலங்களில் கடும் குடிநீர் பஞ்சம் சில வருடங்களாக அதிகரித்து வருவது நாம் அறிந்தது.
சரி, கை விடப்பட்ட குவாரிகளில் கிடைக்கும் நீரையாவது கோடை காலங்களில் மக்களின் குடிநீர் பஞ்சத்தை போக்க பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்த்தால் அதனையும் தனியார் கல்வி நிறுவனங்கள் களவாட , மாவட்ட நிர்வாகம் வேடிக்கை பார்க்கும் போக்குதான் உள்ளது. இதற்க்கு ஒரு சிறந்த உதாரணம் முருக்கன் குடி கைகாட்டி அருகிலுள்ள கல்குவாரி குடிநீர் தனலெட்சுமி ஸ்ரீனிவாசன் கல்வி நிறுவனத்திற்கு களவாட அனுமதிக்கப்பட்டது நம்மில் பலருக்கு தெரிந்திருக்கலாம்.
இது தொடர்பான சமீபத்திய உதாரணம் N.புதூர்…..
பெரம்பலூர் மாவட்டம் , வேப்பந்தட்டை வட்டத்தில் நெயகுப்பை பஞ்சாயத்தின் கீழ் உள்ள ஒரு குக்கிராமம் தான் N.புதூர். இங்கு விவசாயம் என்பது வனம் பார்த்த பூமியாக மட்டுமே உள்ளது. வசதியான சிலர் கிணறு வெட்டி நன்செய் விவசாயம் செய்துவருகின்றனர். கோடை காலமானால் குடிநீருக்கு கூட பஞ்சம் ஏற்படும் பெரம்பலூர் மாவட்டத்தின் பல கிராமங்களில் N.புதூரும் ஒன்று.
சில நூறு மக்களை கொண்ட இந்த கிராமத்தில் இருந்து சுமார் 350 அடி தொலைவில் கல்குவாரி அமைந்துள்ளது. இதில் சுமார் இருநூற்று ஐம்பது அடி ஆழத்திற்கு கற்கள் வேட்டிஎடுக்கப்பட்டதன் காரணமாக அருகிலுள்ள N.புதூர் கிராமத்தில் கோடை காலங்களில் கடும் குடிநீர் வறட்சி ஏற்பட்டதோடு விவசாய கிணறுகளும் வற்றிப்போய் ஊரையே காலி செய்யும் நிலை வந்ததன் காரணமாக மக்கள் குவாரியை மூட வலியுறுத்தினர். இதன் காரணமாக 5 வருடங்களுக்கு முன் மூடப்பட்டது.
அனால் கடந்த சில நாட்களாக மீண்டும் குவாரியிலுள்ள நீரை மின் மோட்டார் கொண்டு வெளியேற்றும் பனி நடைபெற்று வருகிறது. கிராம மக்களால் மாவட்ட ஆட்சியரிலிருந்து முதலமைச்சர் வரை மனு போட்டு பார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் கல்குவாரி வேலை ஜரூராக நடைபெற்றுவருகிறது. சுமார் 250 அடி தொலைவில்தான் குழந்தைகளுக்கான ஆரம்ப பாட சாலை ஒன்று உள்ளது. எந்த நேரம் தலையில் கல் விழுமோ என்ற பயத்தில் மாணவர்கள் கல்வி பயிலும் சூழ்நிலை, மக்களோ அடுத்து என்ன போராட்டம் செய்யலாம் என்ற மன நிலையோடு இருக்கிறார்கள். மாவட்டம் நிர்வாகம் கருணை காட்டுமா…? பொறுத்திருந்து பார்ப்போம்.



0 comments:

Post a Comment