Saturday 20 December 2014


முஸ்லிம் இளைஞர்களைத் திருமணம் செய்துகொள்வதற்காக மட்டும் வேறு மதப் பெண்கள் முஸ்லி மாக மதம் மாறினால் அது செல்லாது என அலாகாபாத் உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 5 தம்பதி கள், திருமணமான தம்பதி என்ற முறையில் பாதுகாப்பு கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இத்தம்பதி களில் ஆண்கள் முஸ்லிம்கள், பெண் கள் இந்து மதத்திலிருந்து திருமணத்துக்காக முஸ்லிமாக மாறியவர்கள்.
வழக்கை விசாரித்த நீதிபதி சூர்ய பிரகாஷ் கேசர்வாணி இம்மனுக் களைத் தள்ளுபடி செய்து தீர்ப் பளித்தார். தீர்ப்பில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்காட்டிய அவர், “இஸ்லாம் மதத்தின் மீதான உண்மையான நம்பிக்கையின்றி, திருமணத்துக்காக மட்டும் முஸ்லி மாக மதம் மாறுவது செல்லாது” எனக் குறிப்பிட்டார். 


கோவையை சேர்ந்த தொழில் அதிபரின் மகள் சினேகா (வயது 24). இவர் எம்.பி.ஏ படித்து வந்தார். இந்த நிலையில் இவருக்கும், கோவையில் நடனப்பயிற்சி மாஸ்டராக இருக்கும் முகமது முக்தருக்கும் காதல் மலர்ந்தது. இந்த காதல் விவகாரம் சினேகாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் காதலை கைவிடும்படி வற்புறுத்தினர்.
இந்த நிலையில் சினேகாவும், முகமது முக்தரும் வீட்டை விட்டு வெளியேறி கோவை காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் அதன் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் முன்னிலையில் மாலை மாற்றி கலப்புதிருமணம் செய்து கொண்டனர். இதனால் பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
தனது மகளை காணவில்லை என்று சினேகாவின் தந்தை கோவை ரத்தினபுரி போலீசில் புகார் செய்து இருந்தார். அதன் பேரில் சினேகாவை போலீசார் நேற்று கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
முஸ்லிம் அமைப்பினர் இதற்கிடையில் அந்த பெண்ணை பெற்றோருடன் ஒப்படைக்க 3 முதல் 5 கோடி பேரம் பேசி முடித்ததாக செய்தி தாள்களில் செய்திகள் வெளியாகி உள்ளது..
நேற்றைய செய்தி..

காதல் திருமணம்: கும்பலுக்கு ரூ.3 கோடி கொடுத்து மீட்கப்பட்ட தொழில் அதிபரின் மகள் மீண்டும் மாயம்
கோவை,டிச.18–

கோவையை சேர்ந்த தொழில் அதிபரின் மகள் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).24 வயது நிரம்பிய இந்த பெண் எம்.பி.ஏ. படித்து வருகிறார். இவருக்கும் கோவையில் நடனப்பயிற்சி மாஸ்டராக இருந்த வாலிபர் மஜித் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் காதல் மலர்ந்தது.
இந்த காதல் விவகாரம் ராணியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் கொதித்து எழுந்தனர்.
இதைத் தொடர்ந்து கடந்த 3.12.2014 அன்று பெற்றோர் எதிர்ப்பை மீறி பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
மகளை செல்போனில் தொடர்பு கொண்ட ராணியின் பெற்றோர் காதலனை உதறி தள்ளிவிட்டு தங்களுடன் வருமாறு கூறினர். ஆனால் அதை ராணி ஏற்றுக்கொள்ளவில்லை.
காதல் கணவரை கைவிட்டு வரமறுத்தார். ஆனால் மகளை எப்படியும் பிரித்து தங்களுடன் கொண்டு வர வேண்டும் என்று அவரது பெற்றோர் உறுதியாக இருந்தனர். அதற்கான நடவடிக்கையிலும் அவர்கள் இறங்கினர்.
இதை அறிந்த ராணியும், மஜீத்தும் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.
காதல் ஜோடி கமிஷனர் அலுவலகத்தில் இருப்பதை அறிந்து ஒரு கும்பல் அங்கு வந்தது. காதல் ஜோடியிடம் பேசிய அந்த கும்பல் தாங்கள் உரிய பாதுகாப்பு அளிப்பதாக நம்பிக்கை தெரிவித்தனர். இதனை காதல் ஜோடியும் நம்பியது. அந்த கும்பலுடன் அவர்கள் சென்றனர்.
மஜீத்தையும், ராணியையும் ஒரு வீட்டில் அந்த கும்பல் தங்க வைத்தது. ராணியின் குடும்ப சூழ்நிலையை அறிந்த அந்த கும்பல் பணம் பறிக்கும் முயற்சியில் இறங்கியது. “உங்கள் மகள் எங்கள் வசம் தான் இருக்கிறாள். எங்களுக்கு ரூ.5 கோடி கொடுங்கள். உங்கள் மகளை உங்களிடம் பத்திரமாக ஒப்படைக்கிறோம்” என்று பேரம் பேசினர்.
மகளை எப்படியும் பிரித்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ராணியின் தந்தை ரூ.3 கோடி கொடுக்க தயாரானார். இந்த விவகாரம் ரகசியமாக காதல் ஜோடிக்கு தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த கும்பல் தங்க வைத்திருந்த இடத்தில் இருந்து தப்பித்து செல்ல முயன்றனர்.
அப்போது அந்த கும்பல் மஜீத்தை தாக்கி பேப்பரில் கையெழுத்து பெற்றது. பின்னர் ரூ.3 கோடி பெற்றுக் கொண்டு ராணியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் வெளிப்படையாக வெளியே தெரியாவிட்டாலும் கோவையின் முக்கிய பிரமுகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த ராணி நேற்றிரவு 8.15 மணிக்கு பிறகு திடீரென மாயமானார். பதறிப்போன ராணியின் பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதைத்தொடர்ந்து அவர்கள் மகள் மாயமானது குறித்து ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ராணியை தேடி வருகிறார்கள். ராணி மீண்டும் காதலனுடன் ஓட்டம் பிடித்தாரா? அல்லது வேறு யாராவது கடத்தி சென்று விட்டனரா? அல்லது வேறு ஏதும் சம்பவம் நடந்ததா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இன்றைய தினமலர் செய்தி:


நன்றி- https://www.facebook.com/BjpCoimbatoreThondamuthurMandal/posts/390368464453311:0

Tuesday 16 December 2014


             தானத்தில் சிறந்தது அன்னதானம் என்போம். அக்காலத்தில் அன்னசத்திரங்கள் கட்டி வழிப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு உணவளித்த பாரம்பரியம் மிக்கவர்கள் தமிழர்கள் என்கிறது தமிழர் வரலாறு. ஆனால் குடிநீரும் விலைக்கு வாங்க வேண்டிய இன்றைய நவீன உலகில் அன்னதானத்தின் நிலை பற்றி சொல்வதற்கில்லை.

ஆனால் ஆச்சர்யமாக கிட்டதட்ட அன்னதானம் என்று சொல்வதற்கு ஈடாக மதுரையில் ஒரு ஹோட்டலில் வெறும் 10 ரூபாய்க்கு இன்றும் உணவளிக்கப்படுகிறது என்பது ஆச்சர்யமான செய்தி.

இன்றைய பாஸ்ட் புட் காலத்தில் குடும்பத்துடன் சாதாரண ஒரு ஹோட்டலுக்கு சென்றாலும் செலவாகும் தொகை நிச்சயம் உங் கள் மாத சம்பளத்தில் ஒரு கணிசமான பங்காகத்தான் இருக்கும்.  அப்படிப்பட்ட சூழலில் எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கிறது இந்த 10 ரூபாய் சாப்பாடு. 

மதுரை  அண்ணா பேருந்து நிலையத்தில் அமைந்திருக்கும் இந்த கடையில் எப்போதும் கூட்டம் அலை மோதியபடியே இருக்கிறது. கல்லாப்பெட்டியிலும் கஸ்டமர் கவனிப்பிலும் பாதிப்பாதி கவனமாக பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் கடையின் உரிமையாளர் எஸ்.ராம்சேர்வைக்கு வயது 85. மதிய உணவு இடைவேளையில் கூட்டம் குறைந்திருந்த ஒரு நேரத்தில் அவரிடம் பேச்சு கொடுத்தோம்.

“ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தேன். அதிகம் படிக்காததால் ஆரம்பத்தில் கூலி வேலைதான் பார்த்தேன். போதிய வருமானமில்லாத நிலையில் கல்யாணம் நடந்தது. அதன்பின் அந்த சம்பளம் கொஞ்சமும் கட்டவில்லை. மனைவியோடு கலந்து பேசினேன். எதாவது ஒரு தொழிலை செய்யனும். அது மனதுக்கு திருப்தியானதாகவும் இருக்கணும் என முடிவு செஞ்சேன். வறுமையான குடும்பத்தில் பிறந்ததால் பலநாட்கள் பட்டினி கிடந்திருக்கேன்.

என்னை போல் எத்தனை பேர் உணவுக்கு கஷ்டபடுகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கும் எதாவது செய்யவேண்டும் என்று கூறியதை என் மனைவி ஏற்றுக்கொண்டாள்.

பொருளாதாரத்தால் வாழ்க்கை நிலை உயர்த்தலாம் என்ற நிலையிலும் என் யோசனையை என் மனைவி எந்த வாதமுமின்றி ஏற்றுக்கொண்டதற்காக அவளுக்கு தான் நான் நன்றி சொல்லவேண்டும். 1967 ஆம் ஆண்டு சிறியதாக கடையாகத் துவக்கினேன்.


முதலாளி தொழிலாளி ரெண்டுமே நானும் என் மனைவியும் தான். ஆரம்பத்தில் 1.25 ரூபாய்க்கு சாப்பாடு கொடுத்தோம்.  விலை மலிவாக இருந்ததால் அரசு ஊழியர்களும், கல்லூரி மாணவர்களும் எங்களுக்கு நிரந்தர வாடிக்கையாளர்களானார்கள்.

வாடிக்கையாளர்கள் இந்த விலையில் திருப்தியடைந்ததால் அவர்கள் மகிழ்ச்சியை நீட்டிக்க எந்தக் காலத்திலும் கையை கடிக்கும் விலையை நிர்ணயிக்க கூடாது என்று உறுதி எடுத்துக்கொண்டேன். இன்று வரை கடைபிடித்தும் வருகிறேன். பல சமயங்களில் இந்த பணத்தையும் தர இயலாதவர்களிடம் என் மனைவி காசு வாங்க மாட்டாள்.

“குறைவான தொகைதானே அதையும் ஏன் இலவசமாக தரவேண்டும்” என நான் எப்போதாவது கூறினாலும் அவள் நிறுத்திக்கொள்ளமாட்டாள். இப்போது அவள் முடியாமல் இருக்கிறாள். அதனால் யாராவது  வந்து காசு இல்லை என்று சொன்னாலும் கூட சாப்பாடு போட்டு அனுப்புவேன். மலிவான விலை இருக்கவேண்டும் என்பதற்காக தரம் குறைந்த அரிசியை பயன்படுத்துவதில்லை. பொன்னி அரிசி மட்டுமே பயன்படுத்துகிறேன். மற்ற ஹோட்டல்களுக்கு ஈடாக கூட்டு ரசம் மோர் ஊறுகாய் என ருசியான உணவையே செய்து கொடுக்கிறேன்” என்கிறார் முகத்தில் பெருமிதம் படர.
“நான் வள்ளலாரின் பக்தன். அவர் சொன்னபடியே தான் செய்கிறேன். அன்னதானம் செய்வது மிகச் சிறப்பானது என்றாலும் என்னிடம் அந்தளவு பணம் இல்லை. அதனால் என் மனதிருப்திக்கு விலை குறைவாகவும், இலவசமாகவும் உணவு தருகிறேன். போதிய வருமானம் இல்லை என்றாலும் மனதுக்கு திருப்தி இருக்கிறது ” என்று சொல்லும்போது விவரிக்கமுடியாத மகிழ்ச்சி ராம்சேர்வையின் முகத்தில்.
இந்த கடையில் காலை 4 இட்லி, பொங்கல், தோசை-2 , மதியம் சைவ சாப்பாடு எதுவாக இருந்தாலும் 10 ரூபாய் தான். இந்த விலையால் பலர் ஆர்டர் தந்து வறியவர்கள் மற்றும் முதியவர்களுக்கு தானம் கொடுக்கச் சொல்வர். அதையும் தவிர்க்காமல் செய்கிறார் ராம்சேர்வை.

உலகநாதன் என்ற வாடிக்கையாளர்,  “1986 லிருந்து சாப்பிட்டு வருகிறேன். சாதாரண ஓட்டலுக்கு சென்றாலும் பாக்கெட்டை பதம் பார்த்துவிடும் அங்குள்ள உணவுகளின் விலைப்பட்டியல். ஆனால் இத்தனை வருடங்களாக சாப்பிட்டும் எனக்கு இந்த விலை ஒரு செலவாகவே தெரியவில்லை.

உணவும் தரமாக இருப்பது ஆச்சர்யம் தருகிறது. அசைவ ஹோட்டல் என்றால் சாதாரணமாக ஒரு பிரியாணி குறைந்தது 200 ரூபாய். இங்கு அந்த பணத்தில் 6 பேர் கொண்ட ஒரு குடும்பம் 3 வேளை உணவு சாப்பிடலாம். அதுவும் இங்கே வயிறு நிறைய மன திருப்தியுடன்” என்றபடி ஒற்றை 10 ரூபாய் தாளுடன் கல்லாவை நோக்கி நடக்கிறார்.

வாழ்க்கை முழுதும் படிப்பவர்கள் பலபேர். ஆனால் வாழ்க்கையையே படிப்பவர்கள் மிகச் சிலர். அந்த சிலரில் ராம்சேர்வையும் ஒருவர். தன் உழைப்பையும் முதலீட்டையும் முகம் தெரியாத மனிதர்களுக்காகவும் செலவிடும் ராம்சேர்வை போன்றவர்கள்தான் மனிதநேயம் என்ற ஒற்றை வார்த்தையின் மீது இன்னமும் நம்பிக்கை கொள்ள காரணமாகிறார்கள்.

வெறும் பாராட்டுக்களால் அவருக்கு நமது மகிழ்ச்சியை தெரிவிக்காமல் அவரைப்பின்பற்றி நாமும் நம் வாழ்வில் மனிதநேயத்தை பின்பற்றுவோம்.

-விகடன்.

பெரம்பலூர்- குரும் பலூரில் நடந்த சனி பெயர்ச்சிவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பரிகாரம் செய்தனர்.

பெரம்பலூர்

பெரம்பலூரில் உள்ள ஸ்ரீஅகிலாண்டேசுவரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு சனி பெயர்ச்சி அடைந்ததை யொட்டி சனிப்பெயர்ச்சி விழா நடந்தது.

இதனை முன்னிட்டு மதியம் சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆரா தனைகளும், மகாதீப ஆரா தனையும் நடந் தது.

நிகழ்ச்சி ஏற்பாடுகள் கோவில் செயல் அலுவலர் ராஜேந்திரன் முன்னிலையில் நடந்தது. பூஜைகளை திருச் செங்கோடு சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் கோவில் அர்ச்சகர் கவுரி சங்கர் மற்றும் சிவாச்சாரி யார்கள் நடத்தி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் திருப்பணிகளை மேற்கொள் ளும் தர்மபரிபாலன சங்க பொருளாளர் ராமலிங்கம், முன்னாள் அறங்கா வலர் குழு உறுப்பினர் வைத்தீஸ் வரன், சாய்சங்கீத் ரவி, வள்ளி ராஜேந்திரன், கணேசன் மற்றும் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு சனிபெயர்ச்சியையொட்டி பரிகாரம் செய்து கொண் டனர்.


கச்சேரி பிள்ளையார் கோவில்

பெரம்பலூர் தாலுகா அலுவலக சாலையில் உள்ள கச்சேரி பிள்ளையார் கோவி லில் சனிபெயர்ச்சி விழாவை முன்னிட்டு மதியம் வினாயகர் பூஜை, கலசபூஜை, திரவிய ஹோமம், மூலவருக்கு அபிஷே கம் மற்றும் கலச அபிஷேகம் மகாதீப ஆரா தனை நடந் தது.

பூஜைகளை கோவில் அர்ச்சகர் சஞ்சீவி மற்றும் பிரசாத் செய்து வைத்தனர். இதில் திரளான பக்தர் கள் கலந்து கொண்டனர்.

குரும்பலூர் பஞ்சநதீஸ்வரர் கோவில்

பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில் உள்ள தர்ம சம்சவர்த்தினி சமேத பஞ்ச நதீஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சியை முன்னிட்டு விநாயகர் வழிபாடு, கலச பூஜை நவக்கிரக ஹோமபூஜை பூர்ணாகுதி மகாதீப ஆரா தனை நடந்தது.

இதில் குரும்பலூர் பேரூ ராட்சி, பாளையம், மேட்டாங் காடு, ஈச்சம்பட்டி பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். பூஜை களை சிவசுப்ரமணிய சிவம் நடத்திவைத்தார். விழா ஏற் பாடுகளை கிருத்திகை விழாக் குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில்

ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் காமாட்சியம் மன் உடனுறை ஏகாம் பரேஸ்வரர் கோவிலில் சனி பகவானுக்கு மகா அபிஷே கத்துடன் தீபாரதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடை பெற்றது.

சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண் டனர். சனிபகவானால் பாதிக்கப்படும் ராசிக¢காரர் களுக்கு சிறப்பு பரிகார பூஜைகள் மற்றும் வழிபாட் டிற்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதில் செட்டிகுளம், பொம் மனப்பாடி, சத்த¤ரமனை, வேலூர், இரூர், பாடாலூர், நாரணமங்கலம், மருதடி, குரூர், புதுவயலூர், நக்கசேலம், மாவலிங்கை, நாட்டார்மங் கலம், கூத்தனூர், ஆலத் தூர்கேட், உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பு மற்றும் பரிகார பூஜை கள் செய்து வழிபாடு நடத் தினர்.

செய்தி-தினத்தந்தி., பட உதவி- வசந்தஜீவா.

பெரம்பலூரில் மார்க்கெட் தெருவில் உள்ள கலாம்ஸ் பயிற்சி நிறுவனம் வினய் கல்வி அறக்கட்டளையின்கீழ் இயங்கிவருகிறது. இந்த அறக் கட்டளையின்கீழ் தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் கல்வி மற்றும் தகவல்மையம் தொடக்கவிழா கலாம்ஸ் இயக்குனர் பாக்யராஜ் தலை மையில் நடந்தது. அரிமா சங்கத்தின் மாவட்ட ஆலோச கர் ராஜாராம் தமிழ்ப்பல்கலைக் கழக கல்வி மற்றும் தகவல்மையத்தை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத் தார்.

இந்த நிகழ்ச்சியில் ஐ.ஜே.கே. மாவட்டத்தலைவர் அசோ கன், அரிமா மாவட்ட தலை வர்கள் இமயவரம்பன், பாடா லூர் மதியழகன், செந்தூர் சுகுமார், வட்டாரத் தலைவர் விஷால் சரவணன், பெரம்ப லூர் சங்கத்தலைவர் முத்துக் குமார், துணைத் தலைவர் ஒஜீர், கட்டிட வல்லுனர்கள் சிவராஜ், மோகன்ராஜ், பெரி யார் தொண்டர் லட்சுமணன், எஸ்.எஸ். பல்பொருள் அங்காடி சென்னன், அன்பு சபியுல்லா, நெற்குணம் ர«¢மஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

-தினத்தந்தி...
கல்லாற்று நீர்த்தேக்கம்.

பெரம்பலூர் மாவட் டத்தில் போதிய பருவ மழை இல்லாததால், காட்டாறுகளில் நீர்வரத்து இன்றி பெரம்பலூர்-கடலூர் மாவட்டங்களை இணைக்கும் வெள்ளாறு நீர்த்தேக்கம் வறண்டு போனது.

வறட்சி மாவட்டம்

தமிழ்நாட்டிலேயே வறட்சி யான மாவட்டமான பெரம்ப லூர் மாவட்டம் கரிசல் மண்பூமியை பெரும்பாலும் கொண்டதாகும்.தமிழகத் திலேயே பருத்திவிளைச்சலில் முதன்மை மாவட்டமாக திகழ்ந்த பெரம்பலூர் மாவட் டம் தற்போது மக்காச்சோள உற்பத்தியில் முன்னோடியாக விளங்கிவருகிறது.

வடகிழக்கு பருவமழையை நம்பி உள்ள பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையாகவும், அரணாகவும் விளங்கும் பச்சைமலையில் இருந்து கல்லாறு, சின்னாறு, வெள்ளாறு, கோனேரிஆறு, சுவேதநதி போன்ற காட்டாறு கள் உற்பத்தியாகின்றன. காட்டாறுகள் கலந்துவிடும் வெள்ளாறு வேப்பந்தட்டை, வேப்பூர் ஒன்றியங்கள் வழியாக சென்று கடலூர் மாவட்டம் வழியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

இதுதவிர சிறுவாச்சூர் அருகே பெரியசாமி மலையில் உற்பத்தியாகும் மருதையாறு, பெரம்பலூர், ஆலத்தூர், அரியலூர், திருமானூர், தா.பழூர் ஒன்றியங்கள் வழியாக பாய்ந்து, கொள்ளிடம் ஆற்றில் கலந்து வங்காளவிரிகுடாவை சென்றடைகிறது.

சாரல் மழை

பெரம்பலூர் மாவட்டத்தில் 2011 -ம்ஆண்டு முதல் நடப்பு ஆண்டுவரை வடகிழக்கு பருவமழை சரிவர பெய்யாமல் வறட்சியால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் நடப்பு ஆண்டிலாவது வட கிழக்கு பருவமழை சரியாக பெய்யுமா? என்று விவசாயிகள் எதிர் பார்த்துக்கொண்டிருந்த வேளையில் சாரல் மழையாக பெய்து மழைகாலத்திற்கும் விடைகொடுக்கும் நிலைக்கு பெரம்பலூர் மாவட்டம் தள்ளப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையால் பெரம்பலூர் மாவட்டத்தின் பெரிய ஏரியான அரும்பாவூர் ஏரி, பாண்டகப்பாடி ஏரி ஆகியவை நிரம்பி உள்ளன. தொண்டமாந்துறை ஏரி 80 சதவீதம் நிரம்பி உள்ளது. பச்சைமலையில் பெய்த வடகிழக்கு பருவ மழையின் காரணமாக கோரையாறு, கல் லாற்றில் சிறிதளவு தண்ணீர் மட்டுமே தேங்கி நிற்கிறது. நீர்ஓட்டம், வெள்ளப் பெருக்கு என்பது நினைவாகவே உள்ளது.

கிணற்றுப்பாசனம்

இம்மாவட்டத்தில் கிணற்றுப் பாசனம் அதிகம் நடைமுறையில் உள்ளதால் கடந்த 3 ஆண்டுகளில் நிலத் தடி நீர்மட்டம் 150 அடியில் இருந்து 250 அடிவரை சென்று விட்டது. பயிர், காய்கறிகள் சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்து வருகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 908 மி.மீ. ஆகும். கடந்த ஆண்டு இம்மாவட்டத்தில் இதே காலகட்டத்தில் மொத் தம் 814.36 மி.மீ. மழைஅளவு பதிவாகி இருந்தது. நடப்பு ஆண்டில் நடப்பு தேதிவரை 828.20 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

இந்த நிலையில் வெள்ளாற்றில் 16 கண் மதகுகளில் 2 மதகுகளில் மட்டும் தேங்கி உள்ள மழைநீர் கசிந்தவண்ணம் உள்ளது. இதனால் வெள்ளாறு நீர்த் தேக்கம் சிறிதளவு நீருடன் வறண்டு போகும் நிலையில் உள்ளது.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ஆர்.ராஜா சிதம்பரத்திடம்கேட்டபோது, பெரம்பலூர் மாவட்டத்தில் அடைமழை பெய்தால்தான் விவசாயம் தழைக்கும், நிலத்தடிநீர் மட்டம் உயரும். இல்லாவிட்டால் காய்கறிகள், விளைச்சல் குறைந்து விலை அதிகரிப்பதை தடுக்க முடியாது.

ஒவ்வொரு ஆண்டும் பருவமழை சீசனில் 21 நாட்கள் அடைமழை பெய்தாலே நீர் நிலைகளில் போதிய நீர் ஊற்றம் கண்டு, அந்த ஆண்டு வேளாண்மை சிறப்பாக இருக்கும் என்பது ஐதீகம். ஆனால் பெரம்பலூர் மாவட் டத்தில் அடை மழையை காண்பது கடந்த 4 வடகிழக்கு பருவமழை காலங்களில் அரிதாகிவிட்டது. இந்த ஆண்டும் ஆண்டு சராசரி மழைஅளவைவிட குறை வாகவே மழை பெய்துள்ளது என்று தெரிவித்தார்.

- தினத்தந்தி.


பெஷாவர்,:பாகிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் பள்ளி புகுந்து நடத்திய வெறித்தனமான துப்பாக்கி சூட்டில் 84 குழந்தைகள் உள்பட 104 பேர் உயிரிழந்தனர்.

ராணுவம் அதிரடி தாக்குதல்

பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள வடக்கு வாஜிரிஸ்தான் பகுதி, தலீபான் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தின்கீழ் உள்ளது.

இங்குள்ள தலீபான் தீவிரவாதிகளை ஒடுக்க வேண்டும் என்று நவாஸ் ஷெரீப் அரசுக்கு சர்வதேச நாடுகள் நிர்ப்பந்தம் கொடுத்தன. இந்நிலையில் தீவிரவாதிகள் கராச்சி விமானநிலையத்தில் பெரும் தாக்குதல் நடத்தினர். இதில் 30க்கும் மேற்பட்டோர்கள் பலியாகினர். இதனையடுத்து, கடந்த ஜூன் மாதம் முதல் தீவிரவாதிகளை அழிக்க பாகிஸ்தான் போர் விமானங்கள், தலீபான் முகாம்களை குறி வைத்து தாக்குதல்கள் தொடுத்து வருகிறது. அமெரிக்காவும் தாக்குதல் நடத்திவருகிறது.

இதுவரையில் 2000-த்திற்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

பள்ளிக்குள் தீவிரவாதிகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவ பள்ளிக்கூடம் உள்ளது. பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட படித்து வருகின்றனர். இன்று பள்ளி வழக்கமாக செயல்பட்டபோது, ராணுவ உடையில் தீவிரவாதிகள் உள்ளே புகுந்தனர். தீவிரவாதிகள் பள்ளிக்குள் புகுந்தது தொடர்பாக தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் பள்ளியை சுற்றி வளைத்தனர். பள்ளிக்குள் சிக்கிய மாணவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தாக்குதல் தொடர்பான தகவல்கள் தெரியவந்ததும் பள்ளியை சூழ்ந்தனர்.

சரமாரியாக துப்பாக்கி சூடு

உள்ளே புகுந்த தீவிரவாதிகள் பள்ளி குழந்தைகள் என்றும் பார்க்காமல் உள்ளே சிக்கியவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். பள்ளியில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதும், தீவிரவாதிகளை நோக்கி ராணுவமும் தாக்குதல் நடத்தியது.


ராணுவம் தீவிரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. தீவிரவாதிகள் பள்ளி குழந்தைகளை சுட்ட வண்ணமே இருந்தனர். இதற்கிடையே ஒருபகுதியாக உள்ளே சென்ற ராணுவம், காயம் அடைந்த குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. குழந்தைகள் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் செல்லும் பரிதாப சம்பவம் நிகழ்ந்து கொண்டுள்ளது. பெற்றோர்கள் கதறி அழுத வண்ணம் உள்ளனர். ராணுவம் உள்ளே சிக்கியிருக்கும் குழந்தைகளை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

104 பேர் உயிரிழப்பு

கொடூர குணம் கொண்ட தலிபான் தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் 84 குழந்தைகள் உள்பட 104 பேர் உயிரிழந்தனர் என்று மாகாண முதல்-மந்திரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயம் அடைந்த குழந்தைகள் பாதுகாப்பாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயம் அடைந்த குழந்தைகளில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பள்ளியின் ஆசிரியர்களும் பலியாகியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

 பள்ளிக்குள் புகுந்து 6 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். மீதிஉள்ள தீவிரவாதிகளை சுட்டுத் தள்ளும் முயற்சியில் ராணுவம் இறங்கியுள்ளது.


இந்த தீவிரவாத தாக்குதலுக்கு தெரிக் இ தலிபான் தீவிரவாத இயக்கம் பெறுப்பேற்றுள்ளது. தீவிரவாத இயக்கங்களுக்கு எதிரான ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் மெத்தனமாக கூறியுள்ளது. இச்சம்பவம் உலக அளவில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நவாஸ் செரீப் கண்டனம்

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  நவாஸ் செரீப் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். இதற்கிடையே சம்பவம் நடந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நான் பெஷாவர் செல்ல முடிவு செய்துள்ளேன். அங்கு ராணுவம் தரப்பில் நடத்தப்படும் நடவடிக்கையை ஆய்வு செய்ய உள்ளேன். பாதிக்கப்பட்ட சிறுவர்கள் என்னுடையவர்கள், இது எனக்கு இழப்பு என்று பிரதமர் நவாஸ் செரீப் கூறியுள்ளார்.

தலிபான் அடாவடி

குழந்தைகளை சுட்டுக் கொலை செய்த கொலைக்கார தலிபான் தீவிரவாத இயக்கம் ராணுவத்திற்கு எங்களது வலியை உணரச் செய்யவே இந்த தாக்குதலை நடத்தியுள்ளோம் என்று அடாவடியாக தெரிவித்துள்ளது.

தலிபான் தீவிரவாத இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராணுவம் எங்களது குடும்பத்தை குறிவைத்ததால் நாங்கள் பள்ளியை குறிவைத்தோம். அவர்கள் எங்களுடையை வலியை உணர விரும்பினோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் தீவிரவாதிகள் மற்றும் ராணுவம் இடையே தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.

-தினத்தந்தி.

பாட்னா:பீகார் மாநிலம் பீளகஞ்ச்சட்டசபை தொகுதி  ராஷ்டிரிய ஜனதா தல எம்.எல்.ஏ  சுரேந்திர பிரசாத் யாதவ். இவர்கடந்த ஞாயிற்று கிழமை கயாவிற்கு சென்று விட்டு பீளகஞ்ச் திரும்பி கொண்டு இருந்தார்.  வரும் வழியில் கயா திகிரி ரோட்டில் உள்ள ஸ்ரீராம் தில் குத் பந்தர் என்ற சுவீட் கையில் நிறுத்தி உள்ளார். அங்கு சுவீட் வாங்க சென்று உள்ளார். அப்போது சுவீட் கொடுக்க நேரமாகி உள்ளது இதில் சுவீட் கடை உரிமையாளர் திரேந்திர குமாருக்கும் எம்.எல் ஏவுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது.

 இதில் கோபம் அடைந்த சுவீட் கடை உரிமையாளர் திரேந்திர குமார் கொதிக்கும் எண்ணெய்யை எம்.எல்.ஏ மற்றும்  அவரது உதவியாளர் மீது ஊற்றினார் இதில் எம்.எல் ஏயின்  காது மற்றும் கழுத்துபகுதியில் காயம் ஏற்பட்டது உடனடியாக இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.இது குறித்து எம்.எல்.ஏ சுரேந்திர பிரசாத் போலீசில் புகார் செய்து உள்ளார். சுவீட் கடை உரிமையாளரும். எம்.எல்.ஏ குறித்து போலீசில் புகார் செய்து உள்ளார்.

-தினத்தந்தி.