Saturday 13 September 2014


ஈராக்கில் தோன்றிய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு உலக மக்களுக்கு ஓர் அச்சுறுத்தல் ஆகும். உலக அளவில் இஸ்லாமிய அரசின் தலைவராக காலிப்பை அறிவித்ததுடன், உலக வரைபடத்தில் எப்படியெல்லாம் இஸ்லாமிய அரசு அமையப்போகிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. இதில் பாரத தேசமும் அடங்குகிறது. இஸ்லாமிய அரசை நிறுவ ஜிகாதி போரையும், பயங்கரவாத செயல்திட்டத்தையும் அவ்வியக்கம் அறிவித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளை அடியோடு ஒழிக்க அமெரிக்கா அதிபர் அறிவித்துள்ளார். இதற்கு மேற்கத்திய நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளும் ஒத்துழைக்க உள்ளன.
ஐ.எஸ்.ஐ.எஸ், பயங்கரவாத செயல்கள் எங்கோ நடக்கிறது என்பதல்ல, அவர்களால் மூளை சலவை செய்யப்பட்டவர்கள் சிலிப்பர் பயங்கரவாதிகள் உலகம் முழுவதும் தயார் செய்யபப்ட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டிலும் கூட இராமநாதபுரத்தில் 40 பேர் ஐ,எஸ்.ஐ.எஸ். உடையணிந்து, தொண்டியிலிருந்து புறப்பட்டுவிட்டது சூறாவளி என முகநூலில் புகைப்படம் வெளியிட்டதும், தமிழக காவல்துறை அவர்களை கைது செய்து பின்னர் உடனடியாக ஜாமினில் வெளியே விட்டுவிட்டார்கள்.
இதற்கு காவல்துறையினர் கூறிய காரணம் ஐ,எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புதான், ஆனால் அந்த அமைப்பு நமது நாட்டில் தடை செய்யவில்லையே என்றார்கள். ஐ,எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இணைந்து பயங்கரவாத செயலுக்கு தமிழ்நாட்டிலிருந்து நூற்றுக்கணக்கானவர்கள் ஈராக் சென்றுள்ளனர். சமீபத்தில் ஒரு பத்திரிகையில் நாகப்பட்டினத்திலிருந்து சென்றவனின் படம் வெளிவந்தது. அவன் சகோதரிக்கு தொலைபேசியில் பேசியபோது, தான் கடலூரில் பெற்ற பயிற்சி இங்கு பயங்கரவாத செயலுக்கு பெரிதும் பயன்படுகிறது என்று கூறியுள்ளான். அப்படியானால், தமிழகம் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு ஆள் சேர்க்கவும், பயிற்சி அளிக்கும் களமாக இருக்கிறது. இது ஆபத்தானது!
அதுபோல ஆந்திராவிலிருந்தும் ஐ.எஸ்.ஐ.எஸ்.க்காக மூளை சலவை செய்யப்பட்டவர்கள் பற்றிய செய்திகள் வந்திருக்கின்றன. இதனை முளையிலேயே ஒடுக்காவிட்டால், இஸ்லாமிய மதவாதத்தால் மூளை சலவை செய்யப்பட்ட ஸ்லீப்பர் பயங்கரவாதிகளால் நாட்டில் பெரிய அளவில் அசாம்பாவிதங்கள் நிகழ்த்தலாம் என எச்சரிக்கிறது இந்து முன்னணி!
தற்போது பிடிப்பட்டுள்ள அருண் செல்வாராஜும், முன்னர் பிடிப்பட்ட பயங்கரவாதிகள் சென்னை உட்பட தமிழகத்தின் முக்கிய பகுதிகளை குறிவைக்க தகவல்களை சேகரித்துள்ளதும், அதனை இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதருக்குத் தெரிவித்துள்ளதும் தெரிய வந்தது. இது குறித்து மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்நாட்டின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த இந்து முன்னணி வலியுறுத்துகிறது.
தமிழகத்தில் வளர்ந்து வரும் முஸ்லீம் பயங்கரவாதம், இடசாரி நக்ஸல், மாவோயிஸ்ட் பயங்கரவாதமும் பெருகியுள்ளது. இதற்கு கம்யூனிஸ்ட், முஸ்லீம் அமைப்புகளும், கட்சிகளும் துணைபோகின்றன, ஆதரவாக செயல்படுகின்றன. உளவுத் துறை இந்த குழுக்களை கண்காணித்து அரசுக்கு தகுந்த தகவல்களை திரட்டி அவற்றை முழுமையாக செயலழிக்க செய்ய வேண்டும்.
பயங்கரவாதத்தை முழுமையாக அகற்ற, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும். அனைத்து மாநில அரசுகளும் பயங்கரவாதிகளை, அதற்கு உதவி செய்பவர்களை கண்காணித்து கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

Friday 12 September 2014

    ஒரு காலத்தில் நம் வ.களத்தூரில் வீட்டைக் கட்ட மணலை தலையில் சுமந்து , மாட்டு வண்டியில் கொண்டுவந்து வீட்டைகட்டினோம் . பிறகு டிராக்டரில் மணல் அடித்து வீட்டை கட்டினோம். ஆனால் மண் வளம் பாதிப்பதாக கூறி கல்லாற்றில் மணல் அள்ள தடை விதித்தது தமிழக அரசு. சரி டிராக்டரில் அள்ளவில்லை, மாட்டு வண்டியிலாவது மணல் அள்ளிக்கொள்ளலாம் என்றால் அதற்கும் வழி இல்லை. ஆனால் இன்று நம் ஆற்றுமணலை ஏலத்தில் எடுத்து எவன் எவனோ பணம் சம்பாதிக்க நாம் மணல் அள்ளினால் குற்றமாம்.

      விவசாயம் பொய்த்துவிட்ட இந்த காலக்கட்டத்தில் நூறு இருநூறுக்கு மணல் அள்ளி அதன்மூலம் குடும்பத்தை ஓட்டலாம் என்றால் அதற்கும் வழியில்லை. எவன் எவனோ நம் சொத்தான கல்லாற்று மணலை கொள்ளையடித்துப்போக நாம் வேடிக்கை பார்த்து நிற்கிறோம். கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் கதையாக இருக்கிறது. நம் வாழ்வில் ஒரு அங்கமாக ஆகிப்போன கல்லற்று மணலைகொண்டு வீடு கட்டுவது என்பது இனிமேல் கனவுதானோ...நம் கல்லாறு மணலை நாம்  அள்ளுவது திருட்டாம்...வெள்ளையன் ஆண்ட காலத்தில் ஒரு பாட்டு உண்டு

 " ஊரன் ஊரான் தோட்டத்தில ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா... காசுக்கு ரெண்டு விக்கச்சொல்லி காகிதம் போட்டானாம் வெள்ளைக்காரன்..."என்ற நாட்டுப்புற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

வண்டி பறிமுதல் செய்யப்பட்டவர்கள் நம் வ.களத்தூரைச் சேர்ந்த ரமேஷ்(29), சுப்ரமணி(40), நல்லதம்பி(39), மாரிமுத்து(38), தனபால்(39), ராமையா(40), முத்துசாமி(41), முத்துசாமி(42) ஆகியோர். 

தினகரன் செய்தி-
 

Thursday 11 September 2014


பெரம்பலூர், செப்.11:
பெரம்பலூர் அருகே நடந்த 2 விபத்துகளில் 17 பேர் காயமடைந்தனர்.
விருதுநகரில் இருந்து ஆயில் ஏற்றிய லாரி சென் னைக்கு நேற்றுமுன்தினம் இரவு சென்றுகொண்டிருந்தது. லாரியை விழுப்புரம் செண்டூரை சேர்ந்த முத்து வேல்(33) ஓட்டினார். நேற்று அதிகாலை 3மணி அளவில் திருச்சி& சென்னை நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே செங்குணம் பிரிவு ரோட்டில் வந்தபோது நாகர்கோவிலில் இருந்து சென் னைக்கு சென்ற ஆம்னி பஸ், லாரியின் பின்னால் மோதி யது. இதில் படுகாயமடைந்த லாரி டிரைவர் முத்துவேல் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 50க்கும் மேற்பட்ட பயணி கள் காயமின்றி தப்பினர்.

மற்றொரு விபத்து 
இதேபோல் மதுரையிலிருந்து சென்னை சென்ற அரசு விரைவு பஸ் நேற்று அதிகாலை 5மணி அளவில் பெரம்பலூர் அருகே எளம்பலூர் தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் வந்தபோது திண்டுக்கல்லிருந்து சென்னை சென்ற லாரி மீது மோதியது. இதில் பஸ் டிரைவர் மதுரை மேலகவுண்டன்பட்டியை சேர்ந்த சதீஷ்(27), கண்டக்டர் வேலுச்சாமி(40), பயணிகள் மதுரை தவமணி, சென்னை சரஸ்வதி(64), விருதுநகரை சேர்ந்த கோபால், திருப்பதி, இருதயராஜா, சாந்தி உள்பட 16 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் அங்கு வந்து அவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். போலீசார் வழக்கு பதிந்து இருவிபத்து கள் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.


-thinakaran.

Tuesday 9 September 2014


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு இருக்கும் ஆர்.எஸ்.எஸ். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்ய கர்த்தாக்கள் தங்களை மக்கள் சேவை பணியில் அர்ப்பணித்து அங்கு உள்ளவர்களுக்கு தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்துக் கொண்டு வருகின்றனர் ( உணவு, தங்க குடில்கள், போர்வை , ஆடைகள் , குழந்தைகளுக்கு தேவையான பால் மற்றும் இதர வசதிகளை தாய் திருநாட்டிற்கு வேண்டி செய்துகொண்டு வரும் தேசபக்தர்களுக்கு மகிழ்சிகள் !!!!

உதவி கரம் செய்ய விரும்பும் தேசபக்தர்கள் கீழே உள்ளவர்களை தொடர்பு செய்யுங்கள் !!!
1 .Sewa Bharti, Jammu & Kashmir
Ved Mandir Complex,
Ambphalla, Jammu 180001
Email ID: sewabhartijammu@gmail.com, kachrukrishan@gmail.com, jaidevjammu@gmail.com
Contact person:-Ms Arpana Gupta, 7298113350,
Ph.No:- 94191-12841, 94191-10940, 0191-2570750, 2547000.

2. Fayaz Ahmed Mir, H/o Lt Sh. Z H Mirza, Retd. SSP
Magharmal Bagh Chowk, Behind Masjid, Srinagar, J&K
Contact person – Mr Fayaz Ahmed Mir
Ph no. 94190-16193, 97972-47053

The Cash donation may be remitted to State Bank of India, Karan Nagar, Jammu:
Sewa Bharati, Jammu,
Account No 10088448366
IFSC Code: SBIN0007970
Or
Rashtriya Sewa Bharati
SBI, Jhandewala, New Delhi
Account No 10080533451
IFSC Code SBIN0009371
Contact person: K L Mallya, Treasurer, Rashtriya Sewa Bharati, 09810898333
Email Id:- klmallya1949@gmail.com, rashtriyasewa@gmail.com

செய்தி- வினோத் அகல்ராஜ்.


சாதி இரண்டொழிய வேறில்லை என்ற சொன்ன ஒளவை பிறந்த மண்ணில் தீண்டாமையும் சாதி மோதலும் தலைவிரித்தாட அரசியல் கட்சிகளும் கிருஸ்துவ மிஷனரிகளும்,இஸ்லாமிய சக்திகளும் திட்டமிட்டு சதி செய்து வருகின்றன. தென் தமிழ்நாட்டில் அதிலும் குறிப்பாக இராமநாதபுர மாவட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை மற்றும் இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் போன்ற நிகழ்வுகள் கலவரங்களுக்காவே நடத்தப்படுவது போல் ஆகிவிட்டது. இந்தக் கலவரங்களை மையமாக வைத்துத் தீண்டாமையும் சாதி மோதல்களும் இந்து மதத்தின் Trade mark ஆக அந்நிய சக்திகளாலும் அறிவுஜீவிகளாலும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
download
arson 779215g
இந்த ஆண்டு 11-09.2014 அன்று இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிக்கப்பட இருக்கிறது. இதை மையமாக வைத்துச் சாதி கலவரம் ஏற்படுத்தத் திட்டம் தீட்டப்பட்டு அதன் ஒத்திகையும் நடந்தேறியுள்ளது.சில நாட்களுக்கு முன் இராமநாதபுரம், பேராவூர் இந்திரா நகர் பகுதியிலுள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலையை சிலர் அசிங்கப்படுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து அந்தப் பகுதியுலுள்ள தேவர் இனத்தைச் சார்ந்தவர்கள் இந்த குற்றத்திற்கு ஹரிஜன சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தான் காரணம் என்று கிளர்ந்தெழுந்துள்ளனர். தீர விசாரித்துப் பார்த்ததில் ஹரிஜன சமுதாயத்தைச் சேர்ந்தவர்களோ ஹரிஜன அமைப்புகளோ சம்பந்தப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
immanuvel sekaran2
இது தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில் இதேப் பகுதியைச் சார்ந்த இஷாத் அகமத், காபில், நரேந்திரன், ராஜ்குமார் என்ற நால்வரை கைது செய்துள்ளனர். இந்த நான்கு பேரும் சமீபத்தில் ஹரிஜன சமுதாயத்தில் இருந்து முஸ்லீமாக மதம்மாறியவர்கள். முன்பு கிறிஸ்தவ மிஷனரிகள் சாதிக் கலவரத்தை ஏற்படுத்தி எப்படி குட்டையைக் குழப்பி மீன் பிடித்தனரோ அது போலவே இஸ்லாமியர்களும் இந்தப் பாதகச் செயலை செய்யத் தொடங்கிவிட்டனர்.
இன்னும் இமானுவேல் சேகரன் நினைவு நாளுக்கு மூன்று நாட்கள் உள்ள நிலையில் இது போன்ற கலவரத்தைத் தூண்டும் சதிச் செயலில் முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் சில பிரிவினைவாத அமைப்புகளும் ஈடுபடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு இரண்டு சமுதாய மக்களும் விழிப்புடன் செயல்படவேண்டும்.
pasumpon thevar 902011590076286889
தன் சொத்தில் ஒரு பங்கை ஹரிஜன சகோதரர்களுக்குக் கொடுத்த முத்துராமலிங்கத் தேவரின் சமநோக்கு எண்ணத்தையும் எவ்வளவோ தீண்டாமைக் கொடுமைகளைத் தாண்டி இன்றும் இந்துக்களுக்காக வாழ்ந்து கொண்டு நம் பண்பாட்டைக் காக்கும் ஹரிஜன சகோதரர்களின் சமுதாய பிடிப்பிற்கு தலைவணங்கி இந்த ஆண்டு இரண்டு நிகழ்வுகளும் எந்தக் கலவரமும் இன்றி நடந்தேற இரு சமுதாயத் தலைவர்களும் பொறுப்பெடுக்கவேண்டும். பிரிவினையை ஏற்படுத்தி மதமாற்றி பண்பாட்டை அழிக்கும் நாசகாரச் சக்திகளை இனம் கண்டு அவற்றை ஒடுக்கும் பணியை அனைத்து சாதித் தலைவர்களும் அரசும் மேற்கொண்டு அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ வழிவகைச் செய்யவேண்டும்.

Monday 8 September 2014


பெரம்பலூர், : பெரம்பலூரில் அரசு சார்பாக பாரம்பரிய உணவுத்திருவிழா இன்று(9ம்தேதி) முதல் 13ம்தேதி வரை நடைபெற உள்ளது என கலெக்டர் தரேஸ் அகமது தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது :
மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளார்ச்சித் திட்டத்தின்கீழ், சிறுதானிய உணவின் பயன்பாடு மற்றும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் பொருட்டு பாரம்பரிய உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த திருவிழா இன்று (9ம் தேததி) முதல் வருகிற 13ம்தேதி வரை பெரம்பலூர் ஜேகே மஹாலிலும், 16ம்தேதி அரும்பாவூரிலும், 18ம்தேதி குன்னத்திலும் நடைபெற உள்ளது. பாரம்பரிய உண வுத் திருவிழாவில் உணவு கலாச்சாரம், இயற்கை விவ சாயம், வீட்டுத்தோட்டம், மரபுசார் வேளாண்மை, சுற்றுச் சூழல் குறித்து சிறப்புரையும் சிறுதானியங்களால் உணவு தயாரிப்பு பற்றிய செயல்முறை விளக்கமும் நடத்தப்படுகிறது.
மேலும் விவசாயத்துறை, தோட்டக்கலைத்துறை போன்ற துறைகளால் கண் காட்சி அமைக்கப்படுகிறது. பாரம்பரிய மண்பாண்டங்களில் செய்யப்பட்ட பொருட்கள், பனை பொருட் கள், மரசிற்பம் போன்ற அரங்குகளும் அமையவுள்ளன. மூலிகைத் தாவரம், இயற்கை மருதாணி இடுதல், உணவு முறைகள் குறித்த புத்தகக் கண்காட்சி ஆகியவை இந்த அரங்குகளில் இடம்பெறும்.
முதல் நாளான இன்று (9ம்தேதி) 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆரோக் கிய குழந்தை போட்டி, 2ம் நாளான நாளை (10ம்தேதி) பாரம்பரிய உடை போட்டி, 3ம் நாள்(11ம்தேதி) உணவு தயாரித்தல் செயல்முறை விளக்கப்போட்டி, 4ம்நாள் (12ம்தேதி) கல்லூரி மாணவர்களுக்கான சிறுதானிய உணவின் முக்கியத்துவம் குறித்து பேச்சுப் போட்டி, ஐந்தாம்நாள் (13ம்தேதி) குப்பை உணவு மற்றும் துரித உணவின் தீமைகள் குறித்தப் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் பங்கு பெற விரும்புவோர் 87543 16958, 9488804765 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

செய்தி-தினகரன், பட உதவி-வசந்த ஜீவா.

பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களின்போது அனைத்து வாக்காளர்களுக்கும் பூத்சிலிப் எனப்படும் வாக்காளர் அடையாளச்சீட்டு வழங்கப்பட்டது போல உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறும் இடங்களில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய பூத்சிலிப்கள் எனப்படும் வாக்காளர் அடையாளச்சீட்டுகள் வீடுதோறும் நாளை முதல் வழங்கப்படவுள்ளன.
பெரம்பலூர்,: உள்ளாட்சி அமைப்புகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட 26 பதவியிடங்களில் 17பதவியிடங்களுக்கு போட்டியின்றித்தேர்வு செய்யப்பட்டனர்.  எஞ்சிய 9 பதவியிடங் களுக்கு 18ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. களத்தில் 23 பேர் உள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள உள்ளாட்சி அமைப்புகளில் 2014 ஜூன் 30ம்தேதி வரை ஏற்பட்டுள்ள 26 காலிப்பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டு வேட்புமனுக்கள் கடந்த ஆக.28 முதல் செப். 4ம்தேதிவரை பெறப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்களில் 2 இடங்கள், ஊராட்சி தலைவர்களில் 3 இடங்கள், கிராமஊராட்சி வார்டு உறுப்பினர்களில் 20 இடங்கள், பேரூராட்சி வார்டு உறுப்பினர்களில் ஒரு இடம் என மொத்தம் 26 காலிப் பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டன. ஒன்றியக்குழுஉறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தலில், பெரம்பலூர் ஒன்றியத்தில் 12வது வார்டுஉறுப்பினர் பதவியிடத்திற்கு 3பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். 3மனுக்களும் ஏற்கப்பட்ட நிலையில் நேற்று ஐஜேகே வேட்பாளரான வேலூர் கார்த்திக் தனது மனுவை வாபஸ் பெற்றதை தொடர்ந்து, தற்போது அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் விஏஓ தம்பிரான்பட்டி அண்ணாதுரை(59), பிஜேபி கட்சியைச்சேர்ந்த ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ரங்கநாதபுரம் வசந்தகுமார் (40)ஆகிய இருவரும் களத்தில் உள்ளனர்.
வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 16வதுவார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கு 4 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். 4மனுக்களும் ஏற்கப்பட்ட நிலையில், நேற்று 2மனுக்கள் வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, தற்போது அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கண்ணகிகுணசேகரன், ஐஜேகே கட்சியைச்சேர்ந்த மலையம்மாள் ஆகிய இருவரும் களத்தில் உள்ளனர். ஊராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில், வேப்பூர்ஒன்றியம் பெரியவெண்மணி ஊராட்சித்தலைவர் பதவியிடத்திற்கு மனுதாக்கல் செய்திருந்த 6பேரில் 4மனுக்கள் வாபஸ் பெறப்பட்டதால் இருவர் களத்திலுள்ளனர்.
ஆலத்தூர் ஒன்றியம் கண்ணப்பாடி ஊராட்சித்தலைவர் பதவியிடத்திற்கு மனுதாக்கல் செய்திருந்த 2பேரில் யாரும் வாபஸ் பெறாததால் இருவரும் களத்திலுள்ளனர். ஆலத்தூர் ஒன்றியம் நொச்சிக்குளம் ஊராட்சித்தலைவர் பதவியிடத்திற்கு மனுதாக்கல் செய்திருந்த 8பேரில் 4மனுக்கள் வாபஸ் பெறப்பட்டதால் 4பேர் களத்திலுள்ளனர்.
பேரூராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் பூலாம்பாடி பேரூராட்சியில் 15 வது வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கு மனுதாக்கல் செய்திருந்த 2பேரில் ஐஜே கே சார்பாக மனுதாக்கல் செய்திருந்த கஜினிமுகமது என்பவரது மனு தள்ளுபடி செய் யப்பட்டதால், அதிமுக வேட்பாளரான முன்னாள் கவுன்சிலர் அப்துல்சலாம் போட்டி யின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதே போல கிராம ஊராட்சி வார்டுஉறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தலில் மாவட்ட அளவில் காலியாக அறிவிக்கப்பட்ட 20வார்டு உறுப்பினர் பதவியிடங்களில் 16 பேர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள பொம்மனப்பாடி ஊராட்சி 8வதுவார்டு உறுப்பினர் பதவிக்கு 3பேரும், கல்பாடி ஊராட்சி 8வதுவார்டு உறுப்பினர் பதவிக்கு 4பேரும், பெரிய வெண்மணி ஊராட்சி 8வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2பேரும், சிறுமத்தூர்ஊராட்சி 7வதுவார்டு உறுப்பினர் பதவிக்கு 2பேரும் களத்திலுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து காலியாகவுள்ள 2 ஒன்றியகவுன்சிலர், 3ஊராட்சிமன்றத் தலைவர்கள், 4வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 9பதவிக்கு 23 பேர் களத்திலுள்ளனர். இந்த 9பதவிக்கும் வாக்குச்சீட்டு அடிப்படையில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஒன்றியகவுன்சிலர், ஊராட்சிமன்றத் தலைவர், வார்டு உறுப்பினர் ஆகிய 3பதவியிடங்களை அடையாளப்படுத்தும் விதமாக 3வண்ணங்களில் வாக்குச்சீட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பெரியவெண்மணி கிராமத்தில் உள்ள 8வதுவார்டு வாக்காளர்கள் மட்டும் தலைவர், வார்டுஉறுப்பினர் ஆகிய 2 பதவிக்காக இருமுறை வாக்களிக்க உள்ளனர்.

-தினகரன்.

ஊரகப் பகுதிகளில் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 68,435 தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டப்பட உள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
பெரம்பலூர் ஆட்சியகரகத்தில் தனிநபர் கழிப்பறைகளை அனைத்து இல்லங்களிலும் கட்டப்படுவதை உறுதி செய்வது தொடர்பாக, ஊராட்சித் தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் மேலும் பேசியது:
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு சில ஊராட்சிகளில் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டப்பட்டு முழு சுகாதாரம் பெற்ற ஊராட்சியாகத் தேர்வு செய்யப்பட்டு அரசால் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள சுகாதார வளாகங்கள் அனைத்தும் புதுப்பித்து பராமரிக்கப்படுகிறது. இருந்தபோதிலும் திறந்தவெளிகளை கழிப்பிடங்களாகப் பயன்படுத்துவதை நிறுத்தி, அனைத்து மக்களும் கழிப்பறைகளை உபயோகப்படுத்தும் வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிளும் முழுமையான சுகாதார வசதி பெற தனிநபர் கழிப்பறை கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், 68,435 வீடுகளில் கழிப்பறைகள் இல்லாதது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்த வீடுகளில் 18,092 வீடுகளில் நிர்மல் பாரத் அபியான் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டங்களின் கீழ் நிதி வழங்கப்பட்டு கழிப்பறை கட்டப்படும். மீதமுள்ள 50,343 வீடுகளில் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பறை கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளில் அனைத்து ஊராட்சித் தலைவர்களும் தங்களை ஈடுபடுத்தி, முழு சுகாதாரம் பெற்ற ஊராட்சிகளாக மாற்ற வேண்டும்.
மேலும், தங்களது பகுதி குழந்தைகளுக்கு கைகழுவும் பழக்கத்தை கற்றுக்கொடுத்தால், நோய் பரவுவதைத் தடுக்கலாம்.
மழைக்காலம் தொடங்கவுள்ளதால் நீர் தேங்காத வகையில், ஊராட்சிப் பகுதிகளைக் கண்காணித்து தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர். சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் அ. அய்யம்பெருமாள், ஊராட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

-தினமணி.

பெரம்பலூர் மாவட்ட நெடுஞ்சாலைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் சாலைப் பணிகளை மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை மூலம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் மேலமாத்தூர் – திட்டக்குடி சாலையில் மருதையான் கோயில் முதல் நல்லறிக்கை கிராமம் வரை ரூ. 15.23 கோடி மதிப்பீட்டில் இருவழிச் சாலைக்கான மேம்பாடு பணியினையும், அந்தூர் கிராமத்தில் ரூ. 4.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள பாலத்திற்கான இடத்தையும் பார்வையிட்ட கலெக்டர் கூறியதாவது:
வேப்பந்தட்டை முதல் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நெய்குப்பை வரை ரூ. 23.27 கோடி மதிப்பிலும், ஆத்தூர் – பெரம்பலூர் சாலையில் காமராஜர் வளைவிலிருந்து எளம்பலூர் வரை ரூ. 5.46 கோடி மதிப்பீட்டிலும் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
குன்னம் – வேப்பூர் – வயலப்பாடி சாலை ரூ. 18.06 கோடி மதிப்பீட்டிலும் துறையூர் பெரம்பலூர் சாலையில் பாலக்கரை முதல் நான்கு சாலை சந்திப்பு வரை ரூ. 3.39 கோடி மதிப்பீட்டிலும் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.
ஆலத்தூர் – செட்டிக்குளம் சாலையில் பொம்மனப்பாடி முதல் செஞ்சேரி வரை ரூ. 13.73 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று நிறைவடையும் நிலையில் உள்ளது.
செட்டிக்குளம் – நக்க சேலம் வரை ரூ. 5.95 கோடி மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தி பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
இந்த ஆய்வுகளின்போது நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் கிருஷ்ணசாமி, உதவி கோட்ட பொறியாளர்கள் சுப்பிரமணியன், சேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.