Saturday 14 June 2014


வில்லிவாக்கத்தில் இந்துமுன்னணியினர் போராட்டம்.
இன்னும் எவ்வளவு காலம்தான் ஜெயலலிதாவிற்கு அனுதபிகளாய் இருக்கப்போகிறோம்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் அதிமுக வெற்றி பெற அடிப்படை காரணமாக இருந்தது பாஜகவின் வேட்பாளர் குருமூர்த்தி வேட்ப்புமனு தாக்கல் செய்வதில் காட்டிய மெத்தனம் என்று ஊடகங்களாலும் , பாஜக தொண்டர்கள் ஒரு பகுதியினர் கருதினாலும் உண்மை என்ன என்பது நாம் எல்லோருக்கும் தெரியும்.

ஸ்பெக்ட்ரம் ராசாவை தோற்கடிக்கவேண்டும் என்ற ஒற்றை காரணத்தை வைத்து பாஜக - அதிமுக ரகசிய கூட்டு வைத்துக்கொண்டார்கள் என்ற வாதத்தில் உண்மை இல்லாமல் இல்லை. பாஜக வேட்பாளர் குருமூர்த்தி வேட்பு மனு தள்ளுபடிசெய்யப்பட்டு, பாஜக கூட்டணி போட்டியில் இல்லாத சூழ்நிலை உருவானபோது பாஜக தொண்டர்கள் சிலர்  , முகனூலில் பல பதிவர்கள் , பத்திரிக்கையாளர் சோ மற்றும் பாஜக கூட்டணி உருவாக காரணமாக இருந்த தமிழருவி மணியன் கூட அதிமுகவை கூட்டணி தொண்டர்கள் ஆதரிக்க வேண்டும் என கூறியது நினைவிருக்கலாம். அதோடு பாஜக தமிழக தலைமை யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பதை வெளிப்படையாக கூறாத நிலையில் மறைமுகமாக அதிமுகவுக்கு வாக்களிக்கும் சூழ்நிலையை உருவாக்கினார்கள்.

தேர்தல் முடிந்து கையில் வைத்த மை காயும் முன் தமிழக பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் அதிமுகவின் தேர்தல் வெற்றிக்கு ஜெயலதிதாவின் நிர்வாக திறமைதான் காரணம் என ஜால்ரா கொட்டினார் . ஆனால் ஜெயலலிதா கொடுத்த 200 ருபாய் பணம்தான் பாஜக வேட்பாளர்கள் தோற்க காரணமாக இருந்ததை வசதியாக மறந்தோ அல்லது மறைத்தோவிட்டார்.

தமிழக இந்து அமைப்புகளுக்கு என்றுமே ஜெயலலிதா மீது என்றுமே அனுதாபம் உண்டு , அவரின் சொந்த ஆன்மீக நாட்டங்களை வைத்து  நம் இந்து அமைப்புகளின் வளர்ச்சிக்கு ஜெயலலிதா உதவுவார் என்று இன்னமும் நாம் அப்பாவியாய் நம்ம்பிக்கொண்டிருப்பதன் பலனை இன்று ராமநாதபுரத்தில்  அனுபவிக்கிறோம்.... அனால் ஜெயலலிதா என்றுமே இந்துசமய அமைப்புகளை தனது அரசியல் ஆதாயத்திற்கு உபயோகப்படுத்தி வருகிறார் என்பது நம்மில் பலர்  ஏற்றுக்கொள்ள மறுக்கும் உண்மை. இன்னும் எவ்வளவு காலம் ஜெயலிதாவை நம்பப்போகிறோம்...

தென்தமிழக அளவில் RSS 'ன் பொறுப்பாளர்களின் பொதுக்குழுக்கூட்டம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நடந்துவருகிறது. 14-15 ஜூன் ஆகிய இரு நாட்களில் நடைபெறும் இக்கூட்டத்தின் ஒரு பகுதியாக காலை மற்றும் மாலை நேரங்களில் ஷாகா என்னும் பண்பாட்டு பயிற்சி நடைபெறும் . நேற்று வழக்கம்போல் நடைபெற்ற ஷாகா வில் கலந்து கொண்ட மாநில மற்றும் தேசிய அளவிலான RSS பொறுப்பாளர்கள் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என காரணம் காட்டி கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
rss1 small

இன்றும் (14.06.2014) நாளையும் RSSன் மாநில பொதுக்குழு கூட்டம் இராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டணம் பகுதியில் நடைபெற்றுவருகிறது. அதன் பகுதியாக வழக்கமாக நடைபெறும் மாலை நேர விளையாட்டு மற்றும் உடற்பயற்சி வகுப்பு (ஷாகா) அக்கடற்கரையில் நடைபெற்றது. இதில் சுமார் 350 பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அப்போது விரைந்து வந்த காவல்துறையினர் அந்த இடம் முழுவதையும் ஏதோ தீவிரவாதிகளை முற்றுகையிடுவது போல் அனைவரையும் சுற்றி வளைத்தனர். காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில் DSP அண்ணாமலை இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகியோர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிகிறது. DSP அண்ணாமலை மிகவும் தரக்குறைவான கெட்ட வார்த்தைகளை ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மீது உபயோக்கிக்க ஆர்.எஸ்.எஸ், அமைப்பினர் அதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். உடனடியாக அங்கு குழுமியிருந்த அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து ஒரு மண்டபத்தில் அடைத்தனர். இந்த நடவடிக்கையை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் போரட்டங்களை ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் நடத்தினர். நிலமை விபரீதமாக போவதை உணர்ந்த காவல்துறையினர் பிடித்தவர்களை அந்த மண்டபத்திலேயே விட்டுவிட்டு ஓடி விட்டனர்.
 rss 2 small

banner small

dindigul protest small

இந்த பிரச்சினை அதிகாரிகள் மட்டத்திலும் பூதாகாரமாக உருவெடுப்பதை உணர்ந்த காவல்துறையினர், முஸ்லீம் தீவிரவாதிகள் ஆர்.எஸ்.எஸ் முகாமின் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்த தயாரனாதால் ஆர்.எஸ்.எஸ்.னிரை காப்பற்றவே இந்த நடவடிக்கை என்று ஒரு கட்டுக்கதையை பரப்பி வருகின்றனர்.
  • குண்டு வீசி முஸ்லீம் தீவிரவாதிகள் தாக்கும் அளவிற்கு இராமநாதபுரத்தில் வலுபெற்றுவிட்டனர் என்றால் இந்த சட்ட ஒழுங்கு சீர்கேட்டுக்கு அரசு அதிகாரிகள் ராஜினாமா செய்வாரா?
  • குண்டுவீசி தாக்கவரும் தீவிரவாதிகளை பிடிப்பதற்கு காவல்துறையா? அல்லது தீவரவாதிக்கு பயந்து அப்பாவி மக்களை கைது செய்வதற்கு காவல்துறையா? தீவரவாதிகள் குண்டுவீச போகிறார்கள் என்றால் விவரம் தெரிந்து அரசு பயங்கரவாதிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
  • வலுவான அரசு தமிழக அரசு என்று மார்தட்டிக்கொள்ளும் முதல்வர் ஜெயலலிதா அவர்களே இதுதான் உங்கள் போலீஸ் நிர்வாகத்தின் இலட்சணமா?

இதற்கு முன் இந்த மாவட்டத்தில் சாமி ஊர்வலம் செல்ல அரசு அனுமதி மறுத்தது. முஸ்லீம்கள் வசிக்கும் பகுதியில் இந்துக்கள் நுழைய அனுமதியில்லை என்ற பெயர் பலகையை அனுமதித்தது. கோயில் அருகில் பசுவதை செய்ததை கண்டித்து புகார் கொடுத்த இந்துக்களை காவல் துறை கைது செய்தது. கலவரம் செய்யும் முஸ்லீம்கள் கேணிக்கரை காவல் நிலையத்தை தாக்கிய போது மாவட்ட கலெக்டர் கைக்கட்டி வேடிக்கைப் பார்த்தது.

இராமநாதபுரம் என்ற பெயரை RAMNOT என்று முஸ்லீம்கள் அழைப்பதை அரசு ஆதரித்து மகிழ்ந்தது. உலகத்திற்கே பாரதத்தின் உயர்வை நிலைநாட்டிய சுவாமி விவேகானந்தரின் நினைவு சின்னத்தை முஸ்லீம்களை ஆதரித்து பயங்கரவாதத்திலும் பிரிவினைவாதத்திலும் ஈடுபடுபவர்களை பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும், காங்கிரஸ்ம் எம்.எல்.எகளாகவும் எம்.பிகளாகவும் பஞ்சாயத்து தலைவர்களாகவும் வைத்து அரியனைவைத்து அழகுபார்த்தனர். இதன் விளைவு இந்த மாவட்டத்தின் தாலிபான் தலைவர் (மாவட்ட கலெக்டர்), பள்ளிகூடங்களுக்கு இந்து மாணவர்கள் இரட்சையோ,திலகமோ அணிந்து வந்தால் பாதுகாப்பு கொடுக்கமுடியாது ஆகையால் இவைகளை தடைசெய்கிறேன் என்று ”பட்வா” பிறப்பித்தார். இந்தத் தொடர் அவலங்களின் அடுத்தப்படி கடற்கரையில் கூட இந்துக்கள் கூட அனுமதியில்லை என்ற இழிநிலைக்கு கொண்டு சேர்த்துவிட்டது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் முல்லா, பேகம் ஆட்சிமாற்றம் இன்னும் எந்த நிலைக்கு நம் தமிழர்களை தள்ளுமோ?

ஆனால், பாரதியின் வாக்கு பாரதத்தில் பொய்த்ததில்லை. தர்மத்தின் வாழ்வுதனை ஜிகாத் (சூது) கவ்வும். மறுபடியும் தர்மமே வெல்லும். ஓட்டுக்காக பணத்திற்காக பதவிக்காக சிறுபான்மையினரை தாஜா செய்ய இந்துக்களின் அடிப்படை உரிமையை கைவைக்கும் சட்ட விரோத, தர்ம விரோத சக்திகளை வேரும் வேரடி மண்ணோடும் களையெடுக்க உறுதி பூணுவோம்.

நன்றி- vsrc

தென்மாநில RSS ன் பொறுப்பாளர் வினாயகம்ஜி உட்பட்ட பொறுப்பாளர்களை காவல்துறை கைதுசெய்த காட்சி.
யாருடைய தூண்டுதல் இது..... ???

இது போன்ற நிகழ்வு சமீப காலங்களில் காங்கிரசால் கூட நடத்தப்பட்டதில்லை...   உள்துறையை கையில் வைத்திருக்கும் ஜெயலலிதாவின் ஆணையின் பேரில் 450க்கும் மேற்பட்ட RSS பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் ராமநாதபுரத்தில் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். 

ராமநாதபுரம் தேவிபட்டிணத்தில் ஆர்.எஸ்.ஸ் ப்ராந்த பைட்டக் ( மாநில செயற்குழு ) கூட்டம் நடந்துவருகிறது. இதில் மாநில மற்றும் மாவட்டப்பொறுப்பாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இன்று மாலை பொது மைதானத்தில் நடந்த ப்ராத்தனா கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு கெடும் எனக் கூறி ராமநாதபுரம் மாவட்டக் காவல் துறை உதவி கண்காணிப்பாளர் அண்ணாமலை ஆழ்வார்  தலைமையில் ஆர.எஸ்.எஸ் மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட அனைவரும் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம்.

துலுக்கனின் ஒட்டு தமிழத்தில்  ஒன்றுக்கும் உதவாது என்று தெரிந்தும் தாஜா செய்கிறார்... மம்மி என்றுமே இந்து அமைப்புகளுக்கு ஆதரவு கொடுப்பதில்லை என்பதை நாம் என்று உணர்வது...?

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Friday 13 June 2014

லஞ்சம் வாங்கிய வழக்கில் மாட்டிய குன்னம் SSI ராஜேந்திரன்.

லஞ்சம் வாங்கிய குன்னம் சிறப்பு SI....... மாட்டிவிட்ட கணவன் மனைவி.

காவல் நிலையங்களில் புகார் கொடுக்கச்சென்றால் பிரியாணி முதல் ஆயிரக்கணக்கான பணம் வரை லஞ்சம் கொடுத்தால்தான் நடவடிக்கையே எடுக்கப்படும் நிலைமை என்பதை ஒருமுறை புகார் கொடுக்கச்சென்றவரிடம் கேட்டால் கூட காவல்துறைமீது கழுவி.. கழுவி.. ஊற்றுவார்கள்.

பணம் கொடுத்தால்தான் FIR பதிவு செய்யப்படும் நிலை. அதற்க்கு மேல் புகார் மீது நடவடிக்கை எடுக்க லஞ்சம்..... கைது செய்ய லஞ்சம்.... கைதுசெய்யாமல் இருக்க லஞ்சம்... என்று லஞ்சத்திலேயே படுத்து உருளும் காவல்துறை மீது புகார் கொடுக்க எல்லோரும் அச்சப்படுவதற்கு காரணம் லஞ்ச ஒழிப்புதுறை யிலும் லஞ்சம் இருப்பதுதான் காரணம்.

கரணம் தப்பினால் மரணம்....... காவல்துறை அதிகாரிகள் மீதே புகார் கொடுப்பவர்கள் மாட்டினால் பொய் வழக்கு போட்டு சிறையிலேயே தூக்கில் போடும் காட்சிகள் கூட இன்று காவல் நிலையங்களில் சர்வ சாதாரணமாக அரங்கேறும் நிலைமைதான் இங்கு நிதர்சனமான உண்மை.

காவல்துறை யால் பாதிக்கப்பட்டவர்கள் , காவல்துறை அதிகாரிகளை பழிவாங்க சரியான ஆயுதம் லஞ்ச வழக்கில் சிக்கவைப்பது அருமையான  வழி. ஏனெனில் இங்கு லஞ்சம் வாங்காத அதிகாரிகளை விரல்விட்டு எண்ணி விடலாம்.

குன்னத்தில் ஜோஸ்வா என்பவருக்கும் அவரின் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக அவரின் மனைவி கொடுத்த புகார் மீது ஜோஸ்வா மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.3000/- லஞ்சமாக குன்னம் காவல்நிலையத்தில் சிறப்பு S I  யாக பணி புரிந்துவரும் ராஜேந்திரன் கேட்க , அவரை லஞ்ச ஒழிப்புத்துறையில் மாட்டிவிட்டார் ஜோஸ்வா.

காவல்துறையால் பாதிக்கப்படுவோம் எனத்தெரிந்தும் லஞ்ச வழக்கில் மாட்டிவிட்ட ஜோஸ்வாவை வாழ்த்துவோம்.....

Wednesday 11 June 2014


பொறியியல் கலந்தாய்வுக்கான ரேண்டம் எண்ணை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள மாணவர் சேர்க்கை மற்றும் நுழைவுத் தேர்வு மையத்தில் காலை 9.45 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் ரேண்டம் எண்ணை வெளியிட்டார்.
மாணவர்கள் ரேண்டம் எண்களை, பல்கலைக்கழகத்தின் இணையதளமான www.annauniv.edu ல் தெரிந்துகொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு ஜூன் மாதம் 23-ஆம் தேதி தொடங்க உள்ளது. அன்றைய தினம் விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கப்பட்டு இரண்டு நாள்கள் நடைபெறும்.
பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூன் 27-ஆம் தேதி தொடங்கி ஜூலை 28-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 16-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. முன்னதாக ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ரேண்டம் எண் எதற்கு? ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரே கட் ஆஃப் மதிப்பெண் பெறும்போது, அவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்ற கேள்வி எழும்.
அப்போது கணிதப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
கணிதப் பாடத்தை அடுத்ததாக இயற்பியல், வேதியல் பாடங்களின் மதிப்பெண்களும் பலருக்கு சமமாக இருக்கும்போது, பிளஸ்-2 நான்காவது பாட மதிப்பெண் பார்க்கப்படும்.
நான்காவது பாட மதிப்பெண்ணும் சமமாக இருக்கும்போது, பிறந்த தேதி கணக்கில் கொள்ளப்படும். பிறந்த தேதியில் யார் மூத்தவரோ, அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பிறந்த தேதியும் சமமாக இருக்குமானால், ரேண்டம் எண் (சம வாய்ப்பு எண்) பயன்படுத்தப்படும். இது கம்ப்யூட்டர் மூலம் ஒதுக்கப்படும் 10 இலக்க எண் ஆகும். இந்த ரேண்டம் எண் மதிப்பு அதிகம் உள்ளவர் கலந்தாய்வுக்கு முதலில் அழைக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
 பொறியியல் கலந்தாய்வுக்கான முக்கிய தேதிகள்:
ரேண்டம் எண் வெளியீடு : ஜூன் 11
தரவரிசைப் பட்டியல் வெளியீடு : ஜூன் 16
விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் : ஜூன் 13 - 16
சரிபார்ப்பு
விளையாட்டுப் பிரிவினருக்கான தரவரிசை : ஜூன் 17
பட்டியல் வெளியீடு
விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு : ஜூன் 23, 24
மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு : ஜூன் 25
பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு : ஜூன் 27 முதல்
ஜூலை 28 வரை
பிளஸ்-2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான : ஜூலை 9 முதல்
கலந்தாய்வு 20 வரை v.kalathur seithi .
கல்லூரியின் ஆண்டுவிழா மலர்

கேரள மாநிலத்தில் பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா மலரில் ஹிட்லர்  புகைப்படத்துடன் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை அச்சடித்து வெளியிட்ட குற்றத்துக்காக கல்லூரியின் முதல்வர் உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டு விழா மலரில் நெகடிவ் பேஸஸ் என்ற தலைப்பில் சந்தனக் கடத்தல் வீரப்பன், ஹிட்லர், பயங்கரவாதி அஜ்மல் கசாப், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், ஒசாமா பின்லேடன் ஆகியோரது புகைப்படங்களுடன் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படமும் வெளியாகியிருந்தது.
பிரதமரை அவமதித்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது v.kalathur seithi .

பெரம்பலூர் மாவட்டத்துக்கு ஜூன் 13-ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொது நிறுவனங்கள் குழுவினர் வருகை தர உள்ளனர்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் (பொ) வி. ராஜன்துரை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்துக்கு வருகை தரும் சட்டப்பேரவை குழுவினர் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூர் கிராமத்தில் உள்ள சர்க்கரை ஆலையில் ஜூன் 13-ம் தேதி ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
தொடர்ந்து. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், பெரம்பலூர் சர்க்கரை ஆலை நிறுவனம் மற்றும் மாவட்டத்தில் உள்ள பொதுத்துறை நிறுவன அலுவலர்களுடன் கலந்துரையாடல் மற்றும் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது என்றார் அவர் v.kalathur seithi .

ஊரகப் பகுதிகளில் உள்ள 18 முதல் 35 வயதிற்குள்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய தொழிற்திறன் பயிற்சி அளிக்க பயிற்சி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் (பொ) வி. ராஜன்துரை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:  தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆஜீவிகா திறன் திட்டத்தின் கீழ், ஊரகப் பகுதிகளில் உள்ள 18 முதல் 35 வயதிற்குள்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய தொழிற்திறன் பயிற்சி அளிக்க பயிற்சி
நிறுவனங்கள், வேலைவாய்ப்பு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.  ஆஜீவிகா திறன் விதிமுறைகள் 2013-ன் படி தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் நிரந்தர பதிவு எண் பெற்ற நிறுவனமாக இருக்க வேண்டும்.  இந்திய அறக்கட்டளைச் சட்டம் அல்லது மாநிலச் சங்கங்கள் பதிவுச் சட்டம் அல்லது மாநிலக் கூட்டுறவு சங்கங்கள் அல்லது நிறுவனங்கள் சட்டம் 1956ன் கீழ் பதிவு பெற்ற
ஒரு அமைப்பாக இருக்க வேண்டும்.
மாவட்ட, மாநில அளவிலான அரசு, தன்னாட்சி அதிகாரம் பெற்ற நிறுவனங்கள். விண்ணப்பிக்கும் பயிற்சி பாடத்திட்டத்தில் குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவமுள்ள நிறுவனமாக இருக்க வேண்டும். பயிற்சி நிறைவடைந்த பின்  80 சத பயிற்சியாளர்களுக்கும், ரூ. 6 ஆயிரம் சம்பளத்தில் உடனடி வேலைவாய்ப்பு பெற்றுத்தர வேண்டும்.  சமூக அக்கறை கொண்ட நிறுவனமாகவும், போதுமான உள்கட்டமைப்பு, பயிற்றுநர்கள், பயிற்சிக் கூடம், உபகரணங்கள் கொண்ட நிறுவனமாக இருக்க வேண்டும்.
விவரங்களுக்கு, பயிற்சி நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் பயிற்சி நிறுவனங்களாக பதிவு செய்ய
 http:aajeevikaskills.com இணையத்தில் உரிய விவரங்களுடன் ஜூன் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் v.kalathur seithi .

-தினமணி.

Monday 9 June 2014


தமிழக அரசு உத்தரவின் படி, 2014-15ம் கல்வியாண்டில் வேப்பந்தட்டையில் தொடங்கப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தற்போது மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கூட்டரங்கில் நடத்தப்பட்டு வருகிறது.

செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு பிகாம், பிஏ தமிழ் ஆகிய வகுப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்படுகிறது. வேப் பந்தட்டை மற்றும் அரியலூர் அரசுக் கல்லூரிகளின் பேராசிரியர்கள் கொண்ட குழு கலந்தாய்வுப் பணிகளை மேற் கொண்டு தகுதியான மாணவர்களை சேர்க்க உள்ளனர். இதனை முன்னி ட்டு சம்பந்தப்பட்ட வகுப்புகளில் சேர்வதற்காக விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவிகளில் அழைப்புக் கடிதங்கள் பெற்றவர்களும், கடிதங்கள் கிடைக்க பெறாதவர்களும் கலந்துகொள்ளலாம்.
பிளஸ் 2 முடித்ததற்கான மதிப்பெண் சான்றிதழ், மாற் றுச் சான் றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண் டும். உரிய பாடத்திற்கு உரிய நேரத் தில் நடை பெறும் கலந்தாய்வில் கலந்துகொள்ளாதவர்கள் சேர்க்கை க்கான வாய்ப்பை இழந்துவிடுவர்.
எனவே, குறித்தநேரத்தில் தவறாமல் கலந்தாய்வில் கலந்துகொண்டு பயன் பெற வேண்டும் என்றார்  v.kalathur seithi . 9

10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் ஜூன் 12-ம் தேதி வழங்கப்படுகிறது. அந்தந்தப் பள்ளிகளில் ஆன்லைன் மூலம் சான்றிதழ்களை பதிவு செய்துகொள்ள வேலைவாய்ப்புத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26 முதல் ஏப். 9 வரை நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் 124 பள்ளிகளைச் சேர்ந்த 4,909 மாணவர்களும், 4,252 மாணவிகளும் என மொத்தம் 9,161 பேர் தேர்வெழுதினர். இதில் 4,457 மாணவர்களும், 4,001 மாணவிகளும் என மொத்தம் 8,458 பேர் தேர்ச்சிப் பெற்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேரடியாக மற்றும் தட்கல் முறையில் பணம் செலுத்தி விண்ணப்பித்து தேர்வெழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியான நாளிலேயே மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், பள்ளிகள் மூலம் நேரடியாகத் தேர்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கு ஜூன் 12ம் தேதி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
இதை முன்னிட்டு தேர்வெழுதிய மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை அந்தந்தப் பள்ளிகளிலேயே ஆன்லைன் மூலம் பதிய வேலைவாய்ப்புத் துறை அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது.
மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் குடும்ப அட்டையைக் கொண்டு செல்ல வேண்டும். இதர ஆவணங்களான மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் ஆகியவை பள்ளியிலேயே உள்ளதால், கணினிப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், அலுவலர்களால் சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் பதியலாம்.
பதிவு விவரங்களை முழுமையாகச் செயல்படுத்த வசதியாக வேலைவாய்ப்புத் துறை சார்பில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு, அனைத்துப் பள்ளி கணினி ஆசிரியர்கள், கணினி இயக்குநர்களுக்கு பதிவு விவரம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்ற பிறகு, அவற்றை பதிவு செய்யும் மாணவர்கள் தங்களது குடும்ப அட்டையிலுள்ள முகவரிப்படி பதியலாம்.
15 நாள்களுக்கு செய்யப்படும் பதிவு 12-ம் தேதி கணக்கிலேயே வைக்கப்படும் என்பதால் ஜூன் 27-க்குள் மாணவர்கள் தங்களது சான்றிதழ்களைப் பதிவு செய்துகொள்ளலாம் v.kalathur seithi .

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர் வட்டத்தில் ஜூன் 11 முதல் 13-ம் தேதி வரை ஜமாபந்தி நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் (பொ) வி. ராஜன்துரை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 11-ம் தேதி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையில் குரும்பலூர் (தெ), குரும்பலூர் (வ), மேலப்புலியூர் (கி), மேலப்புலியூர் (மே), லாடபுரம் (மே), லாடபுரம் (கி), அம்மாப்பாளையம், களரம்பட்டி, சத்திரமனை ஆகிய கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெறும்.
வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உடும்பியம், பூலாம்பாடி (கி), பூலாம்பாடி (மே), வெங்கனூர், தழுதாழை, அரும்பாவூர், மலையாளப்பட்டி, தொண்டமாந்துறை (மே), தொண்டமாந்துறை (கி), வெங்கலம் (மே), வெங்கலம் (கி), வேப்பந்தட்டை (வ), வேப்பந்தட்டை (தெ), வெண்பாவூர் ஆகிய  கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெறும்.
ஆலத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வி. ராஜன்துரை தலைமையில் நாரணமங்கலம், நாட்டார்மங்கலம், செட்டிக்குளம், மாவிலிங்கை, சிறுவயலூர், நக்கசேலம், எலந்தலப்பட்டி, டி.களத்தூர், புதுஅம்மாபாளை யம், கண்ணப்பாடி, தேனூர், இரூர், பாடாலூர் (மே), பாடாலூர் (கி) ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறுகிறது.
குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் ப. மதுசூதனன் ரெட்டி தலைமையில் திருமாந்துறை, பென்னகோணம் (வ), பென்னகோணம் (தெ), வடக்கலூர், ஒகளூர் (மே), ஒகளூர் (கி), சு.ஆடுதுறை, அத்தியூர் (வ), அத்தியூர் (தெ), கிழுமத்தூர் (வ), கிழுமத்தூர் (தெ), அகரம் சீகூர், வசிஸ்டபுரம், கீழப்பெரம்பலூர், வயலப்பாடி ஆகிய கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெறும்.
அதைத் தொடர்ந்து ஜூன் 12, 13-களில் இதர கிராமங்களுக்கான ஜமாபந்தி நடத்தப்படுகிறது. ஜமாபந்தியின் இறுதிநாளான 13-ம் தேதி வருவாய்த் தீர்வாயம் முடிவுற்றதும், விவசாயிகள் மாநாடு நடைபெறும்.  v.kalathur seithi .

Sunday 8 June 2014


பெரம்பலூரில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும்கூட்டம் வரும் 10ம் தேதி நடக்கிறது என பெரம்பலூர் கோட்ட செயற் பொறியாளர் தேவராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது :
பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் தமிழ் நாடு மின்சார வாரியத்தின் மேற்பார்வைப் பொறியாளர் வளர்மதி தலைமையில் நடை பெறுகிறது. கூட்டம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பெரம்பலூர் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் 10ம் தேதி காலை 11மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெறுகிறது. இதில் பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர் தங்களுடைய குறைகளை நேரில் முறையிட்டு பயன் பெறலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார் v.kalathur seithi .

-தினகரன்.
விதை நெல் சுத்திகரிப்பு எந்திரம்.

வேப்பந்தட்டை யூனியன் அலுவலக வளாகத்திற்குள், வேளாண் அலுவலர் அலுவலகத்தை யொட்டி விதைநெல் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

இந்த விதைநெல் சுத்திகரிப்பு நிலையத்தில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்க ளிலுள்ள 121 ஊராட்சிகளில் இருந்தும் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்ட நெல் ரகங்கள் விதை நெல்லாக தரம் பிரிப்பதற்காக கொண்டு வந்து சுத்திகரிக்கப்படும். அறுவடை செய்து மூட்டைகளில் கொண்டு வரப்பட்டு, இங்குள்ள நவீன எந்திரத்தில் கொட்டப்படும் நெல்லில் இருந்து பதர்கள், தூசுகள், கற்கள், உடைந்த நெல் ஆகியவை தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு, விதைச்சான்று ஆய்வுத் துறை பரிசோதனைக்குப் பிறகு அரசு முத்திரையிடப்பட்ட, சுத்தமான விதை நெல் சாக்குகளில் சேகரிக்கப்படுகிறது.
சேகரிக்கப்பட்ட நெல்லிற்கு கிலோவுக்கு ரூ.5 மானிய விலை கொடுத்து விவசாயிக ளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் இவை, ஒவ்வொரு சாக்கிலும் 51 கிலோ எடையுடன் நிரப்பப்பட்டு அனைத்து வட்டாரங்களிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த விதை நெல் சுத்திகரிப்பு நிலையத்தில் 20 டன்நெல் மூட்டைகளை மட்டுமே அடுக்கி வைக்க முடியும். ஆனால் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் கொண்டு வரப்படும் சுமார் 200 டன் நெல் மூட்டைகளை இங்கு கொள்முதல் செய்ய முடியாது. இதனால் விதை சுத்திகரிப்பு நிலையம் இடப்பற்றாக்குறையால் திணறி வந்தது.
இந்நிலையில் விதை சுத்திகரிப்பு நிலையத்திற் கான சேமிப்புக் குடோன் களை அமைப்பதற்கு கலெக்டர் தரேஸ்அகமது நிதி வழங்குவதற்கென சிறப்பு ஏற்பாடு செய்து, வேப்பந்தட்டையில் புதிதாக 2 குடோன்களையும், பெரம்பலூர் தாலுகா, களரம்பட்டியில் ஒரு குடோ னும் என 3 குடோன்கள் அமைப்பதற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்படுமென அறிவித்துள்ளார். இதனால் இடப்பற்றாக்குறை நீங்குவதோடு, விவசாயிகள் விதை நெல்லை சிரமமின்றி வாங்குவதற்கான கூடுதல் வசதியும் கிடைக்கும் என்பதால் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளும், வேளாண்மைத் துறையி னரும்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர் v.kalathur seithi .

-தினகரன்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் ஜூன் 12-ம் தேதி முதல் பெண்களுக்கு மெஹந்தி கலைப் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற 18 முதல் 40 வயதிற்கு குறைவாகவும், 8-ம் வகுப்பு படித்தவராகவும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.
தொடர்ந்து 15 நாள்கள் நடைபெறும் பயிற்சி காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். பயிற்சி காலத்தில் மதிய உணவும், பயிற்சி முடிந்தவுடன் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி சான்றிதழும் வழங்கப்படும். பயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள் பெரம்பலூர் ரெங்கா நகரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குநரிடம் பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.
குடும்ப அட்டை, வாக்களர் அடையாள அட்டை, பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல், 4 பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 277896 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் v.kalathur seithi .  

-தினமணி.

பண்ணை முறையில் லாபகரமான நாட்டுக்கோழி வளர்ப்பு என்ற தலைப்பின் கீழ், ஜூன் 12-ம் தேதி ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில், வர்த்தக முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் விற்பனை யுக்தி, அதற்கான முதலீடு, கொட்டகை அமைத்தல், தீவன மேலாண்மை, நோய் மேலாண்மை உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வமுள்ள விவசாயிகள், 8754114165 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றார் v.kalathur seithi .

-தினமணி.

பெரம்பலூர் அருகே தண்ணீர் பந்தலில் ஞாயிற்றுக்கிழமை பேருந்து மோதி இளைஞர் உயிரிழந்தார். தொடரும் விபத்துகளைத் தடுக்க வேகத்தடை அமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
பெரம்பலூர் அருகேயுள்ள இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் கிருஷ்ணமூர்த்தி (29).
இவர், ஞாயிற்றுக்கிழமை மாலை திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தண்ணீர்ப் பந்தல் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, திருச்சியிலிருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் இறந்தவரின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். புகாரின்பேரில், பெரம்பலூர் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.
இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் ஆத்திரமடைந்து, அடிக்கடி விபத்து நிகழும் பகுதியில் வேகத்தடை அமைக்கக் கோரியும், அமைக்கத் தவறிய போலீஸாரை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதைத் தொடர்ந்து, மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதனால், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது v.kalathur seithi .