Saturday 8 March 2014

திருமாந்துறை டோல்கேட்டில் ரூ.4½ லட்சம் சிக்கியது
பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி அனுமதியின்றி பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என்று அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் திருமாந்துறை கைகாட்டியில் வாகன சோதனை சாவடியில் பெரம்பலூர் மாவட்ட பறக்கும் படை தனி தாசில்தார் கஜேந்திரன் மற்றும் அதிகாரிகளுடன் சோதனை மேற்கொண்டார்.
அப்போது கடலூர் மாவட்டம் அனுமந்தராமபுரத்தை சேர்ந்த ஜெய்சங்கர் மனைவி சுமதி (வயது 30) திருச்சிக்கு ரூ.2½ லட்சம் பணத்துடன் நகை வாங்குவதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். இந்த பணத்துக்கான உரிய ஆவணம் அவரிடம் இல்லை. எனவே இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து பெரம்பலூர் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர். இதே போல் புதுச்சேரி ஆனந்த் நகரை சேர்ந்த முருகன் (58) ரூ.2 லட்சம் பணத்துடன் பழனிக்கு சென்று கொண்டிருந்தார். உரிய ஆவணம் அவரிடம் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட பறக்கும்படை தனி தாசில்தார் தமிழ்செல்வன், செஞ்சேரி பிரிவு சாலையில் வாகன சோதனை செய்தார். அப்போது துறையூரை அடுத்த செங்காட்டுப்பட்டியை சேர்ந்த மதுபாலன் கொண்டு வந்த ரூ.2 லட்சத்து 69 ஆயிரத்து 840 கொண்டு சென்றார். உரிய ஆவணம் அவரிடம் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

நன்றி-தினத்தந்தி
           vkalathur வ.களத்தூர்  விவேகானந்தர் இளைஞர் மன்றம் சார்பில்மாரியம்மன் கோவிலில்முள்வேலி அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. பொங்கல் விளையாட்டு விழா வ.களத்தூரில் மன்றம் சார்பில் நடத்தப்பட்டது நினைவிருக்கலாம். பொங்கல் விளையாட்டு போட்டிகளுக்காக நிதி வசூலித்ததில் மீதமிருந்த பணத்தைக்கொண்டு மாரியம்மன் கோவிலில் உள்ள மரம் செடிகொடிகளை காக்கும்பொருட்டு முள்வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

         சென்றவருடம் மாரியம்மன் கோவில் திடலில் தேக்கு, தென்னை, வேம்பு மற்றும் பூச்செடிகள் விவேகானந்தர் மன்றம் சார்பில் நடப்பட்டு தற்போது நன்கு தழைத்து வளர்ந்துள்ளன. அதனை காக்கும் பொருட்டு தற்போது முள்வேலி அமைக்கும் பணி நடைபெறுகிறது. 


Friday 7 March 2014

காந்தி படுகொலைக்கும் RSS அமைப்புக்கும் தொடர்பு இல்லை என தெளிவாக உச்சநீதிமன்றம் தீர்ப்புவழங்கி ஐம்பது வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஆனால்  RSS மீது அவதூறு சுமத்தி முஸ்லிம்களை தாஜா செய்யலாம் என ராகுல்காந்தி கருதி  காந்தி கொலையையும் RSS யும் தொடர்புபடுத்தி பேசியுள்ளார் . இவரின் முப்பாட்டன் பண்டித நேரு RSS தான் காந்தியின் கொலைக்கு காரணம் என குற்றம் சாட்டி தடைசெய்தார். அவரே RSS தேச சேவையை பாராட்டி 1963 ம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர அணிவகுப்பில், RSS அமைப்பை முழு சீருடையுடன் கலந்துகொள்ள அழைத்தார் என்பது  என்பது வரலாறு.

            இப்போது  மகாராஷ்ட்ரா மாநிலம் பிவாண்டியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் நேற்று பேசிய ராகுல்ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் மகாத்மா காந்தியை கொலை செய்தனர். ஆனால்  இப்போது அவர்கள் காந்தியை பற்றி பேசுகின்றனர். என்று கூறினார்,
இந்த நிலையில், ராகுல் காந்தியின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு ஆர்.எஸ்.எஸ் செய்தி தொடர்பாளர் ராம் மாதேவ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், காந்தி கொலை தொடர்பாக பொறுப்பற்ற முறையில் கருத்து தெரிவித்த ராகுல் காந்தி மீது நாங்கள் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்போம். தேர்தல் கமிஷனிடம் புகார் அளிப்போம் என்றார்.

இந்துக்களால் மிகவும் புனிதமாக போற்றப்படும் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனிமலையில் அறநிலையத்துறையின் ஊழல்களை கண்டித்தும், பழனிமலை இஸ்லாமிய மயமாக்கப்படுவதையும் கண்டித்தும் பழனி மலைக் கோவில் பாதுகாப்பு பேரவை(ப.ம.கோ.பா.பே) சார்பில் இன்று (04.03.2014) மாபெரும் கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட இணையமைப்பாளர் திரு. மூர்த்தி அவர்கள் தலைமை தாங்கினார். திரு.சுப்பிரமணியம் அவர்கள் முன்னிலை வகித்தார். பழனி மலைக் கோவில் பாதுகாப்பு பேரவை சார்பில் திரு. காளிங்கராயன், திரு. செந்தில்குமார், திரு. கனகராஜ், திரு. தீனதயாளன், திரு. ஜெகன், திரு. திருமலைச்சாமி ஆகியோரும், வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் ஆலோசகர் திரு இராம நம்பிநாராயணன் அவர்களும் கலந்து கொண்டு கண்டன உரை அளித்தனர். திரு. .சூர்ய துரைராஜ் அவர்கள் வரவேற்புரையும், திரு.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நன்றியுரையும் நிகழ்த்தினார்கள். இந்த போராட்டத்தில் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தை குறித்த வீரத்துறவி இராம கோபாலன் அவர்களின் அறிக்கை பின்வருமாறு:
palani protest gopalji
//ஆறுபடை வீடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு பழனி தண்டாயுதபாணி திருக்கோவில், ஊழல் மிகுந்த நிர்வாகத்தினாலும், இஸ்லாமிய மயமாக்கலினாலும், சீர்கெட்டு வருகிறது.

பழனி மலையில் பக்தர்கள் நடந்து செல்லும் படிக்கட்டுகளிலும், யானைப் பாதையிலும், முஸ்லிம்கள் கடைகள் வைத்து பக்தர்களுக்கு இடையூறு செய்வதால், அவைகளைக் காலி செய்யும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அறநிலையத்துறை கண்டுகொள்ளாமல் முஸ்லிம்களுக்கு ஆதரவாக உதவி செய்து வருகிறது. நீதிமன்ற உத்தரவை மதித்து, மலைப்பாதையை ஆக்கிரமித்துள்ள கடைகளை நிர்வாகம் உடனடியாகக் காலி செய்யவேண்டும்

தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையால் நடத்தப்படும் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில், விரிவுரையாளர் பணிக்கு, பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பணியிடத்தை முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளனர். இதன்மூலம் இந்து பக்தர்களின் நிதியில் நடத்தப்படும் கல்லூரி, பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டது. இந்த இந்துவிரோத முஸ்லிம் இட ஒதுக்கீட்டை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

பழனி இடும்பன்கோயில் மலையடிவாரத்தில், நுழைவாயிலிலிருந்து 50 அடி தூரத்திற்குள் மதுபானக்கடையை அரசு நடத்தி வருகிறது. இதை விசாரித்து நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தும், அந்த உத்தரவை செயல்படுத்தாமல் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்த மதுபானக் கடையை அகற்றி, பழனியைக் கோயில் நகரமாக அறிவிக்க வேண்டும்.

பழனியாண்டவர் கோயிலில் கோதானம் கொடுப்பவர்களிடமிருந்து, பசுக்களைப் பராமரிக்க பசுவுக்கு ரூ.1000 வாங்கப்படுகிறது. இந்தப் பசுக்கள் சரியான முறையில் பராமரிக்கப் படுவதில்லை. தானமாக வந்த பசுக்கள் இப்போது கோசாலையிலும் காணவில்லை. அவை எங்கு மாயமாயின என்று தெரியவில்லை. இந்த பாதகச் செயலைச் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பஞ்சாமிருதம் தயாரிப்பு மற்றும் விற்பனை, வாகன நிறுத்தக் கட்டணம், சிறப்பு தரிசனம் என்று கைவைக்குமிடத்திலெல்லாம் பணத்தைப் பிடுங்கி, அதில் ஊழல் செய்து வருகிறது அறநிலையத் துறை. பல நூறு கோடிகள் காணிக்கையாக வரும் இந்தத் திருக்கோயிலில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக முறையான தணிக்கை நடத்தப்படவில்லை. எனவே, இந்துப் பிரதிநிதிகள், அரசு தணிக்கை அதிகாரிகள் (CAG) அடங்கிய குழு அமைக்கப்பட்டு, வெளியார் தணிக்கை (external audit) செய்யப்பட்டு, அதன் விவரங்கள் வெளியிடப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை அரசு கவனத்தில்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


வீரத்துறவி இராம.கோபாலனுக்காக

பால.கௌதமன்
பழனி
04.03.2014//

நன்றி-http://www.vsrc.in/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/item/206-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/itemid-140

Thursday 6 March 2014

லேப்டாப்பை பராமரிக்க சிறந்த வழிமுறைகள்..!

கணினி யுகத்தில் நாம் வாழ்கிறோம்.. ஒவ்வொருவரிடத்திலும் மொபைல், கணினி போன்றவைகள் அத்தியாவசியமான பொருட்களாக மாறிவிட்டது. ஒவ்வொரு நிமிடமும் கணினியைப் பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வருகின்றன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் லேப்டாப்..
Important tips to maintain laptop

லேப்டாப் தனிப்பட்ட முறையில் வாங்கிப் பயன்படுத்தி வரும் அதே வேளையில் படிக்கும் மாணவர்களுக்காக அரசும் இலவசமாக லேப்டாப்களை வழங்கி வருகிறது. ஆக, லேப்டாப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே உள்ளது என்பதில் சந்தேகமில்லை..


ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்தில் மிக எளிதாக எடுத்துச் சென்று பயன்படுத்த முடிவதால் மேசைக் கணினிகளில் பயன்பாடு வெகுவாக குறைந்துவருகிறது.. லேப்டாப் பயன்பாடு அதிகரிக்கும் அளவிற்கு அதை பராமரிப்பில் பெரும்பாலானோர் கவனம் செலுத்துவதில்லை..

நன்கு பராமரிக்கப்படும் லேப்டாப் விரைவில் பழுதடைவதில்லை.. பராமரிப்பில்லாமல் பயன்படுத்தும் லேப்டாப் விரைவில் பழுதடைந்துவிடும். அவ்வாறு விரைவாக லேப்டாப் பழுதடையாமல் இருக்கச் செய்வதற்கான பயனுள்ள வழிமுறைகளை தெரிந்துகொள்வோம்.

மடிக்கணினி திரைப் பாதுகாப்பு:

கணினியில் மிக முக்கியமானதொரு பாகம் கணினித் திரைதான்.. அதில் பார்த்துதான் அனைத்தை வேலைகளையும் மேற்கொள்கிறோம். கணினித் திரையை சுத்தமாக வைத்திருக்க மெல்லிய 'சில்க்' துணிகளைப் பயன்படுத்தலாம்.. அல்லது அதற்கென இருக்கும் Screen Cleaning Liqued பயன்படுத்தி காட்டனால் துடைத்தெடுக்கலாம்.

தவிர்க்க வேண்டியவை:

கரடு முரடான துணிகளையோ, அல்லது வெறும் கைகளையோ பயனபடுத்தி துடைக்க கூடாது. இதனால் கணினித் திரையில் கீரல் விழும், கைத்தடங்கள் அதில் பதிந்துபோகும். மேலும் அழுத்தமாக துடைப்பதால் கணினித் திரைக்கு சேதம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.

தூசி மற்றும் ஈரப்பதம்:

பொதுவாகவே அனைத்து கணினிகளும் தூசி மற்றும் ஈரப்பதத்தால் பாதிக்கபடுகின்றன. குறிப்பாக பயணங்களின்போது லேப்டாப்பை பயன்படுத்தக்கூடிய இடம் நல்ல காற்றோட்டமான சூழ்நிலையாக இருக்க வேண்டும்.. அதோடு அங்கு ஈரப்பதம் இல்லாம் சாதாரண சூழ்நிலையாக இருக்க வேண்டும்.. தொடர்ந்து ஈரப்பதம் மற்றும் காற்றோட்டமில்லாத இடங்களில் லேப்டாப் கணினியை பயன்படுத்தும்போது அதனால் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

ஆண்டி வைரஸ் ரொம்ப முக்கியம்:

வைரஸ் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதும் நம் கடமை. பல ஆயிரம் மதிப்பு வாய்ந்த மடிக் கணினியை பாதுகாக்க ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்து நல்லதொரு ஆன்டி வைரஸ் சாப்ட்வேர் வாங்குவது தவறில்லை. அதனால் நல்லதொரு ஆன்டி வைரஸ் சாப்வேர் ஒன்றை வாங்கி இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள். அவ்வாறு கட்டண வைரஸ் தடுப்பு மென்பொருளை பயன்படுத்தும்பொழுது வைரஸ் தாக்குதல்களிலிருந்து உங்களுடைய லேப்டாப்பிற்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கிறது.

உணவுப் பொருட்களை தவிருங்கள்:

மடிக் கணினியைப் பயன்படுத்திக்கொண்டே சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவதோ, டீ, கூல்டிரிங்ப் போன்ற பான வகைகளை அருந்துவதோ கூடாது.. அவ்வாறு செய்வது உங்கள் லேப்டாப்பிற்கு நீங்களே உருவாக்கும் ஆபத்து..

லேப்டாப் பேக்:

வெளியில் பாதுகாப்பாக லேப்டாப்பை எடுத்து வைக்க தகுந்த லேப்டாப் பேக்கைப் பயன்படுத்துங்கள். லேப்டாப்பின் அளவிற்கு தகுந்த மாதிரியான போதுமான அளவில் லேப்டாப் பேக் இருக்க வேண்டும். முதுகில் மாட்டிச் செல்ல ஏதுவான லேப்டாப் பேக் லேப்டாப்பை பாதுகாப்பாக கொண்டு செல்ல உதவும்.

ஹபர்னேட் நிலை:

பணிக்கு இடையே சிறுது நேரம் அவசகாசம் எடுத்துக்கொள்ளும் நிலையில், (உதாரணமாக உணவு எடுத்துக்கொள்ள செல்வதற்கு முன்பு, தொலைபேசியில் அதிக நேரம் பேசும் சூழல்) உங்கள் லேப்டாப்பை ஹைபர்னேட் நிலையில் வைப்பது சிறந்தது.. இதனால் அதிக மின்சாரம் சேமிக்கப்படுவதுடன் லேப்டாப்பும் பாதுகாக்கப்படும்.

தொடர்ச்சியான பயன்பாட்டை தவிருங்கள்:

தொடர்ச்சியாக மடிக்கணினியை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அதிகபட்சமாக 8 மணி நேரம் வரைக்கும் தொடர்ச்சியாக பயன்படுத்தலாம்.. எட்டு மணி நேரத்திற்கும் அதிகமாக இடைவிடாமல் கணினியை பயன்படுத்திக்கொண்டே இருந்தால் விரைவில் மடிக் கணினி வெப்பமடைந்துவிடும். இதனால் விரைவிலேயே கணினியின் ஆயுட்காலம் குறைய வாய்ப்புள்ளது.

ஃபையர் வால் பாதுகாப்பு:

பொதுவாக எல்லா மடிக்கணினிகளிலும் ஃபையர்வால் நிறுவப்பட்டே விற்பனைக்கு வருகிறது. ஃபையர்வால் பாதுகாப்பு மிக முக்கியம். கணினியின் தலைமைக் காவலனாக இது செயல்படுகிறது.. எந்த வகையிலும் உங்கள் கணனி சேதாரமாகாமல் இருக்க இது பயன்படுகிறது. உங்கள் கணினியில் பையர்வால் இல்லையெனில் தனியாக வாங்கியோ அல்லது இணையத்தில் தரவிறக்கம் செய்தோ உங்கள் கணினியல் நிறுவிக்கொள்ளுங்கள்.

பரிசோதனை:

வருடத்திற்கு ஒருமுறையாவது உங்களுடைய லேப்டாப்பை சர்வீஸ் செய்வது நல்லது.. அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் சென்டரில் லேப்டாப்பை கொடுப்பது புத்திசாலித்தனம்.

லேப்டாப் மேடை:

வீடுகள், மற்றும் அலுவலகங்களில் லேப்டாப்பை பயன்படுத்தும்பொழுது, அதற்கென தயாரிப்பட்ட மேடைகளைப் பயன்படுத்துங்கள். தற்பொழுது லேப்டாப் ஸ்டேன்டுகள் பலவிதங்களில் கிடைக்கிறது. அதனால் லேப்டாப் சூடேறுவதை குறைப்பதோடு, பயன்படுத்தவும் எளிதாக இருக்கும்.
பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு மார்ச் 25}க்குள் விண்ணப்பிக்கலாம்.
பி.எட் முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு மார்ச் 28-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்கள், பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் புதன்கிழமை (மார்ச். 5) முதல் விநியோகிக்கப்படுகிறது.
இத்தேர்வில் பங்கேற்க விரும்புவோர், பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ரூ. 50 செலுத்தி விண்ணப்பப்படிவத்தினைப் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பப் படிவங்கள் மார்ச் 5 முதல் 25-ம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளது.
தேர்வுக்கட்டணம்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவருக்கு ரூ. 250-ம், இதர பிரிவினருக்கு ரூ. 500-ம் தேர்வுக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கட்டணத்தை ஏதேனும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் செலுத்தி வங்கி வரைவோலை பெற வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் வங்கி வரைவோலையை இணைத்து, வருகிற 25-ம் தேதி மாலை 5 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக ஒப்படைக்க வேண்டும்.
 28-ம் தேதி நடத்தப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறக் கூடிய தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் தேர்வுத்துறையால் பின்னர் தெரிவிக்கப்படும் என கல்வித்துறை அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி-தினமணி
வேப்பந்தட்டை அருகே உள்ள பசும்பலூர் கிழக்கு காலனித் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி மகன் சக்திவேல் (27). விவசாயத் தொழிலாளி. வெள்ளுவாடி கிராமம் சோழன் நகரை சேர்ந்த ஆறுமுகம் மகள் கவிதா (15) 10-ம் வகுப்பு மாணவி.  கவிதாவும், சக்திவேலும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனராம். இதனிடையே, திருமணம் செய்து வைக்கக்கோரி கவிதாவின் பெற்றோரிடம் சக்திவேல் தெரிவித்ததற்கு, அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சக்திவேல் புதன்கிழமை விஷம் குடித்தார். இதையடுத்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் புதன்கிழமை இரவு உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை பெரியசாமி அளித்த புகாரின்பேரில், வி. களத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரிமுத்து வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்

நன்றி-தினமணி.

Wednesday 5 March 2014

இந்திய அரசியலைப்புச் சட்டம்  எல்லா குடிமக்களுக்கும் அடிப்படை சம உரிமைகளையும்,  வாய்ப்புகளையும் வழங்கியுள்ளது.  ஆனால்,  தொடர்ந்து பல பத்தாண்டுகளாக மத்தியில் ஆட்சி புரிந்து வந்த காங்கிரஸ் கட்சியும் இன்னபிற போலி மதச்சார்பின்மை கட்சிகளும்   சிறுபான்மை மதத்தினரை,  குறிப்பாக இஸ்லாமியர்களை தாஜா செய்வதற்காக சட்டங்களையும்  நெறிமுறைகளையும்  ஒடித்து வளைத்து திரித்து வந்துள்ளனர்.
இஸ்லாமியர்களை  சுயமரியாதை கொண்ட குடிமக்களாகக் கருதாமல் தாஜா செய்ய வேண்டிய வாக்கு வங்கிகளாகவே  இந்தக் கட்சிகள் பாவித்ததால்,  இரண்டு தீய விளைவுகள் ஏற்பட்டுள்ளது.  ஒன்று,  இந்தியாவில் பெரும்பான்மை மதத்தினராக உள்ள  இந்துக்களுக்கு  கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் என்று பல துறைகளிலும்  அநீதி இழைக்கப்  பட்டுள்ளது.  இரண்டு,  ஏற்கனவே ஆக்கிரமிப்பு  மனநிலை கொண்ட கிறிஸ்தவ, இஸ்லாமிய மத அதிகார பீடங்கள் இந்த சலுகைகள் ஏதோ தங்களுக்கு பட்டயமளிக்கப் பட்ட உரிமைகள்  என்ற அளவில் அராஜகப் போக்குடன் நடந்து கொள்ளவும் இது வழி செய்திருக்கிறது.
இந்த பிரசினையின்  சில அம்சங்களை விளக்கும் முகமாக  தில்லியைச் சேர்ந்த சமர்த் டிரஸ்ட் என்ற அமைப்பு  ”தி மெஜாரிடி ரிப்போர்ட்”  என்ற அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின் தமிழ் வடிவம் http://www.tamilhindu.com/wp-content/uploads/2014/03/the-majority-report-tamil.pdf 

நன்றி-http://www.tamilhindu.com/

 vkalathur வ.களத்தூரில் வரும் மார்ச்-9 அன்று வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க சிறப்புமுகாம் நடைபெருகிறது . இதனைபயன்படுத்தி , இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் மற்றும் பெயர் விடுபட்டவர்கள் தங்கள் பெயரை பதிவுசெய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தற்போதைய பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்க......... இதில் சொடுக்குங்கள் http://vkalathurseithi.blogspot.in/2014/01/blog-post_10.html

பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் 9-ம் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்றார் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தரேஸ் அஹமது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் புதன்கிழமை அவர் அளித்த பேட்டி:
பெரம்பலூர் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு ஏப். 24-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 16-ம் தேதியும் நடைபெற உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தம் செய்வதற்கும் மார்ச் 9-ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

நன்றி-தினமணி.
பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் 9-ம் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்றார் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தரேஸ் அஹமது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் புதன்கிழமை அவர் அளித்த பேட்டி:
பெரம்பலூர் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு ஏப். 24-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 16-ம் தேதியும் நடைபெற உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தம் செய்வதற்கும் மார்ச் 9-ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
பெரம்பலூர் மக்களவை தொகுதியில் குளித்தலை, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி), பெரம்பலூர் (தனி) ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. குளித்தலை சட்டப்பேரவை தொகுதியில் 247 வாக்குச்சாவடிகள் உள்ளன.
98,323 ஆண் வாக்காளர்களும், 99,170 பெண் வாக்காளர்களும், இதரர் ஒருவர் என மொத்தம் 1,97,494 வாக்காளர்கள் உள்ளனர். லால்குடி சட்டப்பேரவை தொகுதியில் 232 வாக்குச்சாவடிகள் உள்ளன. 94,449 ஆண் வாக்காளர்களும், 96,872 பெண் வாக்காளர்களும், இதரர் 10 பேர் என மொத்தம் 1,91,331 வாக்காளர்கள் உள்ளனர்.
மண்ணச்சநல்லூர் சட்டப்பேரவை தொகுதியில் 250 வாக்குச்சாவடிகள் உள்ளன. 1,02,802 ஆண் வாக்காளர்களும், 1,05,545 பெண் வாக்காளர்களும், இதரர் 5 பேர் என மொத்தம் 2,08,352 வாக்காளர்கள் உள்ளனர். முசிறி சட்டப்பேரவை தொகுதியில் 244 வாக்குச்சாவடிகள் உள்ளன. 1,02,215 ஆண் வாக்காளர்களும், 1,04,171 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 2,06,386 வாக்காளர்கள் உள்ளனர்.
துறையூர் (தனி) சட்டப்பேரவை தொகுதியில் 247 வாக்குச்சாவடிகள் உள்ளன. 99,371 ஆண் வாக்காளர்களும், 1,02,833 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 2,02,204 வாக்காளர்கள் உள்ளனர். பெரம்பலூர் (தனி) சட்டப்பேரவை தொகுதியில் 297 வாக்குச்சாவடிகளும், 1,26,229 ஆண் வாக்காளர்களும், 1,30,612 பெண் வாக்காளர்களும், இதரர் 10 பேர் என மொத்தம் 2,56,851 வாக்காளர்கள் உள்ளனர்.
பெரம்பலூர் மக்களவை தொகுதியில் 1,517 வாக்குச்சாவடிகள் உள்ளன.
6,23,389 ஆண் வாக்காளர்களும், 6,39,203 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்களாக 26 பேர் என மொத்தம் 12,62,618 வாக்காளர்கள் உள்ளனர்.
தேர்தல் குறித்த புகார்களை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையில் உள்ள 1800-4257031 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலமாக, அல்லது 89036 89581 என்ற செல்போன் எண்ணில் தெரிவிக்கலாம்.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி புதன்கிழமை (மார்ச் 5) முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், பதாகைகளை அகற்ற சம்பந்தப்பட்ட நபர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் ஆட்சியர்.
பேட்டியின்போது, பெரம்பலூர் சட்டப்பேரவை தொகுதிக்கான உதவித் தேர்தல் அலுவலர் ப. மதுசூதன் ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜன்துரை, தேர்தல் திட்டமிடலுக்கான ஒருங்கிணைப்பு அலுவலர் தா. மலையாளம், தேர்தல் செலவு கணக்கிற்கான ஒருங்கிணைப்பு அலுவலர் கார்த்திகாயினி, தேர்தல் நடத்தை விதிமுறைக்கான ஒருங்கிணைப்பு அலுவலர் சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நன்றி-தினமணி.
vkalathur வ.களத்தூரில் கற்கும் பாரதம் திட்டத்தின் கீழ் மார்ச் -9 அன்று அடிப்படை எழுத்து தேர்வு ஊராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. மேலும் தொடர்புக்கு நமதுபகுதி கற்கும் பாரதம் மைய தொடர்பாளர் அல்லது 7373003187 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கற்கும் பாரதம் திட்டத்தின்கீழ் எழுதப் படிக்க தெரியாதவர்களுக்கு மார்ச். 9-ம் தேதி அடிப்படை எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும், அனைவருக்கும் கல்வி இயக்க கற்கும் பாரதம் திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகளில் 15 வயது முதல் 80 வயதிற்குள்பட்ட எழுதப் படிக்க தெரியாதவர்களுக்கு மார்ச் 9-ம் தேதி அடிப்படை எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது.
அந்தந்த ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். தேர்வை, கற்கும் பாரத மையத்தில் படித்தவர்களும், மையத்தில் படிக்காத மற்றவர்களும் எழுதலாம்.
மேலும், கடந்தமுறை நடந்து முடிந்த தேர்வுகளில் தேர்ச்சிப் பெறாதவர்கள், இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் அவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு பெற்றவர் என்ற சான்று வழங்கப்படும்.  பதிவு செய்ய விரும்புவோர் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிகளில் உள்ள கற்கும் பாரத மைய பொறுப்பாளர்கள்
(அல்லது) தொடக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 7373003187 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி-தினமணி.
வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் பாஜகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலர் பொன். செல்வராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாஜக மாவட்டத் தலைவர் சி. சந்திரசேகர் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தார்.  ஆர்ப்பாட்டத்தில், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நதிநீர் இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.  விவசாயிகளுக்கு பயனளிக்கும் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் அறிக்கையை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். 60 வயதான அனைத்து விவசாயிகளுக்கும் மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் ஒய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

நன்றி-தினமணி.
பெரம்பலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான தரேஸ் அஹமது.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது: பெரம்பலூர் மக்களவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது (94441 75000, 04328-224200, 225700), உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக குளித்தலை சட்டப்பேரவை தொகுதிக்கு குளித்தலை கோட்டாட்சியர் சி. சித்திரிராஜ் (94450 00454, 04323- 222395), லால்குடி சட்டப்பேரவை தொகுதிக்கு லால்குடி சார் ஆட்சியர் டாக்டர் வி. ஜெயசந்திரபானு ரெட்டி (94450 00456, 0431- 2541500), மண்ணச்சநல்லூர் சட்டப்பேரவை தொகுதிக்கு திருச்சி உதவி ஆணையர் (கலால்) ஆர். சரஸ்வதி (82209 16004, 0431- 2465444), முசிறி சட்டப்பேரவை தொகுதிக்கு முசிறி கோட்டாட்சியர் ஆர். ஜெய்னுலாபுதின் (94450 00457, 04326- 260335), துறையூர் (தனி) சட்டப்பேரவை தொகுதிக்கு திருச்சி சிறப்பு திட்டங்களுக்கான தனித் துணை ஆட்சியர் எஸ். செந்தாமரை (94438 49525, 04329- 2415031), பெரம்பலூர் (தனி) சட்டப்பேரவை தொகுதிக்கு பெரம்பலூர் சார் ஆட்சியர் ப. மதுசூதன் ரெட்டி (94450 00458, 04328- 277925) ஆகியோரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரின் நேர்முக உதவியாளராக ஏ. கார்குழலி (98402 26532, 04328- 225888), தேர்தல் சிறப்பு வட்டாட்சியராக செல்வம் (98430 20626, 04328- 225888) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

நன்றி-தினமணி.
தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத்
மக்களவைக்கு ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி தொடங்கி, மே மாதம் 12ஆம் தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 24ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆலந்தூர் தொகுதி எம்எல்ஏ பண்ருட்டி ராமச்சந்திரன் தனது பதவியை ராஜிநாமா செய்து விட்டதால், அந்த தொகுதிக்கும் ஏப்ரல் 24ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் மே மாதம் 16ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
மக்களவையின் பதவிக்காலம் ஜுன் மாதம் 1ஆம் தேதியுடன் நிறைவடைவதால், மே மாதம் 31ஆம் தேதிக்குள் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றாக வேண்டும். இதனையடுத்து மக்களவைக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அரசியல் கட்சிகள், மாநிலத் தேர்தல் ஆணையர்கள், பாதுகாப்புப் படையினர், காவல்துறை அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்தது.
இதனைத் தொடர்ந்து, தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணை மற்றும் தெலங்கானாவை உள்ளடக்கிய ஆந்திரம், ஒடிஸா, சிக்கிம் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்குமான தேதி, பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தேதி ஆகியவற்றை தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் வெளியிட்டார். அவருடன் தேர்தல் ஆணையர்கள் ஹெச்.எஸ். பிரம்மா, எஸ்.என்.ஏ. ஜைதி ஆகியோர் உடனிருந்தனர்.
அப்போது தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் கூறியதாவது:
மக்களவையில் உள்ள 543 தொகுதிகளுக்கு ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்கி, மே மாதம் 12ஆம் தேதி வரையிலும் 9 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக ஏப்ரல் 7ஆம் தேதியன்று, அஸ்ஸாம், திரிபுரா ஆகிய 2 மாநிலங்களில் உள்ள 6 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
2வது கட்டமாக ஏப்ரல் 9ஆம் தேதியன்று, அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து ஆகிய 5 மாநிலங்களில் உள்ள 7 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.
3வது கட்டமாக ஏப்ரல் 10ஆம் தேதி 14 மாநிலங்களில் உள்ள 92 தொகுதிகளுக்கும், 4வது கட்டமாக ஏப்ரல் 12ஆம் தேதி 3 மாநிலங்களில் உள்ள 5 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
5வது கட்டமாக ஏப்ரல் 17ஆம் தேதியன்று 13 மாநிலங்களில் உள்ள 122 தொகுதிகளுக்கும், 6வது கட்டமாக ஏப்ரல் 24ஆம் தேதி 12 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளுக்கும், 7வது கட்டமாக ஏப்ரல் 30ஆம் தேதி 9 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கும், 8வது கட்டமாக மே 7 ஆம் தேதி 7 மாநிலங்களில் உள்ள 64 தொகுதிகளுக்கும், 9வது கட்டமாக மே 12ஆம் தேதி 3 மாநிலங்களில் உள்ள 41 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.
மக்களவையுடன் சேர்த்து தெலங்கானா பகுதியை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த ஆந்திரம், ஒடிஸா, சிக்கிம் மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் பணிகள் அனைத்தும் 72 நாள்களில் முடிவடைந்து விடும். அதாவது கடந்த மக்களவைத் தேர்தலை காட்டிலும் இது 3 நாள்கள் குறைவாகும்.
நடத்தை விதிகள் உடனடியாக அமல்: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், அரசியல் கட்சியினர் மற்றும் அரசுகள் பின்பற்ற வேண்டிய நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.
கடந்த ஜுன் மாதம் 1ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்படி, இந்தத் தேர்தலில் 81.45 கோடி பேர் வாக்களிக்க தகுதியுடையவர்கள் ஆவர். கடந்த 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இந்த எண்ணிக்கை 71.3 கோடியாக இருந்தது. அந்த எண்ணிக்கை தற்போது 10 கோடிக்கும் மேல் அதிகரித்துள்ளது.
இந்தத் தேர்தலில் 18 முதல் 19 வயது வரையுடைய 2.3 கோடி பேர் புதிதாக வாக்களிக்கும் தகுதியை பெற்றுள்ளனர்.
தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்தும் பொருட்டு தேர்தல் பணியில் 1.1 கோடி அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்தத் தேர்தலில் பங்கேற்று, நாட்டு மக்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று சம்பத் கேட்டுக் கொண்டார்.
இடைத் தேர்தல்: ஆலந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த தேமுதிகவைச் சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன், அந்தக் கட்சியில் இருந்து விலகியதுடன், தனது பதவியையும் ராஜிநாமா செய்தார். இதனால் அந்தத் தொகுதிக்கு ஏப்ரல் 24ஆம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பிகார் (2), குஜராத் (7), உத்தரப்பிரதேசம் (4), மேற்கு வங்கம் (6), மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் உள்ள தலா ஒரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அந்தந்த மாநிலங்களில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து இடைத் தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசிவாய்ப்பு: வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களுக்கு கடைசி வாய்ப்பாக தங்களது பெயரை சேர்த்து கொள்ள நாடு முழுவதும் உள்ள 9.30 லட்சம் வாக்குச்சாவடிகளில் மார்ச் 9ஆம் தேதி சிறப்பு முகாமுக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
17 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள்: தேர்தலுக்காக 17 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. தேர்தல் பணியில் 1.1 கோடி அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களில் பாதிப்பேர் பாதுகாப்பு படையினர் ஆவர்.

நன்றி-தினமணி.
தேர்தலில் எந்த வேட்பாளருக்கு, எந்தச் சின்னத்தில் வாக்களித்தோம் என்பதை வாக்குச் செலுத்திய உடனேயே வெளிவரும் காகித ஸ்லிப் மூலம் வாக்காளர்கள் தெரிந்து கொள்ளும் புதிய முறை சோதனை அடிப்படையில் இந்த மக்களவைத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
கடந்த தேர்தல்களில் இதுபோன்ற வசதி இல்லை.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்த உடன் அதை உறுதி செய்யும் விதத்தில் காகித ஸ்லிப் ஒன்று வெளியே வரும். அதில் எந்த வேட்பாளருக்கு எந்தச் சின்னத்தில் வாக்களித்தோம் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், இந்த காகித ஸ்லிப் பின்னர் அருகில் உள்ள சீலிடப்பட்ட பெட்டிக்கு அதுவாகவே சென்றுவிடும்.
இதற்காக 20,000 காகித ஸ்லிப் வழங்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இவை குறிப்பிட்ட சில வாக்குச்சாவடிகளில் வைக்கப்படும்.


நன்றி-தினமணி.

Tuesday 4 March 2014

பெரம்பலூர்,
பெரம்பலூர் எம்.பி. தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஆர்.பி. மருதராஜா நேற்று கவுல்பாளையத்தில் தனது தேர்தல் பிரசாரத்தை அமைச்சர் பூனாட்சி மற்றும் ரத்தினவேல் எம்.பி. தொடங்கிவைத்தனர்.
அ.தி.மு.க. வேட்பாளர்
பெரம்பலூர் அருகே உள்ள கவுல் பாளையத்தில் உள்ள எம்ஜிஆர் உருவ சிலைக்கு பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் மருதராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கி கவுல்பாளையம் ஊராட்சி முகப்பு, ஊரின் பிரதான வீதிகள் மற்றும் கல்உடைக்கும்தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் காளியம்மன் நகர் பொதுமக்களிடம் ஓட்டுசேகரித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் பூனாட்சி, எம்.பி ரத்தினவேல், வேளாண் வணிக வாரியத்தலைவர் ரவிச்சந்திரன், முன்னாள் அமைச்சர் சிவபதி, பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்செல்வன் ஆகியோர் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். பிரசாரத்தின் போது அரசின் சாதனை திட்டங்கள், நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக்கூறி ஓட்டுசேகரித்தனர்.
நிர்வாகிகள்
ஓட்டு சேகரிப்பில் பெரம்பலூர் நகர செயலாளர் ராமச்சந்திரன், நகராட்சி தலைவர் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் என்.கே. கர்ணன், புதுவேட்டக்குடி கிருஷ்ணசாமி, கண்ணுசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் ராஜாராம், மாவட்ட அணி நிர்வாகிகள் செல்வகுமார் (இளைஞர் பாசறை) கார்த்திகேயன்(ஜெ.பேரவை) ராஜேஸ்வரி, (மகளிரணி) மாவட்ட நிர்வாகிகள் பூவைசெழியன், ராணி, கவுரி ஜெ.பேரவை ஒன்றியத்தலைவர் எசனை பன்னீர் செல்வம், மாவட்ட பிரதிநிதி சந்திரசேகரன், காடூர் ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி-தினத்தந்தி.
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலுக்குச் சொந்தமான திருமணம் மண்டபத்தில் கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திருமண வீட்டாரின் உறவினர் ஒருவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட மர்மநபர் திருமண மண்டபத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகத் தெரிவித்தாராம்.
அதைத் தொடர்ந்து தகவலின் பேரில் அங்குச்சென்ற பெரம்பலூர் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதையில் ஈடுபட்டனர். முடிவில் அங்கு வெடிகுண்டு எதுவும் இல்லையெனத் எனத் தெரியவந்தது. தொடர்ந்து திருமணமும் நடைபெற்றது.
அதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சோனல் சந்திரா உத்திரவின்பேரில் பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீசார் உறவினர் செல்போனுக்கு வந்த செல்போன் நம்பரை வைத்து யார் என்று கண்டுபிடித்தனர். அதில் மருவத்தூர் போலீஸ் பகுதி கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த முத்து என்பரது மகன் அலெக்சாண்டர் (வயது29) பெண் கேட்டு தாரததால் அதன் முன் விரோதம் காரணமாக திருமணத்தை தடுத்து நிறுத்தவே செல்போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார்.
அதன்பேரில் பெரம்பலூர் போலீசார் அலெக்சாண்டர் (வயது29) ஓட்டல் மாஸ்டர் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

நன்றி-மாலைமலர்.

Sunday 2 March 2014

வேப்பந்தட்டை அருகே ஏரியில் தண்ணீர் குடிக்க வந்த போது சேற்றில் சிக்கிய மானை பொதுமக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மான்கள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவில் வெண்பாவூர், கை.களத்தூர், அய்யனார்பாளையம், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் வனத்துறைக்கு சொந்தமான ஆயிரக் கணக்கான ஏக்கர் பரப்பளவில் சமூக வனக்காடுகள் உள்ளது.
இந்த வனக்காடுகளில் நூற்றுக்கணக்கான மான்கள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகிறது. இந்த மான்கள் மழைகாலங்களில் வனப்பகுதியில் உள்ள குட்டை மற்றும் நீர்த்தேக்கங்களில் தேங்கியுள்ள தண்ணீரை குடித்து உயிர் வாழும்.
வனப்பகுதியை விட்டு
வெயில் காலங்களில் வனப்பகுதியில் மான்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் மான்கள் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வந்து விவசாய கிணற்று பாசன வாய்க்கால் மற்றும் ஏரி, குளம் போன்றவற்றில் தேங்கியுள்ள தண்ணீரை குடிக்கும்.
அவ்வாறு மான்கள் வனப்பகுதியை விட்டு வெளியே வரும் போது விவசாய பயிர்களை மான்கள் சேதப்படுத்துவதும், ஊருக்கு அருகில் மான்கள் வரும் போது அவற்றை தெரு நாய்கள் துரத்தி கடித்து குதறி உயிரைப்பறிப்பதும் இப்பகுதி யில் வாடிக்கையான ஒன்றாக உள்ளது.
சேற்றில் சிக்கிய மான்
இந்நிலையில் வேப்பந் தட்டை அருகே திருவாலந் துறை ஏரியில் 2 வயது மதிக்கத்தக்க மான் ஒன்று தண்ணீர் குடிப்பதற்காக வந்த போது சேற்றில் கால் சிக்கிக்கொண்டு வெளியே வரமுடியாமல் தடுமாறியது. இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து சேற்றிலிருந்து மானை மீட்டு வனசரகர் பாலகிருஷ்ணனுக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் வனசரகர் உத்தர வின் பேரில் வனக்காப்பாளர் பொன்னுசாமி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மானை மீட்டு சென்று வெண்பாவூர் வனப்பகுதியில் கொண்டு போய்விட்டனர்.

நன்றி-தினத்தந்தி.