Saturday 15 February 2014

        
வ.களத்தூரில் நேற்று(15-02-2014)தொடங்கி வரும் செவ்வாய் கிழமை  (18-02-2014) வரை வாக்காளர் புகைப்படம் எடுக்கும்  முகாம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெறுகிறது. 

   மேலும் உதவிக்கு ஊராட்சி மன்றத்திலோ  அல்லது கிராம நிர்வாக அலுவலரை (VAO) அணுகி தங்களது சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ளலாம்.

Friday 14 February 2014



தெரிந்து கொள்வோம் - அல்உம்மா மற்றும் சிமி
...................................................................................
1993-ல் அல்உம்மா இயக்கம் எஸ்.ஏ.பாட்சா மற்றும் எம்.ஹெச்.ஜவஹருல்லா என்பவராலும் ஆரம்பிக்கப்பட்டது. கோவையில் உள்ள உக்கடம் கோட்டை மேடு பகுதியில் தலைமையகம் அமைத்து தமிழகத்தின் பல இடங்களில் கிளைகளை ஆரம்பித்தது இந்த இயக்கம்.

அல்உம்மா இயக்க தலைவர் பாட்சா மர வியாபரம் செய்து வந்தவன். மேலும் பல முஸ்லிம் வியாபாரிகள் இந்த இயக்கத்திற்கு பண உதவி செய்தனர். ஆரம்பத்தில் இஸ்லாமியர்களின் முன்னேற்றத்திற்க்காக என்று சொல்லி ஆரம்பிக்கபட்டாலும் பின்னர் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதும், இரு தரப்பினரிடையே ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க கட்ட பஞ்சாயத்து செய்வதும் தினசரி வேலையாக மாறிவிட்டது.

1996-ல் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், இஸ்லாமியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காக 15 அல் உம்மா இயக்கத்தினர் ஜனவரி மாதம் 1997-ல் விடுவிக்கப்பட்டார்கள். விடுவிக்கப்பட்டவுடன், மீன்டும் தங்களது பயங்கரவாத செயல்களை செய்வதற்கு முனைந்தார்கள் அதன் விளைவாகவே சில சம்பவங்கள் நடைபெற்றன.

அல்உம்மா இயக்கத்தினரால் 1996-ல் நடு நிலை வகித்த இஸ்லாமியர்களை மிரட்டுவதற்காகவே, சென்னையில் 30.7.96-ல் ஆசியா ஹோட்டல், 27.9.1996-ல் ஹோட்டல் இம்பீரியல், 25.10.1996-ல் லக்கி ஹோட்டல்கள் தாக்கப்பட்டன, இந்த தாக்குதலில் 20க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள்.

இந்த இயக்கத்தினரால் 3.12.1997-ந் தேதி உடுமலை பேட்டையில் உள்ள நகராட்சி அலுவலத்தின் மீது வெடி குண்டு தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 3 பேர்கள் கொல்லப்பட்டார்கள்.

மேலும் 6.12.1997-ந் தேதி அயோத்தி சம்பவத்தின் நினைவு தினத்தில் சென்னையிலிருந்து புறப்பட்ட பாண்டியன் எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், ஆழப்புழா எக்ஸ்பிரஸ் ரயில்களில் குண்டு வைக்கப்பட்டு வெடித்ததில் ஐந்து பேர்கள் கொல்லப்பட்டார்கள்.

29.8.1997-ல் மதுரை சிறைச்சாலையில் ஜெயிலர் ஜெயப்பிரகாஷ் சிறைசாலை வளாகத்தில் கொலை செய்யப்பட்டார். இதே சமயத்தில் காவல் துறை ஆய்வாளர் முரளி மீதான வெடி குண்டு தாக்குதலில் அதிர்ட்ஷவசமாக அவர் உயிர் தப்பினார்.

29.11.1997-ந் தேதி எவ்வித ஆவணங்கள் இல்லாமல் உக்கடம் பகுதியில்இரு சக்கர வாகனங்களில் வந்த இஸ்லாமியர்களை விசாரிக்கும் போது எவ்வித ஆவணங்களையும் வைத்திருக்கவில்லை, ஆனாலும் தாங்கள் இஸ்லாமியர்கள் எங்களை விசாரிக்க கூடாது என ஆர்பாட்டங்கள் நடத்தி வெளியேறிய போது அருகில் இருந்த போக்குவரத்து காவலர் செல்வராஜ் மீது தாக்குதல் நடத்தி கொல்லப்பட்டார்.

14.2.1998ந் தேதி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்குகொள்வதற்காக வருகை புரிந்த அத்வானி அவர்களை கொல்லும் விதமாக வெடி குண்டுகள் வைக்கப்பட்டன. தமிழகத்தில் நடந்த வெடி குண்டு தாக்குதல் என்பதும் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்திய சம்பவம் என்றால் இந்த சம்பவம் மட்டுமே. 19 இடங்களில் வைக்கப்பட்ட குண்டுகள் வெடித்த்தின் காரணமாக 58 பேர்கள் இறந்தார்கள், 250க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தார்கள். மேலும் 13 குண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டன.

14.2.1998ந் தேதி நடந்த சம்பவத்திற்கு பின்னர் சில தினங்களில் இஸ்லாமியர்களின் வன்முறை சம்பவங்களின் காரணமாக மேலும் 10 பேர்கள் கொல்லப்பட்டார்கள்.

அல் அமீன் காலனியில் இஸ்லாமியர்களின் குடியிருப்பு பகுதியில் சோதனை நடத்திய போது, வீட்டில் வைத்திருந்த வெடி குண்டு வெடித்து நான்கு பேர்கள் கொல்லப்பட்டார்கள்.

கோவை குண்டு வெடிப்பிற்கு பின் அல்உம்மா இயக்கம் தடை செய்யப்பட்டது. அல்உம்மா நிர்வாகிகள் உடனே தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம் என்ற ஒரு இயக்கத்தை ஆரம்பித்து விட்டனர். பெயர் மட்டுமே மாறி இருக்கிறது. தமிழகத்தின் சிமி பொறுப்பாளராக இருந்து ஜவஹருல்லா இன்று மனித நேய மக்கள் கட்சியின் தலைவன் ஆகி விட்டார். 


நன்றி-https://www.facebook.com/hindumunnani.rameswaram
           முஸ்லிம்களுக்கு வழங்கப்படும்  மதரீதியான இட ஒதுக்கீடு என்பது நமது அரசியல் அமைப்புச்சட்டதிற்கு எதிரானது என்பது மட்டுமல்ல , தமிழ்நாட்டின் மக்கள்தகையில் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள பிற்படுத்தப்பட்ட(BC) மக்களிடமிருந்து  பிடுங்கப்பட்டதே. ஏன் இதனை நாம் எதிர்க்க வேண்டும்.....? 

          தமிழ் நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் என அழைக்கப்படும் BC இனத்தவர் ஐம்பது சதவீத மக்களுக்கு மேல் உள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த முப்பது சதவீத இடஒதுக்கீடு கிறித்தவர்களுக்கும் , முஸ்லிம்களுக்கும் பங்குபோட்டு கொடுக்கப்பட்டதால் 25 சதவீதமாக குறைந்தது. கிறித்தவர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடான 1..5% ல், பழைய இடஒதுக்கீடு முறையைப் போல் அதிக இடங்களை அரசு வேலைவாய்ப்பில் பெறமுடியாததன் காரணமாக எங்களுக்கு இட ஒதுக்கீடு தேவையில்லை என கருணாநிதியிடம் கிறித்தவ அமைப்புகள்  கூறியதன் காரணமாக கிறித்தவர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு விலக்கிக்கொள்ளப்பட்டது. தற்பொழுது கிறித்தவர்கள் அவர்களின் மக்கள்தொகை விகிதத்தைவிட அதிகமான இடங்களில் அரசு வேலைவாய்ப்பை பெற்றுவருகின்றனர். அனால் முஸ்லிம் மதத்தினர் இதற்க்கு மாறாக தற்போது வழங்கப்பட்டுவரும் 3.5 சத ஒதுக்கீட்டிலிருந்து  ஏழு சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என   கேட்கின்றனர். கிறித்தவர் இடஒதுக்கீடு வேண்டாம் என்கின்றனர் ஆனால்  முஸ்லிம் மதத்தவர் இடஒதுக்கீடு தாற்போது வழங்கப்படும் 3.5% லிருந்து ஏழு சதவீதமாக உயர்த்த வேண்டும் என கூறும்போது இதில் உள்ள சதிதிட்டதையும் இதனால் பாதிக்கபடபோவது யார் என்பதையும் நாம் அறிவது அவசியம்.

         உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இடஒதுக்கீட்டின் அதிகபட்சவரம்பு 5௦ சதவீதம் . ஆனால் தமிழ்நாட்டின் மொத்த இடஒதுக்கீடு 69 சதவீதம். இந்த முரண் நமக்கு ஆச்சர்யம் அளிக்கலாம். நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்படும் எந்த ஒரு சட்டமும்  நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உட்பட்டது. நாடாளுமன்றத்தால் ஒரு சட்டம் நிறைவேற்றப்பாட்டாலும் அது அரசியலைமைப்பு சட்டத்தின் அடிப்படை தன்மையை பாதிக்கும் வைகையில் அமைந்தால் அதனை செல்லாது என அறிவிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு . இந்த அதிகாரத்தை கட்டுப்படுத்த நாட்டின் முதல் சட்டத்திருத்தம் 1951 ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதன்படி புதிதாக 9 வது schedule கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின்படி தமிழ்நாட்டின்  இடஒதுக்கீடு உச்சநீதிமன்ற வரைமுறையின் படி அல்லாமல் 69 சதவீதம் என கடைபிடிக்கப்பட்டு வருகிறது . அனால் உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு ஒன்பதாவது shedule ல் உள்ள சட்டங்களும் நீதிமன்ற பரிசீலனைக்கு உட்பட்டதுதான் என்றது. அதனால் தமிழ்நாட்டின்   தற்போதைய இடஒதுக்கீடு  முறையின் செல்லத்தக்க தன்மை நீதிமன்றத்தின் கருனைக்காக காத்துக்கிடக்கிறது.

         தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு 69 சதவீதத்தில் MBC 2௦% , SC/ST- 19% மற்றும் BC-3௦%. இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்தவர்களுக்கு வழங்கப்பட்ட  இடஒதுக்கீடானது  பிற்படுத்தோர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 3௦ சதவீத ஒதுக்கீட்டில் இருந்துதான் பிடுங்கப்பட்டது.   தற்போது இஸ்லாமிய அமைப்புகள் கேட்கும் ஏழு சதவீத இடஒதுக்கீடும் கொடுக்கப்பட்டால் பாதிக்கப்படப்போவது  தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமான உள்ள BC என்றழைக்கப்படும் ,  பிற்படுத்தப்பட்ட இனத்தைச்சேர்ந்த மக்களே. மேலும் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு முறை செல்லாது என வருமாயின் பாதிக்கப்படப்போவதும் இவர்களே.

          பிற்படுத்தப்பட்ட இனத்தைச்சார்ந்த சாதிஅமைப்புகள் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுவரும் இடஒதுக்கீடு BC எனப்படும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமை என்பதை கண்டுகொள்ளாமல் கள்ள மௌனம் காத்துவருகின்றன. நீதிமன்ற படியைகூட இதற்க்கு எதிராக மிதிதார்களா எனத்தெரியவில்லை .மேலும்இஸ்லாமியஅமைப்புகளின்கோரிக்கையான ஏழு சதவீதமும் வழங்கப்பட்டால் பாதிக்கப்படப்போவது பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற உண்மையை பிற்படுத்தப்பட்ட மக்களும், அதன் சாதி சங்கங்களும் கண்டுகொள்ளாமல் உள்ளதுதான் வேதனை.

      

Wednesday 12 February 2014



அகமதாபாத்: குஜராத் முதல்வர் தேநீர் அருந்தியபடி காணொலிக் காட்சி மூலம் பேச்சு நடத்தினார். காணொலிக் காட்சி மூலம் மோடி ஆற்றும் உரை நாடு முழுவதும் டீக்கடைகளில் ஒளிபரப்பட்டது. அகமதாபாத்தில் மோடி ஆற்றும் உரை தமிழக டீக்கடைகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 1000 டீக்கடைகளில் வீடியோ திரை அமைக்கப்பட்டு மோடி ஆற்றும் உரை ஒளிபரப்பப்பட்டு வருகிறது. காணொலிக் காட்சியில் பேசிய அவர், டீக்கடைகள் 'நாட்டின் நடைபாதை நாடாளுமன்றம்' என மோடி வர்ணித்தார்.

பல்வேறு பிரச்சனைகள் டீக்கடைகளில் விவாதப் பொருளாகி இருப்பதாக கூறிய மோடி, வியாதி போன்ற மோசமான அரசு நிர்வாகம் நாட்டை நாசமாக்கிவிட்டதாக குற்றம்சாட்டினார். காங்கிரஸ் ஆட்சியின் நிர்வாகத்தில் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என்று கூறிய மோடி, கருப்புப் பணத்தை நினைத்து நாடே கவலைப்பட்டுள்ளதாக கூறினார்.

நன்றி-தினமணி.

பெரம்பலூர், : பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் 40பேர் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடக்கும் தேசியஅளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர்.1963ம்ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் நகரில் தேசிய அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. அதன்பிறகு தேசிய அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் 50ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது, அதே நாக்பூர் நகரில் தேசிய அளவி லான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் மத்திய அரசால் நடத்தப்படுகிறது.
இந்தக் கண்காட்சியில் பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து நெல், பருத்தி, கரும்பு, மக்காச்சோளம், மஞ்சள், மரவள்ளி, பயிர்வகைகள், கீரைவகைகள் உள்ளிட்டவற்றில் திறம்பட சாகுபடி செய்துவரும் விவசாயிகள், ஒன்றியத்திற்கு 10பேர்என மாவட்டஅள வில் 40பேர் தேர்வுசெய்யப்பட்டு, தேசிய அளவிலான கண்காட்சி மற்றும் கருத்தரங் கில் பங்கேற்க வேளாண்மைத்துறை அலுவலர் துணையுடன் அனுப்பி வைக்கப்பட்டுள் ளனர்.
இதில் பெரம்பலூர் வட்டாரத்திலிருந்து கோனேரிப்பாளையம் பெருமாள், அம் மாப்பாளையம் புருஷோத்தமன், துரைராஜ், கீழக்கரை செந்தில்குமார், செங்குனம் முத்தமிழ்செல்வன், எசனை செல்வக்குமார், களரம்பட்டி சுந்தரராஜ், குரும்பலூர் செல் வக்குமார், பெரம்பலூர் ஹரிஹரசுதன், துறைமங்கலம் தேவராஜ், சத்திரமனை செல்வ ராஜ், புதுநடுவலூர் சின்னத்தம்பி ஆகியோரென 4வட்டாரங்களில் இருந்து 40பேர்தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நாக்பூர் நகரில் அமைக்கப்பட்டுள்ள தேசிய அளவிலான வேளாண் கண்காட்சியில் கலந்துகொண்டு, சாகுபடிக்கான வழிமுறைகள், வேளாண் மற்றும் அறிவியல் தொழில் நுட்பங்கள், நவீன யுக்திகள், அரசாங்கத்தால் வழங்கப்படும் நிதியுதவிகள், உற்பத்திப் பொருளை தரம்பிரிப்பது, விற்பனை செய்வது உள்ளிட்ட சாகுபடி யுக்திகளை நேரில் கண்டறிந்தும், கேட்டறிந்தும், குறிப்பெடுத்தும் வரவுள்ளனர். இவர்க ளுக்கான போக்குவரத்து செலவுகளை வேளாண்மைத்துறையே மேற்கொண்டு வழங்கி யுள்ளது.
பயிற்சியில் கலந்துகொண்ட விவசாயிகளைக் கொண்டு, வட்டாரம் வாரியாக அனைத்து விவசாயிகளுக்கும் தாங்கள் கேட்டறிந்த, கண்டறிந்த வடஇந்திய, தென் னிந்திய சாகுபடித் தொழில் நுட்பங்களை விளக்கிக்கூற ஏற்பாடு செய்யப்படுமென வேளாண்மைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

நன்றி-தினகரன்.

Tuesday 11 February 2014


பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குரூப் 2 தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை (பிப். 12) தொடங்குகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அகமது திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2,229 உதவியாளர் பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளன. இந்தப் பயிற்சி வகுப்பானது புதன்கிழமை (பிப். 12) காலை 10 முதல், அனைத்து நாள்களிலும் தேர்வு முடியும் வரை நடைபெற உள்ளது. இதில், பட்டப் படிப்பு முடித்த அனைவரும் பங்கேற்கலாம்.
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்காக நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்ற 150 நபர்களுக்கும் மேலாக வெற்றி பெற்று, பல்வேறு துறைகளில் அரசு பணியாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர். பயிற்சி வகுப்பானது அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வில் வெற்றி பெற்ற அரசு பணியாளர்களை பயிற்றுநர்களாக கொண்டு நடத்தப்படுகிறது. பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்புவோர்  9842196910 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

நன்றி-தினமணி

Monday 10 February 2014

vkalathur வ.களத்தூர் கிராமம் திரு.பழனிச்சாமி அவர்களின் மகள் திருமண விழா  9 பிப்ரவரி 2014 அன்று நடைபெற்றது. மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.




பெரம்பலூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை (பிப். 11) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து செயற்பொறியாளர் தேவராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூர் கோட்டத்திற்கு உள்பட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் (இயக்குதலும், பராமரித்தலும்) அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு மின் மேற்பார்வை பொறியாளர் வளர்மதி தலைமை வகிக்கிறார். இந்தக் கூட்டத்தில், மின் நுகர்வோர் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்துப் பயன்பெறலாம்.

நன்றி-தினமணி

Sunday 9 February 2014


 தலபெருமை-

சித்திரை, வைகாசி மாதங்களில் திருவிழா, காப்பு கட்டும் நிகழ்ச்சிக்கு, இவளது அக்கா செல்லியம்மன் சன்னதியிலிருந்து இரண்டு குதிரைகளில் சக்தியை அழைத்து வருவார்கள். அதற்கு முன்பே யாருக்கும் தெரியாமல் நள்ளிரவில் பூப்போட்டு விடும் நிகழ்ச்சி நடைபெறும். இதுவே திருவிழா ஆரம்பம் என்பதற்கு முக்கிய அறிவிப்பு. இதன்பிறகு காப்பு கட்டி எல்லா பிரிவினரும் வந்து கலந்து கொள்வர். திருவிழா ஆரம்பம் முதல் 15 நாட்கள் வரை நடைபெறும் ஒவ்வொரு நாளும் சக்தி அழைத்து வரும்போதே ஊர் எல்லைகளில், எல்லைக்கு ஒரு ஆட்டுக்கடா வீதம் பலிகொடுப்பார்கள். அப்படி பலி கொடுத்த ஆட்டு ரத்தத்தைப் பிடித்து துணியில் மூடி கட்டி வைத்திருப்பார்கள். 15 நாட்கள் கடந்த பிறகு அதை எடுத்து ஊர் எல்லையில் வைத்து சட்டியை உடைப்பார்கள். அப்போதும் அந்த ஆட்டு ரத்தம் கெட்டுப்போகாமல் அப்படியே இருக்கும். அப்படிப்பட்ட அதிசயத்தை நிகழ்த்திக் காட்டும் அம்மன் இவள்

தலவரலாறு-

முற்காலத்தில் கொல்லி மலையில் இந்த ஏழு சகோதரிகளும் துஷ்ட தெய்வங்களாக இருந்துள்ளனர். அப்பகுதி மக்கள் இரவானால் பயந்து நடுங்குவார்களாம். இரவில் கும்பலாக கும்மியடிப்பது, பாடுவது, ஆடுவது என இவர்கள் பல அமர்க்களமாக இருந்துள்ளனர். இவர்களால் நமக்கு நிம்மதி போச்சு; பயந்து பயந்து எத்தனை காலம்தான் இப்படி வாழ்வது என்று அப்பகுதி மக்கள் முடிவு செய்து, ஒருநாள் பகல் பொழுதில் இந்த ஏழு அம்மன்களையும் தனித்தனியே கூடைகளில் வைத்து, அப்போது மழைக்காலம் என்பதால் ஆற்றில் வந்த வெள்ளத்தில் அந்தக் கூடைகளை வைத்து அனுப்பிவிட்டனர். அப்படி மிதக்கவிடப்பட்ட இத்தெய்வங்கள் பெரம்பலூர் நடுவில் மூத்தவளான செல்லியம்மனும்,ஊருக்கு மேற்கில் அரணாரை பகுதியில் நீலியம்மனும், ஏரிக்கரையோரம் வெள்ளம் தாங்கியம்மனும், ஊருக்கு கிழக்கில் ஆலந்துறையம்மனும், வடக்கில் திருமங்கையம்மனும், லாடபுரத்தில் திரவுபதியம்மனும், நொச்சியத்தில் பூவாடையம்மனும் கரை ஒதுங்கி, அங்கேயே கோயில் கொண்டு, தங்கள் கோபதாபங்களை எல்லாம் விட்டுக் குளிர்ந்து, பக்தர்களின் மனதையும் குளிரவைத்து, அவர்களுக்கு எல்லையம்மன்களாக விளங்கி பலவிதமான நிகழ்வுகளை நடத்திக்காட்டி பெரும் புகழ் பெற்றுள்ளனர்.

இந்த ஏழுபேரில் வெள்ளம் தாங்கியம்மன் கோபக்கனல் கொண்டவள். இவள் இங்குள்ள ஏரியின் கீழ்ப்பகுதிக் கரையோரம் வந்து ஒதுங்கியதால், அதே இடத்தில் வைத்து ஊர் மக்கள் வழிபட்டு வந்தனர். அந்த சமயத்தில் பெரு மழை பெய்து ஊரெல்லாம் வெள்ளம். பெரம்பலூர் ஏரி நிரம்பி விட்டது. எப்போது வேண்டுமானாலும் கரை உடைந்து ஊரே நாசமாகும் அபாயம். மக்கள் அம்மனிடம் அருள் கேட்டனர். அப்போது அருள் வந்து சாமியாடிய பெண்ணோ, நிறைமாத கர்ப்பிணியைப் பலி கொடுக்க வேண்டும் என்று சொல்ல, மக்கள் மிரண்டு போனார்கள். ஆனாலும் என்ன செய்வது? ஊர் பெரியவர்களின் பார்வை கோயில் பூசாரிமீது விழுந்தது. பூசாரி மிரண்டு போனார். காரணம், பூசாரியின் மகள் முதல் பிரசவத்திற்கு வந்து தங்கியிருந்தாள். பூசாரிக்கும் அவரைச் சார்ந்த பங்காளிகளுக்கும் விஷயம் புரிந்தது. விபரீதம் நிகழாமல் எப்படி தடுப்பது என்று ஆலோசனை செய்தார்கள். மறுநாள் காலை பூசாரியும் அவரைச் சார்ந்த உறவுக் குடும்பங்கள் அத்தனை பேரும் தலைப்பிரசவ மகளோடு இரவோடு இரவாக ஊரைவிட்டு ஓடிவிட்டார்கள். விடிந்ததும் விஷயமறிந்த ஊர் மக்கள், வேறு வழியின்றி தாங்களும் ஊரைக் காலி செய்தனர். ஏரிக்கரை உடைந்து வெள்ளமாக ஓடியது. எப்படியோ உயிர்ச்சேதம் எதுவும் இல்லை. மூன்று ஆண்டுகள் கோயில் திறக்கப்படவில்லை. இதன்பிறகு ஊர் முக்கியஸ்தர்கள் கோயில் பூசாரி குடும்பங்களை மீண்டும் அழைத்து வருவதற்குத் தேடிப்போனார்கள். தஞ்சை மாவட்டம், வல்லம் பகுதியில் குடியேறியிருந்த அவர்களைக் கண்டு, தங்களுடன் வருமாறு அழைத்தனர். அவர்களோ, இந்த ஊரே எங்களுக்குப் பிடித்து விட்டது. இனிமேல் பூசாரிப் பணிக்கு வேறு நபர்களை நியமித்துக் கொள்ளுங்கள் என்றனர். வேறு வழியின்றி இவர்களும் திரும்பி வந்துவிட்டனர். ஆனாலும் அவ்வப்போது இந்த அம்மனை வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இதன்பிறகு வெள்ளம் தாங்கியம்மன் அருள் வாக்குமூலம், என் கோபம் தணிய ஏரிக்கு நடுவிலே கோயில் கொள்கிறேன் என்று சொல்ல, அதன்படியே எப்போதும் நீர் சூழ்ந்திருக்கும் நிலையில் கோயில் அமைக்கப்பட்டு அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டாள்.

அதிசயத்தின் அடிப்படையில்:  

இவ்வூரில் காப்பு கட்டி திருவிழா ஆரம்பிக்கும் முன்பே நள்ளிரவில் பூப்போட்டு விடும் நிகழ்ச்சி நடைபெறுவது சிறப்பு


நேர்த்திக்கடன்-

வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள அம்மனுக்கு பட்டு சார்த்தி, அபிஷேகம் செய்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். 

பொதுதகவல்-
இங்குள்ள அம்மனுக்கு காவலாக  இரண்டு குதிரைக்கு நடுவே புலி வாகனத்தில் அமர்ந்துள்ளார் புலிமுத்தையா.


நன்றி-http://temple.dinamalar.com/New.php?id=1904



சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நாளையும், நாளை மறுதினமும் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளனர். 9 சங்கங்களை சேர்ந்த 10 லட்சம் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளதால் வங்கி சேவைகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஊதிய உயர்வு உடன்பாடு நிலுவையை உடனடியாக அமல்படுத்த வேண்டும், ஊழியர்கள் நலனுக்கு எதிரான வங்கி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த கூடாது, பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும், வெளிநாட்டு வங்கிகளை இந்தியாவில் முதலீடு செய்ய அனுமதிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வங்கி ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகளுடன் இந்திய வங்கி நிர்வாகம் நடத்திய 2 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தன.

இதையடுத்து வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் கடந்த டிசம்பர் 18ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதன் பின்பும் கோரிக்கை நிறைவேற்றப்படாததால், மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், வங்கிகள் சங்க கூட்டமைப்பு மற்றும் இந்திய வங்கிகள் அமைப்பு இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில், ஊதிய உயர்வை 5 சதவீதம் அதிகரித்து 9.5 சதவீதம் வழங்குவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால், ஜனவரி மாதம் 0.5 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டது. 30 சதவீதம் ஊதிய உயர்வு வலியுறுத்தி வரும் வங்கிகள் சங்க கூட்டமைப்பு பிரதிநிதிகள் ஏமாற்றமடைந்தனர்.

இதையடுத்து, திட்டமிட்டபடி நாளையும், நாளை மறுதினமும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வங்கிகள் சங்க கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. 2 நாள் வேலை நிறுத்தத்தில் 9 சங்கங்களை சேர்ந்த 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளதாக அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் அமைப்பின் பொதுச் செயலாளர் வெங்கடாசலம் தெரிவித்தார். வேலை நிறுத்தம் குறித்து இந்திய வங்கி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒருங்கிணைந்த வங்கி யூனியன்களில் அங்கம் வகிக்கும் ஊழியர்களின் ஏஐபிஇஏ, என்சிபிஇ, ஐஎன்பிஇஎப், என்ஓபி டபிள்யு.

பிஇஎப்ஐ ஆகிய 5 யூனியன்கள் மற்றும் வங்கி அதிகாரிகளின் ஏஐபிஓசி, ஐஎன்பிஓசி, எஐபிஒஏ, என்ஒபிசி ஆகிய நான்கு கூட்டமைப்புகள் ஆகியவை ஒரு சில கோரிக்கைகளை முன் வைத்து நாளை மற்றும் 11ம் தேதி ஊழியர்கள் வேலை நிறுத்தத்துக்கான அழைப்பை விடுத்துள்ளது. வங்கிகள் குழுமம் இந்த வேலை நிறுத்தத்தை தவிர்க்க பல வழிகளிலும் முயன்று வருகிறது. ஒரு வேளை வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டால் மேற்கூறிய 2 தினங்களில் வங்கி செயல்பாடுகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் காரணமாக ஏடிஎம்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நன்றி-தினகரன்.
புதுடில்லி : காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் ரயில் டிக்கெட்கள் உறுதியானதும், சம்பந்தப்பட்ட பயணிக்கு தானாக எஸ்.எம்.எஸ்., சேவையை ரயில்வே நிர்வாகம் துவக்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நன்றி-தினமலர்.