Saturday 11 January 2014


தமிழ் நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இந்த ஆண்டு நடத்த உள்ள தேர்வுகளின் விபரம் மற்றும் காலிப்பணியிடங்களின் விபரம் .

Friday 10 January 2014

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே அடையாளம் தெரியாத இளம்பெண்
ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது வியாழக்கிழமை இரவு தெரிய வந்தது.
பசும்பலூரிலிருந்து கொரக்காவாடி செல்லும் சாலையில் உள்ள முனியப்பன் கோவில் அருகே வெள்ளாற்றங்கரையில் சுமார் 25 வயதுள்ள இளம்பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் கிடப்பதாகவும், உடல் அழுகிய நிலையில் இருப்பதாகவும் பசும்பலூர் வடக்கு (பொ) கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், வ.களத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொ) தே. சிவசுப்ரமணியன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.

நன்றி-தினமணி.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 ஊராட்சிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 12) மகளிர் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளது என்றார் ஆட்சியர் தரேஸ்அஹமது.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் சம்பந்தப்பட்ட ஊராட்சித் தலைவர்கள் தலைமையில், மகளிர் கிராமசபைக் கூட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில், தமிழக அரசால் செயல்படுத்தப்படும் மகளிர் நல திட்டங்களின் விவரத்தை மகளிரிடையே தெரிவிக்க வேண்டும். மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஒன்றியக் குழுத் தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி உறுப்பினர்கள் வாக்காளர்களாக சார்ந்துள்ள கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க வெண்டும். கூட்டத்தை கண்காணிக்க, ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பற்றாளர்களாகவும், வட்டாரம் வாரியாக, மண்டல அலுவலர்கள் மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, மகளிர் கிராமசபைக் கூட்டத்தில் அனைத்து மகளிரும் பங்கேற்று கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழிவகுக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

நன்றி-தினமணி.
   
 RSS  ஒரு சமூக பண்பாட்டு இயக்கமாக கடந்த 1925 ம் ஆண்டு துவக்கப்பட்டது. இன்று ஆலமரமாக விரிவடைந்து பத்தாயிரத்திர்க்கும் மேற்பட்ட சமூக சேவை பணிகளை ஆற்றி வருகிறது. சென்னையில் நடந்துகொண்டிருக்கும் புத்தக கண்காட்சிக்கு வரும் அன்பர்கள் , நமது சானதான தர்மத்தை காக்க பாடுபடும் RSS இயக்கத்தின் தொடர்பு ஊடகமான விஜபாரதம் அரங்கிற்கு வருகை தாருங்கள் உறவுகளே... அரங்கு எண் 430 மற்றும்  431. இடம் YMCA மைதானம் அண்ணா சாலை , சென்னை-35.

பிரவீன் குமார் CEO TN

தமிழ்நாடு தேர்தல் ஆணையம் நேற்று  (ஜனவரி1௦-2௦14) திருத்தப்பட்ட வாக்காளர்  பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலின் அடிப்படையில்தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் வாக்களிக்கமுடியும். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் மற்றும் பெரம்பலூர் நகர பட்டியல் விபரத்தை இனைய தளத்தில் வெளியிட்டுள்ளது. மொத்தம் 292 தலைப்பில் பெரம்பலூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. உடும்பியம் கிராமத்தில் ஆரம்பித்து படாலுரில் பட்டியல் முடிவடைகிறது. PDF கோப்பில் உள்ள இந்த பட்டியலை பின்வரும் இணைப்பில் சொடுக்கி (click) செய்து உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என அறிந்துகொள்ளுங்கள்.

பெரம்பலூர் மாவட்ட வாக்காளர் பட்டியல். (click பண்ணுங்க)
 தமிழக தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் வ.களத்தூர் வாக்காளர்பட்டியல் வார்டு வாரியாக விபரம் உங்களின் கவனத்திற்கு......... இந்த பட்டியல் pdf கோப்பில் உள்ளது... மேலும் தேர்தல் ஆணைய இணையதள  இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது... இணைப்பில் சொடுக்கி (click) செய்து பார்க்கவும்..........

1.வி.களத்தூர் (வ.கி) மற்றும் வி.களத்தூர் (ஊ) 
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (பெண்கள்) வண்ணாரம்பூண்டி வடக்குபகுதி வடக்கு மெத்தை கட்டிடம் வ.களத்தூர்.

1-நடுத்தெரு வார்டு 1
2-தெற்கு தெரு வார்டு 1
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147090.pdf

2.வி.களத்தூர் (வ.கி) மற்றும் வி.களத்தூர் (ஊ)
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (பெண்கள்) வண்ணாரம்பூண்டி வடக்குபகுதி வடக்கு மெத்தை கட்டிடம் வ.களத்தூர்

1-வி.களத்தூர் வடக்கு தெரு வார்டு 1
2-மில்லத் நகர் வார்டு 4
3-போஸ்டாபிஸ் தெரு வார்டு 2
4-அக்கரகாரத்தெரு வார்டு 3
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147091.pdf

3.வி.களத்தூர் (வ.கி) மற்றும் வி.களத்தூர் (ஊ)
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வண்ணாரபூண்டி வடக்கு பார்த்த மேற்கு ஓட்டுக்கட்டிடம் வண்ணாரம்பூண்டி வி.களத்தூர்

1-அக்கரகாரத்தெரு வார்டு 3
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147092.pdf

4.வி.களத்தூர் (வ.கி) மற்றும் வி.களத்தூர் (ஊ)


ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெண்கள் தென்வடல் மெத்தைக்கட்டிடம் மேற்கு பார்த்தது வண்ணாரம்பூண்டி வி.களத்தூர்

1-மேலத் தெரு வார்டு 4
2-தெற்கு தெரு வார்டு 4
3-மேட்டுச் சேரி வார்டு 5
4-போஸ்டாபிஸ் தெரு வார்டு 2
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147093.pdf

5.வி.களத்தூர் (வ.கி) மற்றும் வி.களத்தூர் (ஊ)
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (பெண்கள்) வண்ணாரபூண்டி கிழக்கு ஆஸ்பெஸ்டாஸ் கட்டிடம் வடக்குபகுதி தெற்கு பார்த்தது வி.களத்தூர்

1-காமராஜர் நகர் வார்டு 4
2-மில்லத்நகர்வார்டு 4
3-தெற்கு தெரு வார்டு 4
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

 http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147094.pdf

6.அயல்நாடு வாழ் வாக்காளர்கள்
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பகுதி 5 வடக்கு பார்த்த கிழக்கு ஆஸ்பெஸ்டாஸ் கட்டிடம் தெற்குபகுதி வண்ணாரம்பூண்டி வி.களத்தூர்

1-வி.களத்தூர் பள்ளிவாசல் வீதி வார்டு 1,2
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147095.pdf

7.வி.களத்தூர் (வ.கி) மற்றும் வி.களத்தூர் (ஊ)
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெண்கள் வடக்கு பார்த்த கற்போம் கற்பிப்போம் மெத்தை கட்டிடம் வண்ணாரம்பூண்டி வி.களத்தூர்

1-வண்ணாரம்பூண்டி ரேசன்தெரு வார்டு 4
2-மில்லத் நகர் வார்டு 4
3-வண்ணாரம்பூண்டி காலனிதெரு வார்டு 5
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147096.pdf

8.வி.களத்தூர் (வ.கி) மற்றும் வி.களத்தூர் (ஊ)
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வண்ணாரபூண்டி கிழக்குபார்த்த ஒட்டு கட்டிடம் வ.களத்தூர்


1-ராயப்ப நகர் வார்டு 6
2-வள்ளியூர் வார்டு 6
3-இந்திரா நகர் வார்டு 6
99-அயல்நாடு வாழ் வாக்காளர்கள்

http://elections.tn.gov.in/PDF/dt17/ac147/ac147097.pdf

நன்றி-தமிழ்நாடு தேர்தல் ஆணையம்.


Thursday 9 January 2014

பொங்கல் விளையாட்டுப்போட்டி மற்றும் கலை நிகழ்சிகள் நடத்த வ.களத்தூர் காவல்நிலையத்தை அனுமதிக்காக அணுகியபோது , ஒரு நாள் மட்டுமே அனுமதி வழங்கமுடியும் என கூறியது நீங்கள் அறிந்ததே.............

அனுமதி பெற நாம், தமிழக முதல்வரின் தனி பிரிவுக்கு மனு செய்ததோடு அல்லாமல் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி.சோனல் சந்திரா IPS அவர்களிடம் நேரில் மனு கொடுக்கப்பட்டது..........

நம் தொடர் போராட்டத்தின் காரணமாக இன்று நமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நான்கு நாட்களும் போட்டிகள் நடத்த வ.களத்தூர் காவல்துறை அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளார்கள்.............

இது தொடர்பாக நமது போட்டி பற்றிய நிகழ்ச்சி நிரலை தருமாறு நமது விவேகானந்தர் மன்றத்தினை வ.களத்தூர் காவல்துறை அதிகாரிகள்  கேட்டுக்கொண்டுள்ளனர்............

Wednesday 8 January 2014


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு எளிதாகச் சென்று வரும் வகையில் தமிழகம் முழுவதும் 6,514 கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை பிறப்பித்த உத்தரவின் விவரம்:
தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை தங்களது சொந்த மண்ணில் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் சிறப்பு பஸ்களை இயக்கவும், சிறப்பு வசதிகளைச் செய்து தரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, சென்னை கோயம்பேடு புறநகர் பஸ்நிலையத்திலிருந்து 10.1.2014 (வெள்ளிக்கிழமை) அன்று 600 சிறப்பு பஸ்களும், 11.1.2014 (சனிக்கிழமை) அன்று 1,325 சிறப்பு பஸ்களும், 12.1.2014 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 1,175 பஸ்களும், 13.1.2014 (திங்கள்கிழமை) அன்று 339 சிறப்பு பஸ்களும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளன. 14.1.2014 (பொங்கல்) அன்று தேவைக்கேற்ப பஸ்கள் இயக்கப்படும்.
இதுபோல் சென்னையைத் தவிர்த்த மாநிலத்தின் பிற பகுதிகளில் 10.1.2014 அன்று 345 சிறப்பு பஸ்களும், 11.1.2014 அன்று 750 சிறப்புப் பஸ்களும், 12.1.2014 அன்று 760 சிறப்புப் பஸ்களும், 13.1.2014 அன்று 1220 சிறப்புப் பஸ்களும் இயக்கப்பட உள்ளன.
மொத்தத்தில் 10.1.2014 முதல் 13.1.2014 வரை வழக்கமாக இயக்கப்படும் பஸ்களோடு 6,514 சிறப்புப் பஸ்களும் இயக்கப்படும்.
மேலும், பொங்கல் பண்டிகை முடிந்து ஊர் திரும்ப வசதியாக இதே அளவிலான சிறப்பு பஸ்கள் 16.1.2014 முதல் 19.1.2014 வரை இயக்கப்பட உள்ளன.
சிறப்பு முன்பதிவு மையங்கள்:  பயணிகளின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் 25 சிறப்பு முன்பதிவு மையங்களும் அமைக்கப்பட உள்ளன.
மாநகரிலும் கூடுதல் பஸ்கள்:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகருக்குள்ளும் கூடுதல் சிறப்பு பஸ்களை இயக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை தீவுத் திடலில் அமைந்துள்ள சுற்றுலா பொருள்காட்சி, அண்ணா சதுக்கம், காந்தி மண்டபம், விஜிபி, முட்டுக்காடு, கோவளம், எம்ஜிஎம், மாமல்லபுரம், வண்டலூர் உயிரியல் பூங்கா, கிஷ்கிந்தா, குயின்ஸ் லாண்டு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா மையங்களுக்கு ஜனவரி 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
புகார் எண்: பொங்கல் பண்டிகை நெரிசலை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆம்னி பஸ்கள் மற்றும் அரசு பஸ்கள் குறித்து கோயம்பேடு புறநகர் பஸ்நிலையத்தில் அமைந்துள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக அலுவலகத்தை 044 - 24794709 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

நன்றி-தினமணி.

பிளஸ் 2 தனித்தேர்வர்களின் சுமார் 50 ஆயிரம் மதிப்பெண் சான்றிதழ்களுக்கு பல ஆண்டுகளாக யாரும் உரிமை கோரவில்லை. எனவே, இந்த சான்றிதழ்கள் மூன்று மாதங்களுக்குப் பிறகு அழிக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற விரும்பினால், அரசுத் தேர்வுகள் இயக்ககத்திடம் மூன்று மாதங்களுக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 2006 முதல் செப்டம்பர் 2011 வரை நடைபெற்ற பிளஸ் 2 தேர்வுகளில் தனித்தேர்வர்கள் பலர் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களுக்கு உரிமை கோரவில்லை. அதோடு, விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்பட்ட பழைய மதிப்பெண் சான்றிதழ்களும் உரிமை கோரப்படாமல் உள்ளன.
இதனால், சுமார் 50 ஆயிரம் மதிப்பெண் சான்றிதழ்கள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் தேங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜூன் மற்றும் அக்டோபர் மாதம் நடைபெறும் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்களில் பலர் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெறுவதில்லை. இதன்காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மதிப்பெண் சான்றிதழ்கள் சேர்ந்துவிடுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த உரிமை கோரப்படாத மதிப்பெண் சான்றிதழ்களை அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சான்றிதழ்களுக்கான தனித்தேர்வர்களின் நலனைக் கருத்தில்கொண்டு அவர்களுக்கு மூன்று மாதம் கால அவகாசம் வழங்கப்படுகிறது.
இந்த கால அவகாசத்துக்குள் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற விரும்பும் தனித்தேர்வர்கள், தாங்கள் தேர்வு எழுதிய ஆண்டு, மாதம், பதிவெண், மையம் ஆகிய விவரங்களைத் தெரிவித்து, சுயமுகவரியிட்ட ரூ.40-க்கான அஞ்சல் தலை ஒட்டப்பட்ட உறையுடன் கீழ்க்கண்ட அலுவலருக்கு விண்ணப்பிக்கலாம்.
அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கூடுதல் செயலாளர் (மேல்நிலை), எச்-9 பிரிவு, அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 என்ற முகவரிக்கு அவர்கள் விண்ணப்பித்து சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த கால அவகாசத்துக்குள் பெறப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் எவ்வித அறிவிப்புமின்றி அழிக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
2 ஆண்டுகள் வரை மட்டுமே..
மேலும் எதிர்காலத்தில் உரிமை கோரப்படாமல் உள்ள மதிப்பெண் சான்றிதழ்கள் இரண்டு ஆண்டுகள் வரை மட்டுமே பாதுகாக்கப்பட்டு, பின்னர் அழிக்கப்பட்டுவிடும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

சென்னை;தமிழகத்தில், புதிதாக துவங்கப்பட்ட, உடனடி, '104' மருத்துவ சேவைத் திட்டத்திற்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு வாரத்தில், 27 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளன. மருத்துவமகளில், டாக்டர், நர்ஸ் இல்லாவிட்டாலும், '104' என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

பொதுமக்கள் தாங்கள் இருப்பிடத்தில் இருந்தே, மருத்துவ ஆலோசனை பெறும், உடனடி, '104' மருத்துவ ஆலோசனைத் திட்டத்தை, தமிழக அரசு துவக்கியுள்ளது. இதன் தலைமையகம், சென்னை கஸ்துாரிபாய் மருத்துவமனையில் உள்ளது. '104' என்ற எண்ணுக்கு, 10 இணைப்புகள் உள்ளன.இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டால், முதலுதவி, பல்வேறு மருத்துவ ஆலோசனைகள், மன அழுத்தம் போக்கும் வழிமுறைகள் குறித்தும் விளக்கப்படும். அருகே உள்ள மருத்துவமனை விவரம் தரப்படும். இத்திட்டம், செயல்பாட்டுக்கு வந்து ஒரு வாரமே ஆகும் நிலையில், மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர், குழந்தைசாமி கூறியதாவது:
எதிர்பார்த்ததை விட, '104' திட்டத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு வாரத்தில், ஆலோசனை கேட்டு, 27,276 அழைப்புகள் வந்துள்ளன. இது எப்படி செயல்படுகிறது என, தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் பலரும் போன் செய்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் டாக்டர் இல்லை; நர்ஸ் இல்லை என்றாலும், இந்த எண்ணில் தெரிவிக்கலாம். இதற்கு உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யப்படும்.
பணிக்கு வராத டாக்டர்கள், பணியாளர்களிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதனால், வெளிப்படைத்தன்மை உருவாகும். சில மாதங்களில், தினமும், 10 ஆயிரம் அழைப்பு வரை வர வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.


தேசிய அடையாள அட்டைக்கான இரண்டாம் கட்ட பதிவு நடைபெற்று வருகிறது பொதுமக்கள் இந்த வாய்ப்பினை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இ.அ.ப., அவர்கள் தகவல்.
               
இதுகுறித்து இன்றைய செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டைக்கான பதிவு செய்யும் முதல் கட்ட முகாம் முடிவுற்றதை அடுத்து இரண்டாம் கட்டமாக பெரம்பலூர், வேப்பந்தட்டை வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் 2010 தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களுக்கு  தேசிய அடையாள அட்டை பெற புகைப்படம், கைரேகை, விழித்திரை பதிவு செய்யாதவர்கள் பதிவு செய்திட ஏதுவாக சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
அதன்படி பெரம்பலூர் நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பழைய நகராட்சி அலுவலகத்திலும், பெரம்பலூர், குரும்பலூர் மற்றும் வேப்பந்தட்டை வட்டம் பசும்பலூர், வெங்கலம் மற்றும் வாலிகண்டபுரம் குறுவட்ட பகுதி  கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தொடர்புடைய வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும் தங்களது தகவல்களை பதிந்து கொள்ள வேண்டும்.
மேலும், இம்முகாமிற்கு பதிவு செய்யவரும் பொதுமக்கள் அனைவரும் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது வழங்கப்பட்ட ஒப்புதல் சான்று அல்லது கிராம நிர்வாக அலுவலர் சான்று மற்றும் அசல் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டையுடன் பதிவு செய்ய வரவேண்டும்.
 2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது கிராமத்தில் குடியிருப்பு இல்லாதவர்கள், கணக்கெடுப்பின் போது விடுபட்டவர்கள் மற்றும் புதியதாக குடியேறியவர்கள், புதியதாக தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் விபரங்களை பு+ர்த்தி செய்து தாக்கல் செய்திட வேண்டும். மேற்படி புதிய கணக்கெடுப்பு படிவத்தினை தொடர்புடைய வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், பெரம்பலூர்.
வ.களத்தூர் காவல் நிலைய அதிகாரிகள் ஒரு நாள் மட்டுமே பொங்கல் விளையாட்டுப்போட்டி நடத்த அனுமதி கொடுக்க முடியும் என்று கூறி உள்ள நிலையில் இன்று பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி .சோனல் சந்திரா IPS அவர்களை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளோம்........ வாருங்கள் உறவுகளே நம் பண்பாட்டையும் ,உரிமையையும் காக்க போராடுவோம்...... நீங்களும் தமிழக முதல்வர் அவர்களுக்கு மனு செய்யுங்கள் உறவுகளே....

மனு கொடுக்க http://cmcell.tn.gov.in/

Tuesday 7 January 2014




வ.களத்தூரில் வருடம்தோறும் பொங்கல் விளையாட்டுவிழா நான்கு நாட்கள் நடத்திவருகிறோம்.. ஆனால் இந்தமுறை நடத்த வ.களத்தூர் காவல் நிலையத்தில் ,காவல்துறை அனுமதி வழங்க விண்ணபித்தபோது , ஒரு நாள் மட்டுமே அனுமதி வழங்கமுடியும் எனகூறிவிட்டார்கள் . எனவே நமது சங்கத்தின் சார்பாக தமிழக முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம் .............. அதன் விபரம்.

தமிழ்நாடு அரசு
முதலமைச்சரின் தனிப் பிரிவு

கோரிக்கை எண் 2014/762829/KF
கோரிக்கை தேதி 08/01/2014
பெயர் S SATHIYARAJ தந்தை / கணவர் பெயர் T SELVARAJ
முகவரி 4/45, Melatheru, V.KALATHUR, Veppanthattai, V.KALATHUR,
Perambalur-621117
Tamilnadu
கோரிக்கை முதன்மை பிரிவு காவல்துறை

கோரிக்கை மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு வணக்கம், நான் வ.களத்தூர் கிராமத்தில் வசித்து வருகிறேன். எங்கள் ஊரில் இளைஞர்களால் நடத்தப்படும் விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றத்தின் செயலாளராக உள்ளேன் .எங்கள் ஊரில் பொங்கலை முன்னிட்டு வருடம் தோறும் விளையாட்டு போட்டிகள் நடத்திவருகிறோம். வ.களத்தூர் காவல்துறை அனுமதியுடம் இப்போட்டிகளை நடத்திவருகிறோம் . வழக்கமாக போகிப்பண்டிகை, தைப்பொங்கல். மாட்டுப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் ஆகிய நான்கு நாட்கள் விளையாட்டு போட்டிகள் நடத்துவது வழக்கம் . அதுபோல் இந்த வருடமும் போட்டிகளை நடத்த அனுமதி பெற வ.களத்தூர் காவல் நிலையத்தில் விண்ணப்பித்தோம். ஆனால் ஒரு நாள் மட்டுமே விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்க முடியும் என வ.களத்தூர் காவல்நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்கு முன் நடத்தப்பட்ட விளையாட்டுப்போட்டிகளில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெற்றதில்லை. மேலும் ஒவ்வொரு முறையும் காவல்துறை அனுமதி பெற்றுதான் நான்கு நாங்களும் போட்டிகள் நடத்தப்பட்டன. ஆனால் இந்தவருடம் ஒருநாள் மட்டுமே நடத்த காவல்துறை அனுமதிப்பதால் எங்கள் ஊரில் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வந்த போட்டிகள் நடைபெறாமல் போவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன. இதனால் எங்கள் ஊரின் பண்பாட்டு பாரம்பரியம் ஒழிந்து போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்கள் கருணையுடன் இந்த மனுவை பரிசீலித்து , நான்கு நாட்களும் போட்டி நடத்த உத்தரவிடுமாறு பணிவுடன்கேட்டுக்கொள்கிறேன்.


கடலூர்:தபால் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "மொபைல் மணியார்டர் சேவை' மேலும் 131 கிளைகளுக்கு விரிவுப்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து கடலூர் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
இந்திய தபால் துறையும், பி.எஸ்.என்.எல்., நிர்வாகமும் இணைந்து துவங்கியுள்ள "மொபைல் மணியார்டர் சேவை' கடந்த நவம்பர் 16ம் தேதி மொத்தம் 103 தலைமை தபால் நிலையங்கள் மற்றும் துணைத் தபால் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தில் மணியார்டர் அனுப்புபவரும், பெறுபவரும் மொபைல் போன் வைத்திருக்க வேண்டும். பணம் பெற விரும்புபவர், சேவையுள்ள தபால் நிலையத்திற்கு சென்று உரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய தொகையை செலுத்தியதும், 6 இலக்க ரகசிய குறியீட்டு எண் பணம் அனுப்புபவரின் மொபைலுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும்.
தொடர்ந்து பணம் அனுப்பும் விவரம், பணம் பெற வேண்டிய தபால் நிலையம் குறித்த விவரங்களை பணம் பெறுபவரின் மொபைலுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும்.
பணம் பெறுபவர் விவரம், அவரது அடையாளச் சான்று, பணம் அனுப்புபவர் மூலம் பெறப்பட்ட ரகசிய குறியீட்டு எண் ஆகியவற்றை, "மொமபைல் மணியார்டர் சேவை' உள்ள தபால் நிலையத்தில் காண்பித்து பணத்தை சில நிமிடங்களில் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த முறையில் ஒருவர் 1,000 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை ஒரே நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் அனுப்ப முடியும். இதற்கு சேவைக் கட்டணமாக 1,500 ரூபாய் வரை 45 ரூபாய், 5,000 ரூபாய் வரை 79 ரூபாய், 10 ஆயிரம் ரூபாயிற்கு 112 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
தற்போது இந்த சேவை மேலும் 131 தபால் நிலையங்களில் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள் ளது.

நன்றி-தினமலர்.

லக்னோ: உத்திரபிரதேச மாநிலத்தில், கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் சந்தித்து தங்களின் அமைப்பில் சேர மூளைச்சலவை செய்ததாக தற்போது திடுக் தகவல் வெளியாகியிருக்கிறது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காப்பதில் உறுதியாக இருப்பேன் என்று வாக்குறுதி கொடுத்த இம்மாநில இளம் முதல்வர் அகிலேஷ் அரசின் சட்டம், ஒழுங்கு மற்றும் போலீசாரின் செயல்பாடுகள் சந்தி சிரிக்கும் அளவிற்கு போய் விட்டது. இது தொடர்பான மேல் நடவடிக்கைக்கு டில்லி சிறப்பு படையினர் முஷாபர்நகர் விரைந்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் உ.பி., மாநிலம் முஷாப்பர்நகர் பகுதியில் இரண்டு பிரிவினர் மோதிக்கொண்டனர். இதில் 60 பேர் கொல்லப்பட்டனர். 40 ஆயிரம் பேர் வீடுகள் இழந்தனர். பலர், வாழ்ந்த பகுதியில் இருந்து வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இன்னும் பலரும் தங்களின் இல்லங்களுக்கு திரும்பாமல் உள்ளனர்.

கடந்த மாதத்தில் உளவுத்துறையினருக்கு கிடைத்த தகவலின்படி அரியானா மாநிலம் மெவாத் என்ற பகுதியில் ஹபீஸ் ரஷீத், ஷாகித் ஆகியோரை கைது செய்தனர். இருவரும் மதக்குருக்கள் ஆவர். இந்த இருவரும் டில்லியில் தாக்குதல் நடத்துவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து வந்ததாகவும் உளவுப்பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. ஒரு போனை இடைமறித்து கேட்டபோது இந்த விஷயம் தெரிய வந்ததாக உளவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் பல முறை முஷாப்பர்நகர் சென்றதாகவும், இங்கு பலரிடம் தொடர்பில் இருந்ததாகவும் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் மாஜிஸ்ட்ரேட் முன்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதில் லஷ்கர் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து பணியாற்றுமாறு சிலர் கேட்டனர். ஆனால் நான் மறுத்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

முஷாபர்நகரில் வசிக்கும் முகம்மது ஷாகித், அப்துல்சுவாப் உள்ளிட்ட 3 பேர் இதற்கான பணச்செலவு செய்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து மேலும் விசாரிக்க டில்லியில் இருந்து சிறப்பு செல் பிரிவு போலீசார் முஷாப்பர் நகர் விரைந்துள்ளனர்.

முன்கூட்டியே ராகுல் தகவல்: கலவரம் தொடர்பாக ஒரு கூட்டத்தில் ராகுல் பேசுகையில் முஷாப்பர்நகரில் கலவரத்தில் ஈடுபடுவோர் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருக்கின்றனர் என கூறியிருந்தார். இதற்கு கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது முக்கிய பிரச்னை ஆகும். மத்திய அரசு இது குறித்து சிறப்பு விசாரணை நடத்த வேண்டும், இதற்கு அரசு பதில் சொல்லி தெளிவுப்படுத்த வேண்டும் என பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவேட்கர் கூறியுள்ளார்.

சரியாக சொன்னார் ராகுல்: இது குறித்து காங்., செய்தி தொடர்பாளர் திக்விஜய்சிங் கூறுகையில்: ராகுல் சொன்னது சரியா போச்சு, அது நிரூபிக்கப்பட்டுள்ளது. எது உண்மையோ அதையே ராகுல் பிரதிபலித்துள்ளார் என்றார்.

Click Here

நன்றி-தினமணி.


செட்டிக்குளத்தில், ஜன. 12-ல் பொங்கல் சுற்றுலா விழா நடைபெறுகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
பெரம்பலூரில் பொங்கல் சுற்றுலா விழா நடத்துவது குறித்து திங்கள்கிழமை நடைபெற்ற முன்னேற்பாட்டுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்த ஆட்சியர் மேலும் பேசியது:
ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளம் கிராமத்தில் உள்ள பாலதண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு அருகில், மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த விழா கொண்டாடப்பட உள்ளது. இதில் கிராமிய முறையில் பொதுமக்கள் பொங்கல் வைத்துக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புற கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தெருக்கூத்து, நாதஸ்வரம் மற்றும் நாட்டுப்புற பாடல்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் 700-க்கும் மேற்பட்ட கிராமியக் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கேற்க உள்ளனர்.
மேலும், செய்தி- மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சியும், மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருள்களின் விற்பனைக் கண்காட்சியும் நடைபெறும்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான கபடி, உறியடித்தல், கயிறு இழுத்தல், வழுக்கு மரம் ஏறுதல், வாலிபால் மற்றும் 14 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கான சாக்கு ஓட்டம் மற்றும் தேக்கரண்டியில் எலுமிச்சை பழத்துடன் ஓடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படும்.
இதில் போட்டியில் வெற்றி பெறுபவரைத் தேர்வு செய்ய நடுவர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் ஜன. 10-க்குள் தங்களது விண்ணப்பங்களை செட்டிக்குளம் ஊராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.   ஆலத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர் வெண்ணிலா ராஜா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (ஊராட்சிகள்) சிவக்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் பி. சைமன்ராஜ், செட்டிக்குளம் ஊராட்சித் தலைவர் ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.     

நன்றி-தினமணி.
தேசிய அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான சைக்கிள் போட்டியில், பெரம்பலூர் மாவட்ட இளைஞர் 2-ம் இடம் பெற்றார்.
பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் கலைச்செல்வன் (29). 10-ம் வகுப்பு வரை படித்துள்ள மாற்றுத் திறனாளியான இவர்  பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர். இதனிடையே, குஜராத் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான சைக்கிள் போட்டியில், தமிழ்நாடு சார்பில் பங்கேற்று 2-ம் இடம் பெற்றார். இவரை மாவட்ட விளையாட்டு அலுவலர் சைமன்ராஜ் உள்ளிட்டோர் திங்கள்கிழமை பாராட்டினர்.

நன்றி-தினமணி.

Monday 6 January 2014


அண்ணா பல்கலைகழகம்.
அண்ணா பல்கலைக்கழகம் குறுகிய கால "ஆரக்கல்' கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் படிப்பை அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ராமானுஜன் கம்ப்யூட்டிங் மையத்தில் இந்தப் படிப்பு வழங்கப்பட உள்ளது.
இதில் பிறக் கல்லூரி மாணவர்களும் சேர்ந்து பயன்பெற முடியும்.
இந்தப் படிப்புக்கான முதல் பேட்ச் பிப்ரவரி 5-ம் தேதியும், இரண்டாம் பேட்ச் பிப்ரவரி 8-ம் தேதியும் தொடங்கப்படவுள்ளது.
இந்தப் படிப்பு குறித்து மேலும் விவரங்களுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் http://online.annauniv.edu:8080/dbms/home.php  என்ற இணைய தளத்தை தொடர்பு கொள்ளலாம்.

நன்றி-தினமணி.
தமிழகத்தில் வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியீடு ஜனவரி 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்தார்.
தமிழகத்தில் புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்காக கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பர் வரை சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்றன. வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கக் கோரி தமிழகம் முழுவதும் 28 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து வாக்காளர் இறுதிப் பட்டியல் ஜனவரி 6-ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.
இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக பட்டியல் வெளி யிடுவது வரும் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்தார். 

நன்றி-தி இந்து.


பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் போனஸ் மற்றும் பொங்கல் பரிசை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஞாயிற்றுக் கிழமையன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதன் முதலில் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பொங்கல் திருநாளன்று கருணைத்தொகை வழங்கும் முறையை அறிமுகப்படுத்திய பெருமை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரையே சாரும்.
எனது தலைமையிலான அரசும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது.
அந்த வகையில், பொங்கல் பண்டிகையை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் சிறப்பாக கொண்டாட, போனஸ் மற்றும் சிறப்பு போனஸ் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3,000 ரூபாய் என்ற உச்சவரம்பிற்கு உட்பட்டு 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையான மிகை ஊதியம் வழங்கப்படும்.
‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், 2012 2013 ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்த, மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழு நேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள்; தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள்; சிறப்புக்கால முறை ஊதியம் பெற்று வரும் சத்துணவுத் திட்டப் பணியாளர்கள்; ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள்; கிராம உதவியாளர்கள்; ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் சிறப்பு காலமுறை ஊதிய விகிதத்தில் பணிபுரிந்து வரும் பஞ்சாயத்து உதவியாளர்கள்; ஒப்பந்தப் பணியாளர்கள்; ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள்; தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுபவர்கள் மற்றும் தினக் கூலிகளாக பணியாற்றி பின்னர் நிரந்தரப் பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு 1,000 ரூபாய் சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.
உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலு வலர்கள் மற்றும் ஆசிரியர்கள்; பல்கலைக்கழக மானியக்குழு, அனைத் திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் கீழ் சம்பள விகிதம் பெறுபவர்கள்; அனைத்திந்தியப் பணி விதிமுறைகளின் கீழ் சம்பளம் பெறுபவர்கள் ஆகியோருக்கும் இந்த மிகை, சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.
ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் (தலையாரி மற்றும் கர்ணம்) ஆகியோருக்கு 500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும்.
இதனால் அரசுக்கு 308 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.இதன் மூலம், தமிழர் பண்பாட்டு விழாவான பொங்கல் திருநாளை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் மகிழ்ச்சி பொங்க கொண்டாட வழிவகை செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் எனது பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்! இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். 

நன்றி-தி இந்து.
பெரம்பலூரில் ஜன. 31 முதல் பிப். 9 வரை நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையிலான கலை,  இலக்கிய போட்டிகளில் பங்கேற்ற அழைப்பு விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் நகராட்சி மையானத்தில் ஜன. 31 முதல் பிப். 9 வரை புத்தக திருவிழா - 2014 நடைபெற உள்ளது. அதையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் ஜன. 6 காலை பேச்சுப்போட்டி, மாலை கவிதைப் போட்டி, 7-ம் தேதி காலை வினாடி- வினா போட்டி,  மாலை பாட்டுப்போட்டி, 8-ம் தேதி காலை ஓவியப் போட்டி, மாலை கதை சொல்லும் போட்டி, 9-ம் தேதி காலை தமிழ்சொல் கூறுதல் போட்டி, மாலை தமிழில் உரையாடுதல் போட்டி, 10-ம் தேதி காலை பழமொழிப் போட்டி, மாலை தனித்திறன் போட்டிகள் நடைபெறும்.
காலையில் 10.30-க்கும், மாலையில் 2.30-க்கும் வட்டார அளவில் போட்டிகள் நடைபெறுகிறது. அதன்படி பெரம்பலூர் வட்டத்திற்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு, பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், வேப்பந்தட்டை வட்டாரத்திற்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், வேப்பூர் வட்டாரத்திற்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், ஆலத்தூர் வட்டாரத்திற்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பாடாலூர் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் போட்டிகள் நடைபெறும்.
போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இறுதிப்போட்டி நடைபெறும்.
இந்தப் போட்டியில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறுவோருக்கு ரூ. 1,000, ரூ. 500, ரூ. 300க்கான பரிசுக் கூப்பன்கள், சான்றிதழ்கள் புத்தகக் கண்காட்சிமேடையில் சிறப்பு விருந்தினர்களால் அளிக்கப்படும். பரிசுக் கூப்பன்களை அரங்கத்தில் உள்ள புத்தகக் கடைகளில் அளித்து, தேவையான புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களைத் தொடர்புகொள்ளலாம்.

நன்றி-தினமணி.

மூக்கணாங்கயிறு

பெரம்பலூர், : பெரம்பலூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காளைகள், பசுக்களுக்கு கட்டும் புத்தம்புது மூக்கணாங் கயிறு மற்றும் சலங்கைகள் விற்பனை களை கட்டியுள்ளது.
பொங்கல் என்றதும் செங்கரும்பு, மஞ்சள் நம் நினைவுக்கு வருவது போல், உழவர் திருநாள் என்றால் உழவர்களின் உற்றத் தோழனாகத் திகழும் காளை மாடுகளும், இல்லந்தோறும் உள்ளம் மகிழும் பசுக்களும் கட்டாயம் நம் நினைவுக்கு வரும்.
பொங்கல் பண்டிகையின் போது உழவர்கள் புத்தம் புது பானையில் சமைத்த பொங்கலை படையலிட்டு முதலில் வயலை உழுத காளை மாடுகளுக்குத்தான் ஊட்டி விடுவர். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காளை மாடுகளை பெருமைப்படுத்த மாடுகளின் கொம்புகளை சீவி, வண்ணமடித்து, குளிப்பாட்டி வண்ண வண்ண பொட்டுகள் இட்டு, கழுத்தில் விதவிதமான சலங்கைகள் கட்டி அலங்கரிப்பது வழக்கம்.
மேலும், மாடுகளுக்கு வழக்கமாக அணிவிக்கப்பட்டிருக்கும் பழைய மூக்கணாங் கயிறுகளை மாற்றிவிட்டு, புத்தம் புது கயிறுகளை வாங்கி அணிவிப்பர். இதன் படி, பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மாடுகளுக்கு அணிவிக்கும் சலங்கைகள், மாட்டு வண்டிக்கும், கொம்புகளுக்கும் பூசக்கூடிய வண்ண வண்ண பெயிண்டுகளோடு, மூக்கணாங் கயிறுகளின் விற்பனையும் பெரம்பலூர் நகரில் களை கட்டியுள்ளது. இங்குவிற்கப்படும் மூக்கணாங் கயிறு, சலங்கைகள் ஆகியவற்றை பெரம்பலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த உழவர்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

தோல் பட்டைகளில் இணைத்துள்ள விதவிதமான சலங்கைகள், கழுத்துக் கயிற்றில் தொங்கவிடும் சலங்கைகள் என விதவிதமான சலங்கைகள் விற்பனைக்காக கடைகளின் முன்பு தொங்கவிடப்பட்டுள்ளன.
ஊருக்கே  உணவுத் தானியங்களை உற்பத்தி செய்ய, உழைத்து வாழும் தங்களுக்குத் தோள் கொடுக்கும் தோழனாக விளங்கிடும் காளைகளுக்கும், குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்துத் தரப்பினருக்கும் அன்றாடம் சத்துள்ள அமிர்தமாக பாலைத் தரும் பசுக்களுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக அவற்றை அலங்கரிக்கும் பணியில் உழவர்கள் இப்போதே ஈடுபட்டுள்ளனர்.

நன்றி-தினகரன்.


பெரம்பலூர், :  பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி நேற்று துவங்கியது. இதை 13ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என்று கலெக்டர் (பொ) சுப்பிரமணியன் தெரிவித்தார்.
   தமிழக அரசு உத்தரவுப் படி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன்  கடைகளில் அரிசிபெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் பொங்கல் பண்டிகைக் கான இதர பொருட்கள் வாங்குவதற்காக ரூ.100 ரொக்கம், விலையில்லா வேஷ்டி, சேலை உள்ளிட்ட பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
இதன்படி பெரம்பலூர் தாலுகாவில் 42 ஆயிரத்து 535 அரிசி விருப்ப குடும்ப அட்டைதாரர்களுக்கும், 272 காவலர் குடும்ப அட்டைதாரர்களுக்கும், 70 முகாம் வாழ் இலங்கைத் தமிழர் அட்டைதாரர்களுக்கும், 42 ஆயிரத்து 877 கிலோ வீதம் பச்சரிசியும், சர்க்கரையும் ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது.
வேப்பந்தட்டை தாலுகாவில் 43 ஆயிரத்து 364 அரிசி விருப்ப குடும்ப அட்டைதாரர்களுக்கும், 36 காவலர் குடும்ப அட்டைதாரர்களுக்கும், 43 ஆயிரத்து 400 கிலோ வீதம் பச்சரிசியும், சர்க்கரையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குன்னம் தாலுகாவில் 44 ஆயிரத்து 333 அரிசி விருப்ப குடும்ப அட்டைதாரர் களுக்கும், 16 காவலர் குடும்ப அட்டைதாரரர்களுக்கும், 44 ஆயிரத்து 349 கிலோ பச்சரிசியும், சர்க்கரையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஆலத்தூர் தாலுக்காவில் 30 ஆயி ரத்து 172 அரிசி விருப்ப குடும்ப அட்டைதாரர்களுக்கும், 20 காவலர் குடும்ப அட்டைதாரர்களுக் கும், 30 ஆயிரத்து 192 கிலோ வீதம் பச்சரிசியும், சர்க்கரையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மொத்தத்தில் இம் மாவட்டத்திற்கு 1 லட்சத்து 60 ஆயிரத்து 818 கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரையுடன், தலா ரூ.100 வீதம் ரூ.1 கோடியே 60 லட்சத்து 81 ஆயிரத்து 800 மதிப்புடன் கூடிய பொங்கல் பரிசுப் பொருட்கள் மற்றும் 1 லட்சத்து 56 ஆயிரத்து 987 ஆண்களுக்கு வேஷ் டியும், 1 லட்சத்து59 ஆயி ரத்து 2 பெண்களுக்கு  சேலையும் ரேஷன் கடை கள் மூலமாக விநியோகம் செய்யப்பட உள்ளன.இந்த பரிசுத் தொகுப்பை இம் மாதம் 13ம் தேதி வரை வார்டு வாரியாகப் பெற்றுக்கொள்ளலாம் என் றார்.


நன்றி-தினகரன்.