Tuesday 9 December 2014


அயோத்தி, :அயோத்தி பிரச்சினையில் தொடக்க காலத்தில் வழக்கு தொடுத்தவர் முகமது ஹஷிம் அன்சாரி. இவர் அயோத்தி பிரச்சினையை தொடர விரும்பவில்லை என சமீபத்தில் கூறினார். இந்த நிலையில் அயோத்தி பிரச்சினை தொடர்பாக முகமது ஹஷிம் அன்சாரியை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கடந்த 6&ந்தேதி தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இது தொடர்பாக முகமது ஹஷிம் அன்சாரியின் மகன் இக்பால் அன்சாரி கூறுகையில், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், சனிக்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்பாவின் நலம் விசாரித்த அவர், பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என்ற அப்பாவின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பதாக உறுதி அளித்தார் என்றார்.

மேலும், அயோத்தி பிரச்சினையில் அமைதியான தீர்வு காணப்படவேண்டும் என்ற அப்பாவின் விருப்பத்தை பிரதமர் மோடியிடம் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். இந்தப் பிரச்சினையில் அப்பாவை சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம் சிங் யாதவும் தொடர்பு கொண்டு பேசினார். அவர் வழக்கை வாபஸ் பெற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார் என இக்பால் அன்சாரி தெரிவித்தார்.

-தினத்தந்தி.

0 comments:

Post a Comment