Sunday 9 November 2014


விசுவக்குடி அணைக்கட்டுத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை மார்ச் மாதத்திறகுள் துரிதமாகவும், துல்லியமாகவும் முடிக்க வேண்டும் எனஆய்வு செய்த பொதுப்பணித் துறையின் மண்டல கண்காணிப்புப் பொறியா ளர் உத்தரவிட்டார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவில் கல்லாற்றின் குறுக்கே பொதுப்பணித்துறை சார் பாக, செம்மலை, பச்சை மலை ஆகியமலைகளை இணைத்து விசுவக்குடி அணைக்கட்டுத் திட்டம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த அணைக் கட்டு மூலம் கல்லாற்றுநீர் வீணாகாமல் தடுத்து விவசா யம் மற்றும் குடிநீர்த் தேவைகளுக்குப் பயன்படுத்தும் வகையில் முதல்கட்ட பணி யாக ரூ.19 கோடியில் 665 மீட்டர் நீளமுள்ள கரையுடன்கூடிய கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. இந்த அணைக்கட்டு மூலம் 30.67மில்லியன் கனஅடி தண்ணீரை 10 மீட்டர் உயரத்துக்கு சேமிக்க இயலும். இதற்காக அணையின் நீர்ப்போக்கியை அமைத்திட 11 மீட்டர் உயரத்திற்கு கான் கிரீட் கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ளது. நீர்போக்கி யின் இருபுறமும் மலையுடன் இணைக்கும் வகையில் 12 மீட்டர் உயர கரைகள் அமைத்து, மண்அரிப்பு ஏற்படாதபடி கருங்கல் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது.
அணைக்கட்டு அமைக் கும் பணிக்காக 2ம் கட்ட மாக மறுமதிப்பீட்டின்படி ரூ.14.07 கோடி நிதிகேட்டு அரசுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகப் பரிந்துரை செய் யப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டுமூலம் நேரடியாக 859 ஏக்கர் புன்செய்நிலம் பாசன வசதி பெறும். மதகுகளின் மூலம் வெங்கலம் பெரியஏரிக்கு கீழுள்ள சுமார் 421.41 ஏக்கர் ஆயக்கட்டிற்கான நீராதாரம் உறுதி செய்யப்படும். நிலத்தடிநீர் செறிவூட்டப்படுவதால் கிணற்றுப்பாசனம் மூலம் கூடுதலாக 169 ஏக்கர் புன்செய் நிலங்களும் பாசன வசதி பெறும். அதோடு மறைமுகமாக 2ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனவசதி பெறும். இந்த அணையை அன்னமங்கலம் வழியாக நேரில் வந்து பார்ப்பதற்காக விசுவக்குடியிலிருந்து 1.20 கி.மீட்டர் நீளத்திற்கு 10.5 மீட்டர் அகலமுள்ள தார்சாலை அமைக்கப்படுகிறது. அணையின் திட்டப்பணிகளின் படி தேக்கப்படவுள்ள 30.67மில்லியன் கனஅடி நீருடன், உட்பகுதியில் ஆழப்படுத்துவதன்மூலம் மேலும் 10மில்லியன் கனஅடி நீரை சேமிக்கும் வகையிலான மாநில திட்டக்குழுவிற்கு மாவட்ட நிர்வாகத்தினால் கருத்துரு மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுப்பணித்துறையின் திருச்சிமண்டல (நடுக்காவிரி வடிநிலக் கோட்டம்) கண்காணிப்புப் பொறியாளர் ஜேம்ஸ்லூர்துசாமி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அணைக்கட்டு அமைக்கும் பணிகளில் ஷட்டர் மூலம் நீர் வெளியேற்றும் பகுதியில் நீரின் வேகத்தை கட்டுப்படுத்த பெரியஅளவிலான கற்கள் பொக்லைன் இயந்திரத்தால் நிரப்பும் பணிகள் நடைபெறுவதையும், ஏரிக்காக 12 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கரையின் மேல் நடந்து சென்று மலைப்பகுதியை இயற்கை எழிலோடு காண்பதற்கும், நீர்வழிந்தோடுவதற்காகவும் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டார். பிறகு அவர் பொறியாளர்களிடம் தெரிவிக்கையில், பணிகள் அனைத்தும் வருகிற மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் விதத்தில் துரிதமாகவம், துல்லியமாகவும் நடத்தி முடிக்க வேண்டு மென உத்தரவிட்டார். அணையின் முன்புறத்தில் பிரமாண்ட பூங்காவும், அணையின் கரையில் பொதுப்பணித்துறை ஆய்வுமாளிகை அமைக்கவும், அணையை பார்க்க பொதுமக்கள் வருவதற்காக தொண்டமாந்துறை வழியாக புதிதாக ஒரு சாலைஅமைக்கவும் பொதுப்பணித்துறை ஏற்பாடு செய்து வருகிறது.
இந்தஆய்வின்போது, பொதுப்பணித்துறையின் மருதையாறு வடிநிலக் கோட்டத் தின் (அரியலூர்) செயற்பொறியாளர் தெய்வீ கன், மருதையாறு உப வடிநிலக்கோட் டத்தின்(பெரம்பலூர்) உதவி செயற்பொறி யாளர் வேல்முருகன், உதவிப்பொறியாளர் கார்த் திக், இளநிலைப் பொறியா ளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்
.

-தினகரன்.

0 comments:

Post a Comment