Friday 21 November 2014


தாஜ்மகால்  மொகலாய மன்னர் ஷாஜகான், தனது மனைவி மும்தாஜின் நினைவாக 1654-ம் ஆண்டு கட்டியதாகும்.  தாஜ்மகாலை பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.தற்போது தாஜ்மகாலின் பராமரிப்பு மற்றும் கட்டுப்பாடு மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.

இதுபற்றி உத்தரபிரதேச மாநிலத்தின் சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி அசம்கான் கூறுகையில், தாஜ்மகாலை மத்திய அரசு தொடர்ந்து தனது கட்டுப்பாட்டின் வைத்திருப்பது கண்டனத்துக்குரியது. உலகின் மிகச்சிறந்த சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக தாஜ்மகால் உள்ளது.  இதில் கிடைக்கும் வருவாய் ஏழை முஸ்லீம்களை நோக்கி செல்ல வேண்டும்.

இதை முஸ்லிம்களின் கல்விக்காக செலவிட வேண்டும். எனவே, தாஜ்மகாலை சன்னி முஸ்லிம்களின் மத்திய வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும். அப்படி செய்தால் அவர்களே ஒரு நிஜாமை நியமித்து கிடைக்கும் வருவாயை முஸ்லிம்களின் கல்விக்காக பயன்படுத்திக்கொள்ள இயலும்” என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார். அசம்கானின் கருத்தால் சர்ச்சை உருவாகி இருக்கிறது.

பாரதீய ஜனதா தலைவர் ஷானவஸ் ஹுசைன் ஆசம் கானின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.” இந்திய தொல்லியல் ஆய்வுதுறையால் பராமரிக்கப்பட்டு வரும்  தாஜ்மகால் புகழ்பெற்ற பாரம்பரியமான ஒன்று என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற கருத்துக்களை வெளியிட்டு குழப்பத்தை விளைவிக்க ஆசம் கான் முயற்சி மேற்கொள்கிறார். தாஜ்மகாலை அரசியல் ஆக்க கூடாது” என்று தெரிவித்தார்.

டெல்லி வக்பு வாரிய தலைவர் சவுத்ரி மைதீன் அகமதுவும் ,ஆசம் கான் கருத்தை நிராகரித்துள்ளார். ”இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையில் சிறந்த பரமரிப்பை மேற்கொள்ள முடியும். இது போன்ற கோரிக்கைகளை வைப்பது சரியானது அல்ல”என்றார்.

-தந்தி.

0 comments:

Post a Comment