Friday 5 September 2014


வ.களத்தூர் அரசு மேல் நிலை பள்ளியில் நேற்று மாலை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அதே பள்ளியில் படித்த திரு ரஹ்மான் ஆசிரியரின் மகள் சபியா பீவிக்கு நினைவு விழா மேடை திறக்கபட்டது ,அந்த மாணவி  ஒரு வருடங்களுக்கு முன் சாலை விபத்தில் இறந்து விட்டது அனைவருக்கும் தெரியும்.,

அரசு பள்ளியில் நினைவு மேடை வைக்கும் அளவுக்கு அந்த மாணவி  அப்படி என்ன சாதனை செய்தார் என்ற கேள்வி அனைவருக்கும் தோன்றலாம் ,
 அவரைப் பற்றி பள்ளியில் கேட்டால் முதல் மதிப்பெண் வாங்குபவர்,அமைதியான பெண்,பேச்சு போட்டியில் நன்றாக பேசுபவர் இப்படியெல்லாம் கூறுகிறார்கள்.,

இப்படி பட்ட குணங்களில் இருப்பது நமக்கு ஒன்றும் ஆச்சிரியத்தை வரவைக்க வில்லையே... சாதனையாகவும் தெரியவில்லையே, நன்றாக படிக்கும் மாணவி  என்ற எண்ணம் தோன்றும் அவ்வளவுதான் ,

இதுபோன்று கடந்த சிலவருடங்களாக இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் இறந்துள்ளது அனைவரும் அறிந்தது. அப்படி இருக்க இந்த பெண்ணுக்கு மட்டும் நினைவு மேடை வைப்பது ஏன் என்று தெரியவில்லை? இதை பற்றி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரும் அப்பள்ளி தலைமை ஆசிரியரும் சிந்திக்காதது ஏன் என்று புரியவில்லை ? 


இந்த நினைவு மண்டப கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது இது தொடர்பாக வ.களத்தூர் தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டபோது கல்வெட்டில் மட்டுமே மாணவியின் பெயர் பதிக்கப்படும் எனக்கூறினார். மதரீதியாக பதற்றமான வ.களத்தூரில் அரசு பள்ளியில் மத ரீதியான செயல்கள் நடைபெறாது எனவும் உறுதி அளித்த நிலையில், இஸ்லாமிய சின்னம் இல்லாமல் அமைக்கப்பட்ட மசூதி போல் தோற்றமளிக்கும் விதத்தில் மண்டபம்  கட்டப்பட்டிருக்கிறது. 

இந்த சிறப்பு(..?) மிகுந்த நினைவு மண்டபத்தை இஸ்லாமியரான பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவரை வைத்து திறந்திருப்பதும் , மண்டபம் அமைக்க அரசு பணத்தை செலவு செய்ய மாவட்ட ஆட்சியர் அனுமதித்திருப்பதும் உள்நோக்கம் கொண்டதோ எனத்தோன்றுகிறது.

வருங்கலங்களின் இதை போன்று வருத்திற்குரிய நிகழ்வு நடைபெற்றால் நினைவு மேடை அமைக்க படுமா ? அப்படியே அமைத்து வந்தால் இப்பள்ளியில் வகுப்பறையை விட நினைவு அறை அதிகமாகி விடும் அப்பொழுது அப்பள்ளி இடுகாடு(சுடுகாடு) போன்று கட்சியளிக்கவும் நேரலாம்...

சபியா பீவி சாலை சரியில்லாத காரணத்தால் தான் மிதி வண்டியில் செல்லும்போது பேருந்தில் தவறி விழுந்து இறந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்,அப்படி இருக்கும் நிலையில் அப்பள்ளி முன் மிக மோசமான நிலையில் மேடு பள்ளமாக இருக்கும் சாலையை சரி செய்து தனது மகளுக்கு ஏற்பட்ட நிலை இனி யார்க்கும் ஏற்பட கூடாது என்று எண்ணி அச்சாலையை முறையாக சரிசெய்திருந்தால் திரு ரஹ்மான்(சபியா பீவியின் தந்தை ) அவர்கள் அப்பள்ளிக்கு நல்ல ஆசிரியராக மட்டும் அல்ல சபியா பீவிக்கு நல்ல தந்தையாகவும் திகழ்ந்திருப்பர், அனால் அவர் அப்படி செய்யவில்லையே....


இதே போன்று சிலவருடங்களுக்கு முன் அதே பள்ளியில் சிறப்பான ஆசிரியரில் ஒருவராக பணியாற்றிய மதிப்புக்குரிய திருமதி மீனாம்பாள் அவர்கள் சாலை விபத்தில் இறந்தது அனைவருக்கும் தெரிந்ததே ஆனால் அவருக்கு யாரும் நினைவு மேடை கட்டவும் , நினைவு கல் வைக்கவும் முன் வரவில்லை, ஆதலால் இது மத ரீதியான தொடர்பாக  இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது

இப்படி மத ரீதியாக பிளவுபட்டுக்கிடக்கும் வ.களத்தூரில் , அரசு பள்ளியில் தனது பெயரையும் தனது மகளின் பெயரையும் எழுதி மசூதிபோல் நினைவு விழா மேடை அமைப்பது தவறான முன்னுதாரணம் ,இதை ஏன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சிந்திக்காமல் செயல்பட்டாரா அல்லது உள்நோக்கத்துடன் செயல்பட்டாரா   என்பது தெரியவில்லை?


 செய்தி மற்றும் பட உதவி- vannarampoondi kalathur

0 comments:

Post a Comment