Wednesday 13 August 2014



பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) வி.களத்தூர் உள்பட 121 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது என்று மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:–கிராமசபை கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) சுதந்திர தினத்தை யொட்டி 
வி.களத்தூர் உள்பட 121 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் ஊராட்சி தலைவர்களால் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் ஏற்கெனவே கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தெரிவிக்க வேண்டும். அனைத்து ஊராட்சி தலைவர்களும் தாங்கள் செய்த செயல்பாடுகளை கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும்.

அரசு அலுவலர்கள் கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிய வேண்டும். அரசு நலத்திட்டங்களை வழங்க வேண்டும். அரசு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை மக்களிடையே கேட்டறிய வேண்டும்.பங்கேற்க வேண்டும்

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் தாங்கள் வாக்காளர்களாக சார்ந்துள்ள கிராம ஊராட்சிகளில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கிராமசபை கூட்டம் சிறப் பாக நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் களால்(கிராம ஊராட்சிகள்) பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வட்டாரம் வாரியாக மண்டல அலுவலர்கள் கிராம சபை கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே நாளை நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளும், பொதுமக்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.சமூக தணிக்கை

பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாட்டிலும், ரேஷன் கடைகளின் செயல்பாட்டிலும் வெளிப்படையான முறையை கொண்டு வரும் வகையில் அனைத்து ரேஷன் கடைகளின் பதிவேடுகளை சமூக தணிக்கைக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகளில் செயல்படும் அனைத்து ரேஷன் கடைகளின் கணக்கு கள் நாளை(புதன்கிழமை) சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் சமூக தணிக்கைக்காக பொதுமக்கள் முன்பு வைக்கப்படும். எனவே பொது மக்கள் கிராம சபை கூட்டத்தில் ரேஷன் கடைகளின் சமூக தணிக்கையில் தவறாது கலந்து கொள்ள வேண் டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


-தினகரன்.

0 comments:

Post a Comment