Wednesday 6 August 2014


உயர் நீதிமன்ற மதுரை கிளையில் திங்கள்கிழமை குழந்தையுடன் ஆஜரான துர்கேஸ்வரி.
இளம்பெண் துர்கேஸ்வரியை திருமணம் செய்வதற்கு அவர் இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும். அவரது தாயார் பெயரிலுள்ள சொத்தை தன் பெயருக்கு எழுதித்தர வேண்டும் என திருச்சி முன்னாள் துணை மேயர் ஆசிக் மீரா நிபந்தனை விதித்தார்.
திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயர் ஆசிக் மீரா (30). இவர் மீது சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த துர்கேஸ்வரி (29) என்பவர், தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறி ஆசிக் மீரா பலாத்காரம் செய்ததாகவும், இதனால் பெண் குழந்தை பிறந்ததாகவும், தற்போது திருமணம் செய்ய மறுத்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும் திருச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ஆசிக்மீரா, அவரது மாமியார் மைமூன்சரிபா (56), பாலக்கரையைச் சேர்ந்த சந்திரபாபு (54), சங்கிலி யாண்டபுரத்தைச் சேர்ந்த சரவணன் (35) ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இவர்கள் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை உயர் நீதிமன்ற சமரசத் தீர்வு மையத் துக்கு அனுப்பி நீதிபதி கே.கல்யாணசுந்தரம் ஏற்கெ னவே உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து மதுரை உயர் நீதிமன்ற சமரசத் தீர்வு மையத்தில் சமரச தீர்வாளர் எஸ்.மோகன்தாஸ் முன் ஆசிக் மீரா மற்றும் 3 மாத கைக்குழந்தையுடன் துர்கேஸ்வரியும் திங்கள்கிழமை ஆஜராகினர்.
அவர் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து இருவரையும் ஆக. 21-ல் மீண்டும் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.
இது குறித்து துர்கேஸ்வரியின் வழக்கறிஞர்கள் பானுமதி, பழனி யாண்டி ஆகியோர் கூறியது:
துர்கேஸ்வரி இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும், இஸ்லாம் மதத்துக்கு மாறுவதற்கு என சில சம்பிரதாயங்கள் உள் ளன.
அவற்றைக் கடுமையாகப் பின்பற்றி துர்கேஸ்வரி இஸ்லாம் மதத்துக்கு மாறினால் அவரை ஏற்பதாகவும், துர்கேஸ்வரி தாயாரின் பெயரிலுள்ள சொத்தை தன் பெயருக்கு மாற்றித்தர வேண்டும் என்றும் ஆசிக்மீரா நிபந்தனை விதித்தார். துர்கேஸ்வரி இஸ்லாம் மதத்துக்கு மாறத் தயாராக உள்ளார்.
தாயாரின் பெயரிலுள்ள சொத்தை பொருத்தவரை ஆசிக் மீராவை பாதுகாவலராக பதிவு செய்து குழந்தையின் பெயருக்கு மாற்றித்தருவதாகக் கூறினோம். 

அதை ஆசிக் மீரா ஏற்க வில்லை. தன் பெயருக்கு மாற்றித் தர வேண்டும் என்று ஆசிக் மீரா கூறினார். துர்கேஸ்வரிக்கு தினமும் கொலை மிரட்டல்கள் வருகின்றன. அவர் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார் என்றனர்.
சமரச தீர்வாளர் மோகன்தாஸ் கூறும்போது, திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இருதரப்பு இடையே உடன்பாடு ஏற்படவில்லை.
ஆக. 21-ம் தேதி மீண்டும் இருதரப்பினரும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் திருச்சியில் இரு தரப்பினர் இடையே சமரசம் ஏற்படுவதற்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது என்றார்.

பங்களிப்பு -தி இந்து 

1 comment:

  1. if she becomes a muslim she will come under sharia law.whats the use.he can divorce her over phone.

    ReplyDelete