Monday 7 July 2014


புதுடில்லி: 'ஷரியத் நீதிமன்றம் சட்டப்படி அனுமதிக்கப்பட்டது அல்ல; அதற்கு சட்ட ரீதியான அந்தஸ்து கிடையாது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நீதித்துறைக்கு இணையான, ஒரு அமைப்பு முறையை, முஸ்லிம்களின் ஷரியத் கோர்ட்டுகள் பின்பற்றுகின்றன. அதனால், ஷரியத் கோர்ட்டுகள் அரசியல் சட்டப்படி செல்லத்தக்கதா என, கேள்வி எழுப்பி, விஷ்வா லோச்சன் மேதம் என்ற வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில், மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.அந்த மனுவில், 'முஸ்லிம் அமைப்புகளால் நியமிக்கப்படும், 'முப்தி'கள் மற்றும் 'குவாசி'கள் பிறப்பிக்கும் உத்தரவுகளால், முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன; பறிக்கப்படுகின்றன. இது, தடுக்கப்பட வேண்டும்' என, தெரிவித்திருந்தார்.
விசாரணைஇந்த பொதுநல மனு, நீதிபதிகள் சி.கே.பிரசாத் தலைமையிலான, உச்ச நீதிமன்ற, 'பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, முஸ்லிம்களின் தனிச்சட்டமான, ஷரியத் சட்ட விதிகளை பாதுகாக்கும் பொறுப்பில் ஈடுபட்டுள்ள, அகில இந்திய தனிச்சட்ட வாரியம் சார்பில், ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது:ஷரியத் நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள் (பாத்வா) மக்களை கட்டுப்படுத்தாது. அது, முஸ்லிம் மத தலைவர்களின் கருத்துக்களே. அந்த கருத்துக்களை அமல்படுத்தும் அதிகாரம் எதுவும், அவருக்கு கிடையாது. ஒரு நபரின் விருப்பத்திற்கு மாறாக, தன் உத்தரவை, முஸ்லிம் மத தலைவர் அமல்படுத்த விரும்பினால், அதை எதிர்த்து, சம்பந்தப்பட்ட நபர் நீதிமன்றத்திற்கு செல்லலாம்.இவ்வாறு, அந்த வழக்கறிஞர் கூறினார்.
ஏற்றுக்கொள்ள முடியாதுஇந்நிலையில், இந்த வழக்கில், தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:தங்கள் முன் ஆஜராகாத அல்லது இல்லாத ஒரு நபருக்கு எதிராக, ஷரியத் நீதிமன்றங்கள், 'பாத்வா' என்ற உத்தரவுகள் பிறப்பிப்பது சரியானதல்ல; அதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஷரியத் நீதிமன்றங்கள் சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்டவை அல்ல. அவற்றுக்கு சட்ட ரீதியான அந்தஸ்து எதுவும் கிடையாது.இந்த ஷரியத் நீதிமன்றங்கள், சில நேரங்களில் பிறப்பிக்கும் உத்தரவுகள், அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவும், அப்பாவிகளை தண்டிப்பதாகவும் உள்ளது. அது, சரியல்ல. இஸ்லாம் உட்பட, எந்த மதமும், அப்பாவி நபர்களை தண்டிக்க அனுமதி வழங்குவதில்லை.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்v.kalathur seithi .

-தினமலர்.

0 comments:

Post a Comment