Tuesday 22 July 2014


 அந்த மாணவி காவல்துறை குடும்பத்தை சேர்ந்தவர். பெரம்பலூரில் தனியார் கல்லூரி ஒன்றில் BA பயின்றுவந்தவர். அவரின் தந்தை கிருஷ்ணமூர்த்தி அரும்பாவூர் காவல்நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி ஒய்வு பெற்றவர். சொந்தஊர் மங்களமேடு அருகிலுள்ள ஒரு கிராமம். அவரின் குடும்பத்தில் பலர் ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர்.

கல்வி கற்க பெரம்பலூருக்கு சென்றவர் மங்களமேடு காவல்நிலைய கட்டுப்பாட்டில் வரும் வாலிகண்டபுரத்தை சேர்ந்த ஒரு இஸ்லாமிய மதத்தைச்சேர்ந்த இளைஞர் காதலிப்பதாக கூறி, திருமண ஆசை காட்டி மதம் மாற்றியதோடு அல்லாமல், திருப்பூர் பகுதிக்கு கடத்திசென்றுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னாள் காவல்துறை அதிகாரியான கிருஷ்ண மூர்த்தி மங்களமேடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்து ஒரு மாதம் ஆகியும் எந்த தகவலும் இல்லை. தனது பெண்ணை கடத்திச்சென்ற இஸ்லாமிய இளைஞர் தன்மைகளை என்ன செய்தாரோ என்று கலங்கும் அவர், தன்மகள்  மதம்மாறி திருமணம் செய்துகொண்டாலும் பரவாயில்லை , எங்காவது விபச்சாரத்திற்கு விற்காமல் போதும் என்று கூறும் மனநிலைக்கு வந்திருக்கிறார்.

சமீபத்தில் சென்னையில் S I  ஒருவரின் மகள் இஸ்லாமிய இளைஞரை மதம்மாறி மணந்துகொண்டு, தன் காவல்துறை தந்தையால் அச்சுறுத்தல் இருக்கிறது என்று கூறி காவல்துறை உயரதிகாரிகளிடம் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தது நமக்கு நினைவிருக்கும்.

'லவ் ஜிகாத்' என்பது பல பரிமானங்களைக்கொண்டது , இது சாதாரண காதல் விஷயம் மட்டும் அல்ல , நம் இந்து பண்பாடு மற்றும்  கலாச்சாரத்தின் மீதான தாக்குதலாகும். நம் குடும்ப அமைப்பை சிதைக்ககூடிய ஒரு விஷ விருட்சமாகும்.வளரும் இளம் பருவத்தினரிடையே பண்பாட்டு கல்வியை போதிப்பதோடு மட்டுமலாமல், இந்து மதத்தை பற்றிய சரியான புரிதல்களை
ஏற்படுத்துவது மட்டுமே இதனை தடுக்க வழி.


0 comments:

Post a Comment